ஜான் F கென்னடி
*1960 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற ஜான் F கென்னடி ((John F Kennedy) பதவிக்காலம் முடிவடையும் முன்னராகவே படுகொலை செய்யப்பட்டார்.
*25-05-1961 அன்று "பத்தாண்டுகள் முடிவதற்குள் ஒரு மனிதனை நிலவில் இறக்கி அவரை பத்திரமாக பூமிக்கு திருப்பி அனுப்பும் இலக்கை அடைய அமெரிக்கா தன்னை அர்ப்பணிக்கும்" என்று அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் வியத்தகு விரிவாக்கம் குறித்து அதிபர் ஜான் F கென்னடி பேசினார்.
*1963 இல் ஜான் F கென்னடி மறைந்துவிட்டாலும் 20-07-1969 அன்று அப்பல்லோ 11 (Apollo 11) திட்டத்தின் கீழ் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பில் இறங்கியபோது ஜான் F கென்னடி முன்னெடுத்த இலக்கு அடையப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*மார்ட்டின் லூதர் கிங் (MLK) தலைமையில் ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் சிவில் உரிமைகளை பெறவும் இன பிரிவினையை முடிவுக்கு கொண்டு வரவும் போராட்டம் நடைபெற்று வந்த காலகட்டத்தில் 11-06-1963 அன்று அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமெரிக்காவில் இன பாகுபாடு சமூக உறவுகளை பாதிக்கிறது என்றும் உள்நாட்டில் பாகுபாட்டை போதிக்கும் போது சர்வதேச அளவில் சுதந்திரத்தை நாம் போதிக்க முடியாது என்றும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை, சமனான சட்டம், கல்வி வாய்ப்பு, பொது வசதி பெறும் வகையில் அமெரிக்கர்களின் சிவில் உரிமைகளை பாதுகாத்திடும் சட்டத்தை காங்கிரஸ் இயற்றிட வேண்டினார் அதிபர் ஜான் F கென்னடி.
*சகோதரர் ராபர்ட் F கென்னடி தலையீடு, கியூபா ஏவுகணை நெருக்கடி, மர்லின் மன்றோ தொடர்பு, பறக்கும் தட்டு ஆராய்ச்சி போன்ற சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் தலைவராக ஜான் F கென்னடி வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் F கென்னடி படுகொலை
*உலகளவில் ராஜீவ் காந்தி படுகொலை போல ஜான் F கென்னடி படுகொலையின் வலைப்பின்னலும் வழக்கு விசாரணையும் மிக பிரபலமானதாகும்.
*ராஜீவ் காந்தி மற்றும் ஜான் F கென்னடி படுகொலைகளை படித்தறிந்தால் "அரசியலும் சதியும்" உடன் பிறந்த இரட்டையர்கள் என்பதை அறியலாம்.
*22-11-1963 அன்று ஜான் F கென்னடி படுகொலை செய்யப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு டல்லாஸ் காவல்துறை அதிகாரி ஜே.டி.டிப்பிட் (J.D.Tippit) கொலை செய்யப்பட்டார்.
*விசாரணை தொடக்கத்தில் திரையரங்கில் மறைந்திருந்த லீ ஹார்வி ஓஸ்வால்ட் (Lee Harvey Oswald) ஜே.டி.டிப்பிட் கொலைக்காக கைது செய்யப்பட்டார்.
*பின்னர் இறுதி விசாரணையில் அதிபர் ஜான் F கென்னடியை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
*லீ ஹார்வி ஓஸ்வால்ட் தன் மீதான கொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வேறு யாரோ செய்த குற்றத்திற்கு தான் பலிகடா ஆக்கப்படுவதாக கூறினார்.
*இரண்டு நாட்களுக்குப் பிறகு 24-11-1963 அன்று டல்லாஸ் காவல் தலைமையகத்தில் அமெரிக்க இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபி (Jack Ruby) லீ ஹார்வி ஓஸ்வால்டை கொலை செய்தார்.
*ஜான் F கென்னடி படுகொலை குறித்து விசாரிக்க புதிய அதிபர் லிண்டன் B ஜான்சன் 29-11-1963 அன்று வாரன் கமிஷனை (Warren Commission) அமைத்தார்.
*ஜான் F கென்னடியின் படுகொலை வழக்கில் தொடர்புடைய லீ ஹார்வி ஓஸ்வால்ட்டை கொலை செய்தது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் (Organized Crime) ஈடுபடும் முக்கிய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தது என ஜாக் ரூபி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு 14-03-1964 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
*மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜாக் ரூபியின் புதிய வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லாமல் 03-01-1967 அன்று ஜாக் ரூபி இறந்தார்.
சர்ச்சைகள்
*ஜான் F கென்னடி படுகொலைக்கு மாபியா அமைப்பு (Mafia Organisation), உளவு அமைப்பு (Intelligence Agency), அரசியல் அமைப்பு (Political Organisation) என்று பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
*கென்னடி குடும்ப உறுப்பினர்கள் பலரும் சர்ச்சைக்குரிய வகையில் மரணித்துள்ளதால் கென்னடி சாபம் (Kennedy Curse) பிரபலமான கதைகளில் ஒன்றாகும்.
*ஜான் F கென்னடி படுகொலை பற்றி பரபரப்பான செய்திகளை எழுதி வந்த பத்திரிகையாளர் டோரதி கில்கல்லன் (Dorothy Kilgallen) 08-11-1965 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
*24-09-1964 அன்று வாரன் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெரும்பாலான அமெரிக்கர்கள் ஜான் F கென்னடியை கொன்றதில் லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்ற ஒற்றை நபர் (The Lone Gunman) மட்டுமே ஈடுபட்டதாக நம்பினர் ஆனால் நாளடைவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெரும்பாலான அமெரிக்கர்கள் ஜான் F கென்னடி படுகொலையில் ஒற்றை நபர் வாதத்தை ஏற்க மறுத்து சதிச்செயல் (Conspiracy) இருப்பதாக நம்பினர்.
*22-11-1963 அன்று டல்லாஸ் மாநகரில் அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் அமெரிக்காவின் அடுத்தடுத்த அதிபர்கள் லின்டன் B ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், ஜார்ஜ் HW புஷ் ஆகியோர் டல்லாஸ் மாநகரில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற தங்கி இருந்தது இன்று வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
கென்னடி சகோதரர்கள் - மர்லின் மன்றோ
*ஜாக்குலின் கென்னடியை திருமணம் புரிந்த ஜான் F கென்னடி நடிகை மர்லின் மன்றோவுடன் வெகுநாட்கள் காதல் தொடர்பில் இருந்தார்.
*நாளடைவில் அதிபரான ஜான் F கென்னடியிடம் இருந்து விலகி இருக்குமாறு சகோதரர் ராபர்ட் F கென்னடி நடிகை மர்லின் மன்றோவிடம் கூறி வந்தார்.
*சமரசம் பேசிய ராபர்ட் F கென்னடியே இறுதியில் நடிகை மர்லின் மன்றோவிடம் காதலில் விழுந்தார்.
*நடிகை மர்லின் மன்றோவிடம் நெருக்கமாக பழகியபோது ஏரியா 51 (Area 51), பறக்கும் தட்டு (UFO) குறித்து ஜான் F கென்னடி பேசியதாகவும் அதன் இரகசிய குறிப்புகளை மர்லின் மன்றோ சிகப்பு டைரி (Red Diary) ஒன்றில் எழுதி வைத்து ராபர்ட் F கென்னடியை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
*படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் 04-08-1962 அன்று நடிகை மர்லின் மன்றோ மரணம் அடைந்தார்.
*இன்று வரை நடிகை மர்லின் மன்றோவின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதில் தீர்க்கமான ஆதாரமில்லை.
*நடிகை மார்லின் மன்றோ மரணம் நிகழ்ந்த 15 வது மாதத்தில் ஜான் F கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
சிறப்பு ஒலிம்பிக்ஸ்
*ஜான் F கென்னடியின் சகோதரி யூனிஸ் மேரி கென்னடி "உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள்" உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்கை 20-07-1968 அன்று நிறுவினார்.
*ரோஸ்மேரி கென்னடியின் இயலாமை சிறப்பு ஒலிம்பிக்கை (Special Olympics) உருவாக்க தூண்டுதலாக இருந்தது.
துணுக்கு செய்தி
*"1963 இல் நாங்கள் அனைவரும் ஜான் F கென்னடியை சந்தித்த பிறகு பில் கிளிண்டன் என்னிடம் ஒரு நாள் ஜான் F கென்னடி வேலையைப் பெறப்போகிறேன்" என்று 1993 இல் மினசோட்டா செனட்டர் ஜிம் ராம்ஸ்டாட் நினைவுகூறியது குறிப்பிடத்தக்கது.
விவரணைகள்
JFK Assassination - Real Footage (@ 4:16)
JFK Assassination - Animation
Connecting the Deaths of Marilyn Monroe, JFK and Dorothy Kilgallen
Oswald was Killed by Jack Ruby
JFK Assassination Case Details
Cuban Missile Crisis
JFK Presidentship
JFK and MLK Assassinations
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
இன்னும் இது போல் தமிழில் நிறைய கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்
ReplyDelete