Chocks: மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

Sunday, November 3, 2024

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

பொருளடக்கம்  
  1. முதலாவது பகடை விளையாட்டு
  2. சகுனியின் எதிர்பார்ப்பு
  3. சகுனியின் கேலி
  4. தருமனின் இறுதி தோல்வி
  5. திரௌபதிக்கு ஆதரவுக்குரல்
  6. திரௌபதிக்கு அவமதிப்பு
  7. கிருஷ்ணாவின் மாயாஜாலம்
  8. பீமனின் எச்சரிக்கை 
  9. திருதராட்டிரனின் பயம்
  10. இரண்டாவது பகடை விளையாட்டு
  11. பந்தயத்தின் நிபந்தனை
  12. வனவாசம் சென்ற பாண்டவர்கள் 
  13. நாட்காட்டி ஊழல் 
  14. முடிவுரை 
முதலாவது பகடை விளையாட்டு

துரியோதனன் தன் மாமா சகுனியின் அறிவுரையை பின்பற்றி தருமனை பகடை விளையாட்டுக்கு அழைக்கிறார். சூது விளையாடுவது தருமனின் பலவீனம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அழைப்பை ஏற்று, தருமன் விளையாட வருகிறார், ஆனால் திருதராட்டிரன் மற்றும் தருமன் இருவரும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பகடை விளையாட்டை தவிர்க்க வேண்டும் என்று விதுரன் எச்சரிக்கிறார்.
சகுனியின் எதிர்பார்ப்பு

தன்னால் தருமனை எளிதாக தோற்கடிக்க முடியும் என்றும், அதனால் பாண்டவர்களை பழிவாங்கும் தனது நோக்கத்தை துரியோதனனால் நிறைவேற்ற முடியும் என்றும் சகுனி நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே, துரியோதனன் சார்பில் சகுனி தருமனுடன் பகடை விளையாடத் தொடங்குகிறார். இதில், தருமன் தனது சொத்து, நகை, இந்திரப்பிரஸ்தம் மற்றும் சகோதரர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாக இழக்கிறார்.

சகுனியின் கேலி

சகுனி தருமனைக் கேலி செய்து, ஒவ்வொரு நிலையிலும் தூண்டிவிட்டு பணயம் வைக்கக் கோருகிறார். இதைத் தொடர்ந்து, பகடை விளையாட்டில் தருமன் தனது சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவனை இழக்கிறார். இதற்குப் பிறகு, நகுலனும் சகாதேவனும் வளர்ப்பு சகோதரர்கள் என்றும், சொந்த சகோதரர்கள் அர்ஜுனனையும் பீமனையும் தருமன் பந்தயம் கட்ட மாட்டான் என்றும் சகுனி கேலி செய்கிறார்.

தருமனின் இறுதி தோல்வி

சகுனி கோரிக்கையின்படி, தருமன் அர்ஜுனனையும் பீமனையும் பணயம் வைத்து இழக்கிறார். தன்னையும் சேர்த்து முற்றிலும் தோல்வியடைந்த தருணத்தில், தருமன் திரௌபதியை பணயம் வைத்து அவரையும் இழக்கிறார். இந்த நிலையில், தருமன் திரௌபதியை பணயம் வைத்த போது சபையில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. என்னை வலுக்கட்டாயமாக பணயம் வைப்பது தகுமா? எனவும், சபைக்கு முன்னால் என்னை வைத்து சூதாடுவதற்கான உரிமை குறித்தும் திரௌபதி கேள்வி எழுப்பினார்.

திரௌபதிக்கு ஆதரவுக்குரல்

சபையில் திரௌபதியின் கேள்விகளுக்கு ஆதரவான குரல்கள் இருந்தன. குறிப்பாக, துரியோதனனின் தம்பி விகர்ணன் “துரியோதனனும் சகுனியும் விரித்த வலையில் தருமன் மயங்கிவிட்டார் என்றும், பகடை விளையாட்டில் தன்னையே இழந்த தருமனுக்கு திரௌபதியை பணயம் வைக்கும் உரிமை இல்லை என்றும்” திரௌபதிக்கு ஆதரவாக பேசினார்.

திரௌபதிக்கு அவமதிப்பு

சபையில் சிறியவன் எனக் கூறி விகர்ணனை துரியோதனன் கும்பல் அமைதிப்படுத்தியது. சபையில் துரியோதனன், திரௌபதியை தன் தொடையில் அமர வருமாறு தன் தொடையைத் தட்டி அழைத்தார். மேலும், திரௌபதியின் சேலையை அவிழ்க்குமாறு நண்பர் துச்சாதனனுக்கு கட்டளையிடுகிறார்.

கிருஷ்ணாவின் மாயாஜாலம்

துச்சாதனன் திரௌபதியின் சேலையை அவிழ்க்க தொடங்குகிறார். ஆனால், துச்சாதனன் எவ்வளவுக்கு ஆடைகளை இழுத்தாலும் அவ்வளவுக்கு கிருஷ்ணாவின் மாயாஜாலத்தில் புதிய ஆடையில் இருக்கிறார் திரௌபதி. வலிமை உடைய துச்சாதனன் தோல்வியடைந்து சோர்வடைகிறார்.
பீமனின் எச்சரிக்கை 

இந்த சேலை "உருட்டு" நிகழ்வை கண்டு சபையே திகைத்து நின்றது. திரௌபதியை அவமதித்த துச்சாதனனின் இதயத்தைக் கிழித்து அவரது இரத்தத்தை குடிப்பேன் என்றும்,  தொடையில் அமர அழைத்த துரியோதனனின் தொடையை தாக்குவேன் என்றும் சபதமிட்டு நடுங்கும் சமிக்ஞைகளை அனுப்புகிறார் பீமன்.

திருதராட்டிரனின் பயம்

மாயாஜால சேலை நிகழ்வால், வெல்ல முடியாத பாண்டவர்களை கண்டு திருதராட்டிரன் பயம் கொண்டார். எனவே, திரௌபதியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, அனைத்து பணையத்தையும் திருதராட்டிரன் விடுவித்தார்.

இரண்டாவது பகடை விளையாட்டு

திருதராட்டிரனின் செயலில் அதிருப்தி அடைந்த சகுனியும் துரியோதனும் மீண்டும் தருமனுடன் இரண்டாவது பகடை விளையாட்டிற்காக திருதராட்டிரனிடம் மன்றாடுகின்றனர். திருதராட்டிரனின் ஒப்புதலுக்கு பிறகு இரண்டாவது பகடை விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில், தருமன் மீண்டும் விளையாட ஒப்புக்கொள்கிறார். கௌரவர்கள் தோற்றால், பாண்டவர்களுக்கு தங்கள் ராஜ்யத்தை மீண்டும் அளிக்க வேண்டும். பாண்டவர்கள் தோற்றால், வனவாசம் செல்ல வேண்டும் என்று பந்தயம் கட்டப்படுகிறது. பகடை விளையாட்டின் இரண்டாவது நிகழ்வில், தருமன் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறார்.

பந்தயத்தின் நிபந்தனை

இரண்டாவது பகடை விளையாட்டில், தோற்ற பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் சென்று, அதை சூரிய நாட்காட்டி அடிப்படையில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எந்த சச்சரமும் இல்லாமல், 13 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்தால், பாண்டவர்கள் இராஜ்யத்தை பெறலாம் என தீர்மானிக்கப்பட்டது.

பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காடுகளில் (Forest) வாழ்ந்து, 13 வது ஆண்டு யாராலும் அடையாளம் காணாமல் மாறுவேடத்தில் (Disguise) கடக்க வேண்டும். ஒரு வேளை மாறுவேடத்தின் போது கௌரவர்கள் பாண்டவர்களை அடையாளம் கண்டால், அவர்கள் மீண்டும் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை.

வனவாசம் சென்ற பாண்டவர்கள் 

தருமனிடம் முதுமை மற்றும் பலவீனமுள்ள அன்னை குந்தி, தன்னுடன் தங்கி கொள்ளட்டும் என்று விதுரன் கூற அதற்கு தருமன் ஒப்புக்கொள்கிறார். குந்தி மட்டும் விதுரனுடன் வசிக்க, நிபந்தனைப்படி பாண்டவர்கள் (தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி) 13 ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர் (Exile). இதையெடுத்து, துரியோதனன் ஹஸ்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் (முதலில் பாண்டவர்கள் ஆட்சி) இரண்டிற்கும் ஆட்சியாளரானார்.

நாட்காட்டி ஊழல் 

பாண்டவர்களின் வனவாச காலம் சூரிய (Solar) நாட்காட்டியின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். இதன்படி, தருமன் சூரிய நாட்காட்டியின்படி நேரத்தை கணக்கிட்டார்; ஆனால் அர்ஜுனன் சந்திர (Lunar) நாட்காட்டியின்படி நேரத்தை தவறாகக் கணக்கிட்டான். இந்த பின்னணியில், விராட பருவத்தின் (Virata Parva) கதைப்படி, கடைசி 1 வருட அஞ்ஞாத வாசம் முடியும் முன்னே, துரியோதனன் அர்ஜுனனை மாறுவேடத்தில் கண்டுக் கொண்டார். இதனால், பாண்டவர்கள் மீண்டும் 12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட வேண்டும் என்கிற நிலைமை உருவாகியது. இவ்விடத்தில், முதல் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்த பிறகு, கடைசி 1 வருட அஞ்ஞாத வாசம் தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பிரச்சனையானது, இதுவே குருசேத்திரப் போர் நிகழ்வுகளை உருவாக்கியது.

"சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அஞ்ஞாத வாசம் முடிவடையாத போது, மாறுவேடத்தில் இருந்த அர்ஜுனனை அடையாளம் கண்டுவிட்டதால் பாண்டவர்கள் மீண்டும் நாடு கடத்தப்பட வேண்டும்" என்று துரியோதனன் சான்றோரிடம் முறையிட்டார். "பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் முடிந்துவிட்டது" என பீஷ்மர், துரோணர் உள்ளிட்டோர் சொன்னாலும், "பாண்டவர்கள் தாங்கள் பேசியபடி நாடு கடத்தப்பட்ட வாழ்வை சூரிய நாட்காட்டியின்படி முழுமையாக முடிக்கவில்லை" என்று துரியோதனன் வாதிட்டார். இறுதியில், இருதரப்பு பேச்சுவார்த்தை பலனளிக்காததால், குருசேத்திரப் போர் தொடங்கியது; அதுவே மகாபாரதப் போர் எனப்படுகிறது.

முடிவுரை 

பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட வாழ்வை முழுமையாக முடிக்கவில்லை, ஏனெனில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சூரிய நாட்காட்டிக்கு முன்பே துரியோதனன் அர்ஜுனனை பார்த்துவிட்டார். சூரிய நாட்காட்டியை கணக்கில் எடுத்தால், 3 நாட்கள் முன்கூட்டியே அர்ஜுனன் வெளிப்பட்டுவிட்டார்.

நீதி தவறிய பிறகும், பிச்சை எடுப்பது போல், பாண்டவர்கள் இராஜ்ஜிய உரிமையை கோரினர்; அதை துரியோதனன் நிராகரித்தார். இதனால் குருச்சேத்திரப் போர் தொடங்கியது. மகாபாரதக் "கதையில்" பாண்டவர்களுக்கு ஆதரவாக கால நேரத்தை மாற்றுவது முதல் தாக்குதல் தந்திரங்களை வடிவமைப்பது வரை கிருஷ்ணா செயல்பட்டார்.

உண்மை நிலையில் ஆராய்ந்தால், மகாபாரதத்தில் துரியோதனன் நல்லவராகவும், கிருஷ்ணா தீயவராகவும் தெரிகின்றனர். ஆனால், இந்துத்துவா அரசியல்வாதிகள் கிருஷ்ணாவை அரும்பெரும் கதாநாயகனாகவும், துரியோதனனை வில்லனாகவும் சித்தரிக்கின்றனர்.

விவரணைகள் 











வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...