சூரரைப் போற்றும் கிராம வரலாறும்
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
- சூரரைப் போற்று
- பிற்போக்குவாதிகள் எண்ணம்
- மகாபாரதம் விதுர நீதி
- கிராமும் நகரமும்
- கிராமங்களில் சூத்திரர்கள்
- நுண்ணரசியல்
- முடிவுரை
- பின் குறிப்பு
சூரரைப் போற்று
*கிராமமோ நகரமோ ஆனால் உலகமயமாக்கல் வணிகத்தை இனியும் தவிர்க்க இயலாது அதிலும் கடலும் வானும் முக்கிய போக்குவரத்து வணிகமாகும்.
*கடலையும் வானையும் (Logistics - Goods / Passenger Movement) எந்த நாடு கட்டுப்படுத்துகிறதோ அவர்களே உலகின் அதிகார மய்யமாக திகழ முடியும். 
*வலதுசாரி பிற்போக்கு முதலாளிகள் "கடலையும் வானையும்" தனதாக்கி கொள்வர். 
*இடதுசாரி முற்போக்கு முதலாளிகள் "கடலையும் வானையும்" பொதுவாக்கி கொள்வர்.
*வலதுசாரி பரேஷ் கோஸ்வாமி போன்றவர்கள் வணிகத்தை நடத்துவதை விட இடதுசாரி நெடுமாறன் ராஜாங்கம் போன்றவர்கள் வணிகத்தை எடுத்து நடத்துவது மக்களுக்கு பயனளிக்க கூடிய வணிகமாக மாறும்.
பிற்போக்குவாதிகள் எண்ணம்
ஏழை மக்கள் கிராமங்களில் வாழ வேண்டும்
பணக்கார மக்கள் நகரங்களில் வாழ வேண்டும் 
பெரும் பணக்கார மக்கள் இவர்களை ஆள வேண்டும்
மகாபாரதம் விதுர நீதி
த்யஜேத் குலார்த்தே புருஷம்
- ஒரு குலத்திற்காக ஒரு மனிதனை தியாகம் செய்யலாம் 
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத் 
- ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம் 
க்ராமம் ஜனபதாஸ்யார்த்தே
- ஒரு நாட்டிற்காக ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம் 
ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத்
- தன் ஆத்மாவிற்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்
கிராமும் நகரமும் 
*கிராம குடியிருப்பு என்பது பிராமண குடியிருப்பு.
*க்ரமம் > க்ராமம் >கிராமம் (சிற்றூர்).
*க்ராமணி என்பவர் க்ராம வாழ்கையை வாழ்பவர்.
*க்ராமணி > க்ராம மணியம் > மணியக்காரன் (கிராமத்தின் தலைவன்).
*பேரரசர்கள் நகரின் வெளியிலே பற்பல இடங்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்கினர் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுகள், சாசனங்கள் உள்ளன. 
*இவ்வாறு பிராமணர்கள் இலவசமாக பெற்ற இடங்களே “கிராமம்” எனப்பட்டது.
*அக்ரகாரம், பிரம்ம தேசம், பிரம்ம மங்கலம், சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களிலும் கிராமங்கள் அழைக்கப்படலாயின.
*இக்கிராமங்களில் சூத்திரர்கள் கடுமையாக உழைத்து விவசாயம் செய்திட பிராமணர்கள் கிராமத் தலைவர்கள் போல வாழ பேரரசர்கள் பேருதவி புரிந்தனர்.
*நகர குடியிருப்பு என்பது திராவிட குடியிருப்பு. 
*சிந்து சமவெளி, கீழடி நகர அகழாய்வு ஆதாரங்கள் திராவிட நகர குடியிருப்பை நிரூபிக்கிறது.
கிராமங்களில் சூத்திரர்கள் 
*காலனிய ஆட்சிக்கு பிறகு பிராமணர்கள் நகரத்திற்கு படையெடுத்தனர்.
*கிராமத்தில் இருந்து நகரத்திற்கு குடியேறிய பிராமணர்கள் ஆங்கிலேய கல்வி திட்டத்தை வரவேற்று கல்வி அறிவை தங்களதாக மட்டும் மாற்றிக்கொண்டனர்.
*நகரத்திற்கு வந்து கல்வி அறிவை பெற வாய்ப்பு கிடைக்கப்பெறாமல் சூத்திரர்கள் கிராமத்திலே தங்கி விவசாயம் செய்து வந்தனர்.
*நகரங்களில் வாழும் பிராமணிய பார்வை கொண்ட ஆட்சியாளர்களுக்கு சூத்திரர்கள் கிராமத்திலே தங்கி விவசாயம் மூலம் உணவு உற்பத்தி செய்வது மிக சௌகரியமாக போனது.
நுண்ணரசியல் 
*இந்து வர்ணத்தை ஏற்ற காந்தி “இந்தியர்கள் கிராமத்திற்கு திரும்ப வேண்டும், இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களை நம்பித்தான் இருக்கிறது” என கூறிய நுண்ணரசியலை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
*பிராமணிய பார்வை கொண்ட முதலாளிகள் பலரும் பிராமணர்கள் அல்லாதோர் கிராமத்திலே தங்கி விவசாயத்தில் ஈடுபடுவதை கண்ணும் கருத்துமாக கருதி பாராட்டி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
*கிராம வாழ்க்கை ஆரோக்கியமானது, விவசாய தொழில் புனிதமானது, பசுமை திட்ட அரசியல், தற்சார்பு பொருளாதார அரசியல் போன்றவை நாக்கில் தேன் தடவிய முதலாளித்துவ நுண்ணரசியல் பிரச்சாரங்கள் ஆகும்.
முடிவுரை 
*இன்றும் கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கைக்கு மாற கிராமவாசி படாதபாடு பட வேண்டி இருக்கிறது.
*அப்படி நகருக்கு வந்து வாழ முயலும் கிராமவாசியை சில நகரவாசிகள் விரும்புவதில்லை என்ற செய்தி வேதனைக்குரியது.
*இந்த அவலங்களை எல்லாம் உடைத்து கிராமத்தில் இருந்து நகரம் வந்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் ஒவ்வொருவரும் விதைக்க வேண்டும்.
*கிராமம் - நகரம் என்ற சிக்கலுக்குரிய கட்டமைப்பை ஆய்வுக்குரிய விஷயமாக எடுத்து பல்வேறு முற்போக்கு மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் முயல வேண்டும்.
*கிராமம், விவசாயம் என்பதை புனித பொருளாக பேசுவதை நிறுத்தாவிட்டால் கிராமத்தின் பிடியிலே வாழும் எதிர்கால தலைமுறையை உருவாக்கிட நேரிடும்.
பின் குறிப்பு 
கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா? என்பது அவரவர் சுய சிந்தனையில் (பிறர் பிரச்சாரத்தால் அல்ல) முடிவு செய்து கொள்ளட்டும் ஆனால் கிராமம், விவசாயம், ஆயுர்வேதம், நகரம், தொழில்நுட்பம் என எதையும் புனிதப்படுத்த வேண்டாம் ஏனெனில் புனிதம் என்ற சொல் வந்துவிட்டாலே அங்கு தீட்டும் தன்னாலே வந்துவிடும். 
மாறா மறத்தமிழா மாறா!
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.

 
 
 
 
 
No comments:
Post a Comment