Chocks: தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் சிலைகள்

Sunday, November 15, 2020

தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் சிலைகள்

தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் சிலைகள்


1. மேற்கண்ட சிலைகள் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புத்தர் சிலைகள் ஆகும்.

2. மூலவர் சன்னதிக்கு போகும் படிக்கட்டுகளின் மறைவில் கீழே வலதுபுறத்தில் உள்ளது. 

சிலையின் வடிவமைப்பு 

1. புத்தர் மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்கிறார் / அருகில் அரசர் தோற்றமுடைய இருவர் மற்றும் கந்தர்வர்கள் உள்ளனர்.

2. புத்தர் நின்ற நிலையில் காணப்படுகிறார் / அரசர் தோற்றமுடைய இருவர் புத்தரை மண்டியிட்டு வணங்குகின்றனர் / பின்னால் கந்தர்வர்கள் இருக்கின்றனர்.

3. ஒரு ஆலயம் மேலே இருந்து வருகிறது / ஒரு கந்தர்வர் லிங்கத்தை தலையில் சுமந்து வருகிறார்.

சிலையின் பொருள் 

ராஜ ராஜ சோழன் பற்பல சமயங்களை ஆதரித்து வளங்களை வழங்கினார் என்று சொல்லப்பட்டாலும், பெளத்த சமயத்தை அடக்கி வைதீக ரீதியிலான சைவ சமயத்தை ராஜ ராஜ சோழன் வளர்த்தார் என்று பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புத்தர் சிலைகள் / புத்தர் ஓவியங்களின் நுட்பான பொருள் குறித்து தொல்லியல் அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...