கடிகாரக் காதல்
பொருளடக்கம்
- முகவுரை
- இயக்கங்கள்
- செயல்பாடுகள்
- கண்ணாடிகள்
- Styles and Straps
- முடிவுரை
- துணுக்கு செய்திகள்
- விவரணைகள்
முகவுரை
நதி போல ஓடும் நேரத்திற்கு ஒரு திசை உள்ளது, அது எப்போதும் முன்னேறிய செல்கிறது. எதற்கும் கிட்டாத ஒரு சிறப்புரிமை நேரத்திற்கு உள்ளது, அது இப்போது மட்டுமே உண்மையானது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தை நமக்கு கணக்கிட்டு காட்டுவது கடிகாரம் என்ற சாதனம்.
கடிகாரங்களின் வெவ்வேறு இயக்கங்கள் என்ன? கடிகாரங்களின் வெவ்வேறு செயல்பாடுகள் என்ன? நீங்கள் கடிகாரங்களை பற்றி அதிகம் அறியாதிருந்தால், இதுபோன்ற கேள்விகளை நீங்களே கேட்டிருந்தால், இந்த சுருக்கமான கட்டுரை உங்களுக்காக பயன்தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இயக்கங்கள்
கடிகாரத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அதன் இயக்கம் ஆகும். ஒரு கடிகாரத்தின் இயக்கமானது கணினியின் மையச் செயற்பகுதி (CPU) போன்றது. அவ்வகையில் ஒரு கடிகாரத்தை Mechanical, Quartz மற்றும் Solar ஆகிய மூன்று வகையான இயக்கங்கள் இயக்கக்கூடும். Power Reserve உடன் இயங்கக்கூடிய Mechanical கடிகாரம் Manual மற்றும் Automatic என்று இரண்டு வகைப்படும்.
# Manual கடிகாரம்
# Automatic கடிகாரம்
# Quartz கடிகாரம்
# Solar கடிகாரம்
Manual கடிகாரங்களுக்கு மின்கலம் (Battery) தேவையில்லை ஏனெனில் அவை செயல்பட அவ்வப்போது கை முறுக்கு (Manual Winding) மட்டுமே தேவைப்படுகிறது. Manual கடிகாரம் தன் பணியை ஆற்றுவதற்கு ஒன்றாக வேலை செய்யும் சிறிய கூறுகளின் சிக்கலான தொடர்களை கொண்டுள்ளன.
# Automatic கடிகாரம்
Automatic கடிகாரங்கள் உங்கள் மணிக்கட்டின் இயக்கத்தை படம்பிடித்து, பொறிமுறையை இயக்குவதற்கு பயன்படுத்துகின்றன. அதாவது கடிகார வகையில் தானே திருகும் பொறியமைப்புடைய கடிகாரம் Automatic கடிகாரம் எனப்படும். மின்கலம் தேவைப்படாத இந்த வகை கடிகாரங்களுக்கு மிக குறைந்த பராமரிப்பு தேவைப்படுகிறது.
# Quartz கடிகாரம்
Quartz கடிகாரங்கள் என்பது மின்கலத்தின் மின்னோட்டத்தில் இயங்கும் கடிகாரமாகும். ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும் மின்கலம் மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
# Solar கடிகாரம்
Solar கடிகாரங்களை இயக்குவதற்கு ஒளி பயன்படுத்தப்படுகிறது. ஒளியிலிருந்து வரும் ஆற்றல் மின்கலத்தில் சேமிக்கப்பட்டு கடிகாரத்தை இயக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றப்படுகிறது.
செயல்பாடுகள்
கடிகாரத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான ஒன்று அதன் செயல்பாடு ஆகும். ஒரு கடிகாரத்தின் செயல்பாடுகள் பல அம்சங்களை கொண்டிருப்பதாகும். இவ்வாறு ஒரு கடிகாரம் பொதுவாக நான்கு வகையான செயல்பாடுகளை கொண்டுள்ளது. அவை,
# Analogue கடிகாரம்
# Digital கடிகாரம்
# Chronograph கடிகாரம்
# Hybird கடிகாரம்
Analogue கடிகாரம்
மூன்று கை அசைவுகளுடன் (Three Hand Movements) கூடிய கடிகார முகப்பை Analogue கடிகாரம் கொண்டுள்ளது. இது வழக்கமாக கடிகார முகப்பில் ஐந்து நிமிட அதிகரிப்புகளில் நேரத்தை சுட்டுகிறது. சில கடிகாரங்களில் தேதி மற்றும் நாள் குறியீடு இருக்கும்.
Digital கடிகாரம்
Digital கடிகாரம் நேரத்தை எண் இலக்கங்களில் குறிப்பிடுகின்றன. இவை நேரத்தை இயக்க மின்சுற்றை (Electronic Circuits) நம்பியிருக்கிறது. Digital கடிகார முகப்பில் Analogue கடிகாரம் போன்ற நகரும் பாகங்கள் இல்லை. மேலும் பொதுவாக Digital கடிகாரங்களில் Alarm மற்றும் GPS போன்ற அம்சங்கள் இருக்கும்.
Chronograph கடிகாரம்
துணை முகப்புடன் (Subdials) கூடிய கடிகார முகப்பை Chronograph கடிகாரம் கொண்டுள்ளது. கடிகாரத்தின் விளிம்பை சுற்றி பொறிக்கப்பட்ட துணை முகப்புகள் பெரும்பாலும் Stopwatch, Tachymeter, Moon Phase போன்றவற்றை கொண்டுள்ளன.
# Moon Phase = சந்திரனின் வெவ்வேறு கட்டங்களை காட்டுவது.
# Stopwatch = கழிந்த நேரத்தை துல்லியமாக அளவிடுவது.
# Tachymeter = கழிந்த நேரத்தை விகிதத்திற்கு மாற்றுவது.
Hybrid கடிகாரம்
Analogue மற்றும் Digital இணைப்பை ஒரு சேர Hybrid கடிகாரம் கொண்டுள்ளது. அதாவது Digital அம்சங்களையும் Analogue பாரம்பரியத்தையும் ஒரே இயக்கவியலுடன் இணைக்கின்றன.
கண்ணாடிகள்
நேரத்தை காட்டும் கடிகார முகப்பை பாதுகாக்க கடிகாரங்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு கடிகாரங்களுக்கு வெவ்வேறு கண்ணாடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடிகாரத்தின் தயாரிப்பை பொறுத்து கண்ணாடி தட்டையாகவோ (Flat) அல்லது குவிமாடமாகவோ (Domed) இருக்கும்.
மேலும் ஒவ்வொரு கண்ணாடி பொருட்களும் சற்று வித்தியாசமான பண்புகளை கொண்டுள்ளன. அவை குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. பொதுவாக நான்கு வகையான கடிகார கண்ணாடிகள் உள்ளன. அவை,
# Acrylic Crystal
# Mineral Crystal
# K1 Crystal
# Sapphire Crystal
Mineral Crystal |
Styles and Straps
Aviator, Military, Racing, Diving, Field, Sport, Dress, Fashion, Fitness போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறைய Styles உள்ளன. பொதுவாக வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக Dress, Diving, Fashion, Sport மற்றும் Fitness Styles உள்ளன.
Metal, Leather, Rubber, Silicone, Nylon, Canvas, NATO, Bund போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறைய Straps உள்ளன. Straps வழக்கமாக Integrated (Non-detachable) அல்லது Unintegrated (Detachable) ஆக இருக்கும். பொதுவாக வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக Metal Bracelets மற்றும் Leather Straps உள்ளன. Oyster Bracelet, Jubilee Bracelet, Mesh Bracelet, Engineer Bracelet என்று பல Metal Bracelets உள்ளன மற்றும் Casual Leather, Dress Leather, Rally Leather, Bund Leather என்று பல Leather Straps உள்ளன.
ஒரு கடிகாரத்தை தேர்வு செய்யும் போது அதன் இயக்கம், செயல்பாடு, கண்ணாடி, Styles, Straps மட்டுமல்லாமல் கடிகாரத்தின் முட்கள் (Hands), குறியீடுகள் (Indices), வடிவங்கள் (Shapes) மற்றும் முகப்பு நிறங்கள் (Dials) கூட பலதரப்பட்ட வடிவமைப்புகளில் கிடைக்கிறது.
கடிகார கடைக்கு சென்றோம், பணத்தை கொடுத்தோம், கடிகாரத்தை வாங்கி வந்தோம் என்றில்லாமல் நீங்கள் உங்களுக்கான ஆடையை தேர்வு செய்வது போல ஒரு கடிகாரத்தை தேர்வு செய்ய வேண்டும். அதாவது கடிகாரத்தின் தர அடையாளம் (Brand), செயல்பாடு (Function), கண்ணாடி (Glass Material), பட்டை (Straps), ஒளிர்வு (Luminosity) உட்பட பலவற்றை எண்ணி பார்த்து வாங்க பழகுங்கள்.
காலம் பொன்னானது, அந்த பொன்னான காலத்தை அளவிடுவது நேரம், அந்த நேரத்தை காட்டுவது கடிகாரம். அப்பேற்பட்ட கடிகாரத்தை நீங்கள் உன்னிப்பாக தேர்வு செய்ய வேண்டி இக்கட்டுரையை முடிக்கிறேன்.
துணுக்கு செய்திகள்
# 25 டிசம்பர் 1969 அன்று, Quartz Astron 35SQ என்ற பெயரில் உலகின் முதல் Quartz கடிகாரத்தை அறிமுகம் செய்து உலகளவில் கடிகார சந்தையை பெருமளவில் புரட்டி போட்டது ஜப்பானின் Seiko நிறுவனம்.
# கடிகார சந்தையை பொறுத்தமட்டில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பான் நாட்டு (Seiko > Orient & Citizen > Casio) தயாரிப்புக்கும் சுவிஸ் நாட்டு (நீண்ட பட்டியல்) தயாரிப்புக்கும் மறுவிற்பனை (Resale) மதிப்பு உண்டு.
# ரகங்கள் பார்க்க வேண்டும், தரம் நன்றாக இருக்க வேண்டும், ஏறக்குறைய விலை இருக்க வேண்டும் என்றால் ஜப்பான் தயாரிப்பில் Seiko, சுவிஸ் தயாரிப்பில் Tissot, ஜெர்மன் தயாரிப்பில் Zeppelin அல்லது அமெரிக்க தயாரிப்பில் Timex வாங்கலாம்.
# ETA (Swiss), Sellita (Swiss), Soprod (Swiss), STP (Swiss), Ronda (Swiss), Miyota (Japan), Seiko (Japan) மற்றும் Seagull (China) ஆகியவை முக்கியமான Watch Movements உற்பத்தியாளர்கள் ஆவர். பல கடிகார நிறுவனங்கள், பொதுவாக சுவிஸ் அல்லது ஜப்பான் Watch Movements உற்பத்தியாளர்கள் இடமிருந்து தங்களுக்கான Watch Movements இயக்கத்தை வாங்குகின்றன.
# கடைகளில் விற்கப்படும் கடிகாரங்கள் 10:10 மணி என இருப்பதற்கு காரணம், அவை நேர்மறை விளைவை (Positive Effect) கொடுக்க புன்னகைப்பது போலவும், "V" வடிவம் Victory என்பதை வெளிப்படுத்துவது போலவும் இருக்கும். மேலும், 3:00 மணியை ஒட்டி உள்ள தேதி, நாள் / 12:00 மணிக்கு கீழ் உள்ள Logo / 6:00 மணிக்கு மேல் உள்ள Watch Details போன்ற தகவல்களை மறைக்காமலும் இருக்கும்.
# 1961 இல் ஜப்பானின் Citizen நிறுவனத்துடன் இணைந்து HMT நிறுவனத்தை இந்தியாவில் அமைப்பதில் நேரு முக்கிய பங்காற்றினார். 1960, 1970, 1980 களில் HMT நிறுவனத்திற்கு இருந்த Stardom இன்றைய Titan நிறுவனம் கூட பெற்றிருக்கவில்லை எனச் சொன்னால் அது மிகையாகாது.
# 1984 இல் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Industrial Development Corporation - TIDCO) மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு முயற்சியின் மூலம் Titan கடிகார நிறுவனம் தொடங்கப்பட்டது.
# Ethos, Kapoor, Johnson, Zimson, Kamal, Khimani, Helvetica, Helios ஆகியவை இந்தியாவின் பிரபல கடிகார விற்பனையாளர்கள் ஆவர்.
# உலகளவில், Smart Watches தயாரிப்பை ஒரு கடிகாரமாக Watch Community ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் Smart Watches மீது ஆர்வம் இல்லை அதனால் அதை பற்றி எழுதவில்லை.
விவரணைகள்
Watch Movements
Watch Terminology
Ethos Watch Boutiques IPO Note
Myths and Realities Behind 10:10 Time
Watch Movement Manufacturers
How Does A Quartz Watch Work?
How Does A Mechanical Watch Work?
Japan VS Swiss Watches
Seiko Quartz Astron 35SQ
Delhi Javed Khan's Old Swiss Watches
Seiko Watches History
Casio Watches History
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.