Chocks: நாடாளுமன்ற தேர்தலா? சுதந்திர போராட்டமா?

Tuesday, October 3, 2023

நாடாளுமன்ற தேர்தலா? சுதந்திர போராட்டமா?

நாடாளுமன்ற தேர்தலா? சுதந்திர போராட்டமா?

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. நீங்கள் எந்த பக்கம்?
  3. I.N.D.I.A கூட்டணி
  4. கள யதார்த்தம்
  5. மத்தியில் கூட்டாட்சி
  6. முடிவுரை
  7. விவரணைகள்
முகவுரை

உலகெங்கிலும் பேரரசுகள் பெரும்பான்மையினரை குழப்பி சிறுபான்மையினரை கட்டுப்படுத்தும் நோக்கில் மதங்களை வளர்த்தெடுத்தன. தவறான மத போதனைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் மதவாத கருத்துக்கள் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் அவர்களை நல்வழிப்படுத்துவது சவாலாகும்.
ஆனால், 2024 தேர்தல் முடிவுகள் நம் அனைவருக்கும் முக்கியமானவை என்பதால், நல்லிணக்கத்தின் அவசியத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

நீங்கள் எந்த பக்கம்?

2024 இல் நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மீண்டும் ஒரு சுதந்திர போராட்டமா? "மக்கள் எங்கள் பக்கம்" என்று I.N.D.I.A கூட்டணி களம் காண இருக்கிறது. மூளைச்சலவை செய்யப்பட்ட "சங்கிகள் எங்கள் பக்கம்" என்று N.D.A களம் காண இருக்கிறது. நீங்கள் அரசியலற்றவராக இருக்க முயற்சிக்காமல் தயவு செய்து எந்த பக்கம் இருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
I.N.D.I.A கூட்டணி

I.N.D.I.A என்ற பெயரிடல் இயல்பாகவே I.N.D.I.A கூட்டணி ஒன்றிய இந்தியாவிற்குள் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதை குறிக்கிறது. எனவே, I.N.D.I.A கூட்டணியை வழக்கமான தேர்தல் கால கூட்டணியாக கருத இயலாது.

சுருக்கமாக, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் காங்கிரசு அதன் முந்தைய பலவீனங்களை ஆராய்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட I.N.D.I.A என்ற கூட்டணியின் மூலம் அவற்றை சரி செய்வதில் கடுமையாக உழைத்து வருகிறது.

கள யதார்த்தம்

அக்காலத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளிலும் தேசிய கட்சி முதலிடத்திலும், மாநில கட்சி இரண்டாவது இடத்திலும் வந்தது. தற்காலத்தில் மாநில கட்சி முதலிடத்திலும், தேசிய கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ள போக்குகள் தென்படுகின்றன.

அரசியல் அரங்கில் வளர்ந்து வரும் புதிய போக்குகளை காங்கிரசு புரிந்து கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலக் கட்சிகளின் மீது நேரடி கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு பதிலாக மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கி காங்கிரஸ் நகர்வது வரவேற்கத்தக்கது.
மத்தியில் கூட்டாட்சி
கடந்த கால அனுபவம், தற்போதைய சூழல், மற்றும் எதிர்கால எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாநில கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பை காங்கிரசு அளித்தால் ஒன்றிய இந்தியாவின் நல்வாழ்விற்கும் நல்லது காங்கிரசின் எதிர்காலத்திற்கும் நல்லது.

சுருக்கமாக, காங்கிரசு குறைவான இடங்களில் போட்டியிட வேண்டும் மற்றும் மாநில கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், அதே நேரத்தில் மாநில பிரதிநிதித்துவத்துடன் ஒன்றியத்தை காங்கிரசு ஆள வேண்டும்.

காங்கிரசின் பார்வையில் கடந்தகால நாடாளுமன்ற, மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான சில அடிப்படை புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளேன். மேலும் கூடுதல் ஆய்வு செய்து தேர்தலில் போட்டியிடக்கூடிய தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு புள்ளி விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Data Link ⏬

https://drive.google.com/drive/folders/1K6QTNBX_grh61j-kUIVkV7JoQmOv43Hw

I.N.D.I.A கூட்டணி ஆதரவில், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று கலைஞர் சொன்னதை காங்கிரசு செயல்படுத்தும் என்று கருதுவோம்.
முடிவுரை

காங்கிரசும் மாநில கட்சிகளும் பரஸ்பரம் மரியாதையை கடைப்பிடித்து, அடிப்படை யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப தேர்தல் தொகுதிகளை ஒதுக்கினால், 2024 தேர்தல் கோப்பையை I.N.D.I.A கூட்டணி நிச்சயம் வெல்லும். சுருங்கச்சொன்னால், மக்கள் வெல்வார்கள், சங்கிகள் தோற்பார்கள்!
விவரணைகள்

// மாநில சுயாட்சி உரிமைக்குரலின் கதை //


// கலைஞரின் ராஜமன்னார் கமிட்டி //


// அண்ணாவின் மாநில சுயாட்சி முழக்கம் //


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...