Chocks: உலகின் முதல் ரசாயனம்

Sunday, November 15, 2020

உலகின் முதல் ரசாயனம்

உலகின் முதல் ரசாயனம்

சுருக்கம் 
  1. முகவுரை
  2. உப்பு உருவாகும் விதம் 
  3. உப்புநீர்க் குளம் 
  4. உப்பின் வரலாறு 
  5. சில உப்பு வகைகள் 
  6. முகவுரை 
முகவுரை

*ஆதி கால மனிதர்கள் மிருகங்களை வேட்டையாடி சமைத்து உண்டனர். 

*அப்போது மாமிச உணவு கெடாமல் இருக்க உப்பை மாமிசத்தில் தடவி வைத்தனர். 

*இவ்வகையில் உப்பு (Salt) தான் உலகின் முதல் ரசாயனம் (Chemical) என்று அறியப்படுகிறது.

உப்பு உருவாகும் விதம் 

*கடலில் உப்பு நிலத்தில் (Rain Water) இருந்தும் கடலுக்கடியில் (Submarine Volcano) இருந்தும் உருவாகிறது. 

*உப்பின் மூலப்பொருள் சோடியம் குளோரைடு (Sodium - Na & Chloride - Cl = NaCl).

*கடல் நீரின் உப்புத்தன்மை என்பது வெப்பநிலை, ஆவியாதல் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

*சராசரி கடல் நீரின் உப்புத்தன்மை ஆயிரத்திற்கு 35 பாகங்கள் அல்லது 1 லிட்டர் கடல் நீருக்கு 35 கிராம் உப்புகள். 

From Rain Water

*நிலத்தில் விழும் மழைநீர் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் (Carbon Dioxide) கலக்கும்போது ​​கார்போனிக் அமிலம் (Carbonic Acid) உருவாகிறது.

*கார்போனிக் அமில நீரானது சில பாறைகளின் (Rocks) விரிசல் வழியாகப் பாய்ந்தோடி பாறையுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து உருவாகும் அயனிகளை (Ions) இறுதியில் கடலுக்குள் செலுத்துகிறது.

*கரைந்த அயனிகள் கடலில் உள்ள உயிரினங்களால் (Organisms) பயன்படுத்தப்படுகின்றன, நீரிலிருந்து அகற்றப்படுகின்றன (Salt), மற்றவை அகற்றப்படாமல் உப்பின் செறிவு கடலில் (Concentration of Salt in Sea) காலப்போக்கில் அதிகரிக்கிறது.


Submarine Volcano 

*ஒன்று கடலுக்கடியில் எரிமலை (Volcano) வெடிப்பிலிருந்து நேரடியாக தாதுக்களை (Minerals) கடலுக்குள் கசிய விடுவதன் மூலம் உப்பு உருவாகிறது.

*மற்றொன்று கடலுக்கடியில் துவாரங்களிலிருந்து (Vents) வெளிவரும் வெப்ப நீர் திரவங்கள் மூலம் உப்பு உருவாகிறது.

Sea Vents Reaction 

*கடலுக்கடியில் டெக்டோனிக் தட்டுகள் (Tectonic Plates) நகரும் நடவடிக்கையால் விரிசல் ஏற்பட்டு பூமியின் மையத்திலிருந்து வெளிவரும் மாக்மாவால் (Magma) ஆழ்கடல் நீர் வெப்பமாகிறது.

*இந்த ரசாயன எதிர்வினையாக (Reactions) ஆழ்கடல் வெப்ப நீரானது (Deep Sea Heated Water) ஆக்ஸிஜன் (Oxygen), மெக்னீசியம் (Magnesium), சல்பேட்டு (Sulphate) ஆகியவற்றை வெளியில் தள்ளிவிட்டு சுற்றியுள்ள பாறைகளிலிருந்து இரும்பு (Iron), துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper) போன்ற உலோகங்களை உள்வாங்கிக் கொள்கிறது.

*ஆழ்கடல் வெப்ப நீரானது துவாரங்கள் வழியாக வெளியில் தள்ளிய உலோகங்களின் நடவடிக்கையால் உப்பு உருவாகிறது.
உப்புநீர்க் குளம் 

*உப்புநீர்க் குளம் (Brine pool) என்பது கடலுக்கடியில் மற்ற பகுதிகளை விட பலமடங்கு உப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.

*உப்புநீர்க் குளம் உருவாக காரணம் மிகப் பெரிய உப்புப் படிமம் (Salt Deposits) மற்றும் உப்பு டெக்டோனிக்ஸ் (Salt Tectonics) காரணம் ஆகும். 
உப்பின் வரலாறு 

*உப்பை விலைக்கு வாங்கிடவே வேலைக்கு சென்றது பழங்கால வரலாறு.

*பழங்காலத்தில் உப்பு என்பது இன்றைய தங்கம் போல அதனால் உப்பை வெள்ளைத்தங்கம் (White Gold) என்பர்.

*ஏனெனில் சம்பளம் என்றால் சம்பா (அரிசி) + அளம் (உப்பு), லத்தீன் சொல் Salarium என்றால் உப்பு அதுவே ஆங்கிலத்தில் Salary என்றானது. 

*மனித வாழ்வில் உப்பு எந்தளவுக்கு முக்கியமானது என்றால் “உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்ற சொலவடை உருவாகும் அளவுக்கு இருந்து வருகிறது.

*பழங்கால வணிக பண்டமாற்று முறையில் உப்பு முக்கிய இடத்தில் இருந்தது. 

*பண்டமாற்றம் முறை காகித தாளுக்கு (Money) மாறிய பிறகு உப்பின் மதிப்பு மேலும் கூடியது.

*ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்க காந்தி தண்டி யாத்திரை (Salt March) போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சில உப்பு வகைகள் 

1.மேசை உப்பு - Table Salt 
2.கோஷர் உப்பு - Kosher Salt 
3.கடல் உப்பு - Sea Salt 
4.இந்துப்பு - Himalayan Salt 
5.சாம்பல் உப்பு - Grey Salt 
6.காலா நாமக் உப்பு - Kala Namak Salt 
7.சீவல் உப்பு - Flake Salt 
8.ஹவாயன் உப்பு - Hawaiian Salt

முகவுரை 

*இன்று உலகில் உப்பை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் சீனா, இரண்டாவது இடம் அமெரிக்கா, மூன்றாவது இடம் இந்தியா.

*உப்புக்கான உலகளாவிய தேவை 2025 ஆம் ஆண்டில் 15.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*டூத்பேஸ்ட்டில் உப்பு இருந்தால் பற்களின் வலிமை கூடும் மற்றும் பற்கள் வெண்மை பெறும் என்ற நோக்கில் "உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா" என்று விளம்பரங்களில் கேட்கும் அளவுக்கு இன்றைய உலகமயமாக்கல் மூலம் உப்பு வணிக தொழில் ஆகிவிட்டதை கவனிக்க வேண்டும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...