கடல்வழி வர்த்தக போக்குவரத்து வரலாறு
முகவுரை
# செங்கடலின் (Red Sea) வர்த்தக போக்குவரத்து ஆய்வு கி.மு 3000-2500 இல் பண்டைய எகிப்தியர்களால் (Egyptians) தொடங்கியது.
# இந்தியப் பெருங்கடலின் (Indian Ocean) வர்த்தக போக்குவரத்து ஆய்வு கி.மு 3000-2500 இல் ஆஸ்ட்ரோனேசியர்களால் (Austronesians) தொடங்கியது.
# 1 ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியர்கள் (Ethiopia) எகிப்தியர்களுடன் கூட்டணி வைத்து செங்கடலின் வர்த்தக மையமாக விளங்கினார்கள்.
# 1 ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களும் கிரேக்கர்களும் (Rome - Greece) தமிழ் பேரரசுகளுடன் கூட்டணி வைத்து ஆசியப் பெருங்கடலின் வர்த்தக மையமாக விளங்கினார்கள்.
அரபு வணிகர்கள்
# 7 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை அரபு வணிகர்கள் (Arab Traders) செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் வர்த்தக அதிகார மையமாக விளங்கினார்கள்.
# அரபு வணிகர்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆசியப் பொருட்களை வாங்கி, செங்கடல் வழியாக எகிப்து, மெசபடோமியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு வணிகம் செய்தனர்.
# அங்கிருந்து அரபு வணிகர்கள் 3 கண்டங்களுக்கு (Asia, Africa, and Europe) இடையே அமைந்துள்ள தென்மேற்கு ஆசியாவில் (Southwest Asia) உள்ள லெவன்ட் (Levant) மற்றும் இத்தாலி (Italy) வழியாக ஐரோப்பாவிற்கு ஆசியப் பொருட்களை வர்த்தகம் செய்தனர்.
# செங்கடல் - பாரசீக வளைகுடா வழியாக கான்ஸ்டண்டினோபில் (Constantinople), அங்கிருந்து மத்தியதரை கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்கு அரபு வணிகர்கள் ஆசிய பொருட்களை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றனர்.
# கான்ஸ்டண்டினோபில் "ஐரோப்பிய வர்த்தகத்தின் நுழைவாயில்" என்றும் அழைக்கப்படுகிறது.
# ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நிலம் மற்றும் கடல் வழி வலையமைப்பு (Land & Sea Route Networks) மூலம் வர்த்தகம் நடைபெற்றது.
// Trade Route = The Indian Ocean to Red Sea-Persian Gulf to Constantinople to the Mediterranean Sea to Italy to Europe //
ஒட்டோமான் பேரரசும் ஐரோப்பியர்களின் தேடலும்
# 1453 இல் ஒட்டோமான் (Ottoman) பேரரசு ரோமானிய பேரரசின் தலைநகரான கான்ஸ்டண்டினோபில் (Constantinople) நகரை கைப்பற்றினர்.
# இதையொட்டி, கான்ஸ்டண்டினோபில் நகரை இணைக்கும் வணிக வழிகள் துருக்கியர்களின் (Ottoman Turks) கட்டுப்பாட்டிற்குள் வந்தன.
# 16 ஆம் நூற்றாண்டில் ஒட்டோமான் பேரரசு செங்கடல் - பாரசீக வளைகுடா கடல் வழி மீது மேலாதிக்ககம் செலுத்தி அரேபியர்களின் வணிகத்தை ஒடுக்கினர்.
# செங்கடல் - பாரசீக வளைகுடா கடல் வழியாக செல்லும் பொருட்களுக்கு ஒட்டோமான் பேரரசு அதிக வரி விதித்ததன் காரணமாக ஐரோப்பியர்களுக்கு ஆசிய வர்த்தகம் லாபமற்றதாக மாறியது.
# துருக்கியர்களின் எழுச்சியால் அரபு வணிகர்களும் ஐரோப்பிய வணிகர்களும் பாதிப்படைந்தனர்.
# மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இஞ்சி, சோம்பு, கிராம்பு, மஞ்சள், தோல், தங்கம், வெள்ளி, முத்து போன்ற ஆசியப் பொருட்களை வாங்குவது ஐரோப்பியர்களுக்கு கடினமாக இருந்தது.
# ஒட்டோமான் பேரரசுக்கு உட்பட்ட கடல் வழி வணிகப் பாதைக்கு மாற்றாக வர்த்தக நோக்கங்களுக்காக ஆசியாவிற்கு (குறிப்பாக இந்தியா மற்றும் சீனா) ஒரு முழுமையான புதிய கடல் வழியைக் கண்டறிய (It is called as Age of Discovery) ஐரோப்பியப் பேரரசுகள் மாலுமிகளை ஊக்குவித்தன.
# இதற்கிடையே, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் வர்த்தகர்கள் இத்தாலிய வர்த்தகர்களின் ஏகபோகத்தை உடைக்க முயன்றன.
# மேலும் திசைகாட்டி (Compass), விண்வெளி கருவி (Astrolabe) மற்றும் துப்பாக்கி (Firearms) கண்டுபிடிப்பு ஐரோப்பியர்களின் தேடல் முயற்சிக்கு உத்வேகத்தை அளித்தது.
பிரபல ஆய்வாளர்கள்
# ப்ளினி (Pliny, 24-77), டோலமி (Ptolemy, 100-170), மார்கோ போலோ (Marco Polo, 1254-1324) மற்றும் இபுபுடா (Ibn Battuta, 1304-1369) ஆகியோர் பல்வேறு வர்த்தக வழிகளை ஆராய்ந்த மிகப் பிரபலமான பண்டைய ஆய்வாளர்கள் ஆவர்.
# 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus, 1451-1506), வாஸ்கோடகாமா (Vasco Da Gama, 1469-1524), அல்வைஸ் கடமோஸ்டோ (Alvise Cadamosto, 1432-1488) ஆகியோர் பருவக்காற்றின் (Monsoon Winds) அடிப்படையில் புதிய வர்த்தக போக்குவரத்து வழிகளை தேடினர்.
அல்வைஸ் கடமோஸ்டோ
# இத்தாலியர் அல்வைஸ் கடமோஸ்டோவின் பயணத்திற்கு போர்த்துகீசிய அரசர் ஹென்றி (Prince Henry, 1394-1460) உதவினார்.
# 1456 இல் அல்வைஸ் கடமோஸ்டோ ஆய்வாளர் அன்டோனியோட்டோ உசோடிமரே (Antoniotto Usodimare) துணையுடன் கேப் வெர்டே (Cape Verde) தீவை கண்டுபிடித்தார் மற்றும் கேனரி (Canary) தீவு, செனகல்-காம்பியா-கெபா (Senegal-Gambia-Geba) பகுதியை விவரித்தார்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
# இத்தாலியர் கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் பயணத்திற்கு ஸ்பானிய பேரரசர் இரண்டாம் பெர்டினாண்ட் (King Ferdinand II, 1452-1516) உதவினார்.
# 1492 இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியா என்று நினைத்து அமெரிக்காவை (America) கண்டுபிடித்தார்.
வாஸ்கோடகாமா
# போர்த்துகீசியர் வாஸ்கோடகாமாவின் பயணத்திற்கு போர்த்துகீசிய பேரரசர் முதலாம் மானுவல் (King Manuel I, 1469-1521) உதவினார்.
# 1498 இல் வாஸ்கோடகாமா வர்த்தக நோக்கத்திற்காக இந்திய கடல் வழியைக் கண்டுபிடித்தார்.
முடிவுரை
# கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் கடல் வழி பயணங்கள் காலனித்துவ பேரரசிற்கும் நவீன வல்லரசு வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது.
# வாஸ்கோடகாமாவின் கடல் வழி பயணங்கள் காலனித்துவ இந்தியாவிற்கும் நவீன இந்திய மேம்பாட்டிற்கும் அடித்தளமிட்டது.
Christopher Columbus
Alvise Cadamosto
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.