Chocks: தீபாவளி பண்டிகை வரலாறு

Sunday, November 15, 2020

தீபாவளி பண்டிகை வரலாறு

தீபாவளி பண்டிகை வரலாறு

சுருக்கம் 
  1. முகவுரை
  2. ஜைன வரலாற்றில் தீபாவளி
  3. தீபாவளி பண்டிகை குறித்து பிற கதைகள்
  4. முடிவுரை
முகவுரை 

*மனிதர்கள் புத்துணர்ச்சி பெற திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் அவசியமான ஒன்று ஆனால் அதன் வரலாற்று பின்னணி அறிதல் முக்கியம்.

*இந்து மதத்தில் நடைபெறும் திருவிழாக்கள் பெரும்பாலும் பௌத்த, ஜைன மதத்தின் வேரில் இருந்து பெறப்பட்டது.

*எடுத்துக்காட்டாக, பௌத்தர்கள் நடத்திய ஒரு நாள் வீதி உலா திருவிழா (சிலப்பதிகாரத்தில் பௌத்த தேர் குறிப்புக்கள் உள்ளன) கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு இந்துக்கள் பத்து நாள் கோவில் திருவிழாவாக மாற்றி கொண்டனர். 

*வேதங்களை நிராகரித்த பௌத்தம் மற்றும் ஜைனம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் கோலோச்சி வந்தது. ஆனால் ஆரிய இந்து மதம் பிற்கால பேரரசர்களை ஈர்த்து குடும்ப நெறிமுறைகளையும் சடங்குகளையும் பயன்படுத்தி பௌத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தியது.

ஜைன வரலாற்றில் தீபாவளி

*24 வது தீர்த்தங்கரர் மகாவீரர் பாவாபுரியில் (Pawapuri) மக்களுக்கு இரவு நெடுநேரம் உபதேசங்களை செய்தார்.

*நெடுநேரமான காரணத்தால் உபதேசங்களை கேட்டுவிட்டு மக்கள் அவ்விடத்திலேயே உறங்கினர், மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே உறங்கினார்.

*மறுநாள் சூரியன் உதித்ததும் மகாவீரர் விடியற்காலையில் முக்தி அடைந்ததை மக்கள் எழுந்து சென்று கண்டனர்.

*மகாவீரர் மறைந்ததை தொடர்ந்து பாவாபுரியில் தனது சகாக்களுடன்  ஆலோசித்த  அரசர் "அறநெறி ஒளியாக வாழ்ந்த மகாவீரருக்கு அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை மகாவீரர் மறைந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் தீப விளக்குகள் (தீபம் + ஒளி = தீபாவளி) ஏற்றி வழிபடும்படி" கோரினார்.

*5-6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஜைனர்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிய வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது.

*5-6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தீபாவளி பண்டிகையை இந்துக்கள் கொண்டாடிய பதிவுகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

*நாளடைவில் ஜைனர்களின் எழுச்சியை வீழ்த்த எண்ணிய ஆரியர்கள் "நரகாசுரனை அழித்த கிருஷ்ணன்" என்ற கதையை பரப்பி தீபாவளி பண்டிகையை இந்துத்துகள் பண்டிகையாக மாற்றினர்.

*மேலும் மகாவீரரை விஷ்ணுவின் ஒரு அவதாரமாக மாற்றி ஜைன மதத்தை இந்து மதத்தின் கிளை போலவே பாவிக்க தொடங்கினர். 

*ஆரியர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கொண்டாடிய தீபாவளி பண்டிகையை காலப்போக்கில் பிராமணர்கள் அல்லாதோரும் கொண்டாட தொடங்கினர்.

தீபாவளி பண்டிகை குறித்து பிற கதைகள் 

*சிவன்  - சிவனும் பார்வதியும் பகடை ஆடிய நாள்.

*கிருஷ்ணன் - கிருஷ்ணன் நரகாசுரனை கொன்ற நாள்.

*ராமர் - ராவணனை கொன்ற பின் ராமர் சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய நாள். 

*சீக்கியம் - 1619 இல் 6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் மற்றும் 52 இளவரசர்கள் சிறையிலிருந்து விடுதலையான நாள். 

*பௌத்தம் - பேரரசர் அசோகர் பௌத்த மதத்திற்கு மாறிய நாள்.

*தீபாவளி பண்டிகைக்கு பல வரலாறுகள் இருந்தாலும், "ஆரம்பகால தீபாவளி பண்டிகை கண்டிப்பாக ஜைன பண்டிகையாக தான் இருந்தது" என்பது வரலாற்று ஆய்வாளர்களின் மதிப்பீடு.

முடிவுரை 

*தீபாவளி பண்டிகை "தீப விளக்கு ஏற்றுதல்" நிகழ்விலிருந்து "பட்டாசு, புத்தாடை, இனிப்புகள், கறி விருந்து, தொலைக்காட்சி பொழுதுபோக்கு, தீபாவளித் திரைப்படங்கள், பெருங்கோவில் தரிசனம்" என்று வணிகமயமாக்கலுக்கு மாறியுள்ளது.

*இன்று தீபாவளி பண்டிகை இந்து பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்தாலும், ஆரிய வேதங்களை நிராகரித்த மகாவீரரையும் நினைவு கூர்வோம்.

// துணுக்கு // 

ஜைன பண்டிகையான தீபாவளி இந்து பண்டிகையாக மாறிவிட்டாலும், இன்று ஆங்காங்கே மற்ற சமூகத்தினரும் பட்டாசுகளை வெடித்து மகிழக்கூடிய பண்டிகையாக உள்ளது. பண்டிகைகள் என்பதே அனைவரும் மகிழ்வதில் தான் உள்ளது. அவ்வகையில் மற்ற சமூக நண்பர்களின் மகிழ்ச்சியும் முக்கியமானது. இந்து நண்பர்களுக்கு ரம்ஜான் அன்று பிரியாணி மற்றும் கிறிஸ்துமசு அன்று கேக்குகள் கொடுப்பது போல, தீபாவளியன்று மற்ற சமூக நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி இந்துக்கள் மகிழ வேண்டும், மத நல்லிணக்கத்தை போற்ற வேண்டும்.

வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. எல்லாத்தையும் எல்லாரும் கொண்டாடுவோம் னு முடிச்சிட்டீங்க...😀👍👍👍

    ReplyDelete

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...