Chocks: பீகாரின் கதை

Monday, November 16, 2020

பீகாரின் கதை

பீகாரின் கதை 

சுருக்கம் 
  1. வேத மரபை எதிர்த்த பீகார்
  2. புத்த மதத்தில் பிராமணர்கள்
  3. புத்த மதத்தில் அம்பேத்கர்
  4. பீகாரை அழித்த இந்தி
  5. பிராமணிய பீகார் 
  6. பீகாரும் இட ஒதுக்கீடும்   
  7. தமிழ்நாடு எப்படி பிழைத்தது?
  8. வலதுசாரிகளுக்கு ஏன் பீகார் தேவை?
வேத மரபை எதிர்த்த பீகார் 

*இந்தியாவில் வேத மரபை எதிர்த்த கலக்குரல் முதல் முதலாக பீகார் மாநிலத்தில் எழுந்தது.

*அப்படி வேத மரபை எதிர்த்த இரு சமயங்கள் பௌத்தம் மற்றும் ஜைனம்.

*பீகார் மாநிலத்தில் உள்ள ஆசியாவின் புகழ் பெற்ற நாளாந்த பல்கலைக்கழகம் பௌத்த கொள்கைகளை போதித்த கல்வி நிலையமாகும்.

*பௌத்த, ஜைன மத கொள்கைகள் இந்தியா முழுவதும் வேகமாக பரவிற்று.

*புத்தரும் மகாவீரரும் மறைந்த பிறகு அவர்களின் கொள்கைகள் சமயமாகி பிறகு மதமாகி போனது.
பௌத்த மதத்தில் பிராமணர்கள் 

*பௌத்த மதத்தின் வளர்ச்சியை வீழ்த்த எண்ணிய பிராமணர்கள் பௌத்த மதத்தை தேரவாதம் (பழையது) மற்றும் மகாயானம் (புதியது - பிராமணியம்) என இரண்டாக பிளந்தனர்.

*பிராமணர்கள் பௌத்தம் எழுச்சி அடைவது போல தோற்றத்தை உருவாக்கி நாளடைவில் அதன் கொள்கைகளை இந்தியாவில் நீர்த்து போக செய்தனர்.

*இந்தியாவில் உருவான பௌத்தம் பிராமணியத்தின் சூழ்ச்சியில் சிக்கி முழுவதுமாக அழியாமல் இருக்க பௌத்தர்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பி சென்றனர்.
புத்த மதத்தில் அம்பேத்கர் 

*வர்ண அமைப்பை மூச்சாக கொண்ட இந்து மதத்தில் ஒற்றுமைக்கு வழியில்லை என்பதை உணர்ந்து தான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி பௌத்த மதம் ஏற்க தயாரானார் டாக்டர் அம்பேத்கர். 

*அப்போது பௌத்த மதத்தின் பிரிவுகளை ஏற்காமல் புதிதாக "நவயான" என்ற பிரிவை உண்டாக்கினார்.

*நவயான கோட்பாடுகளை பகுத்தறிவு வழியில் புத்தரின் தோற்றம், துறவு வாழ்க்கை, போதி ஞானம், போதனைகள், உலக உறவு, இறுதிப் பயணம் குறித்து “புத்தரும் அவர் தம்மமும்” என்ற புத்தகத்தில் விரிவாக எழுதினார் டாக்டர் அம்பேத்கர். 

*அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் சுமார் 10 இலட்சம் மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார் டாக்டர் அம்பேத்கர்.

“நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான தேரவாதம் மற்றும் மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கருத்து முரண்பாட்டில் என் மக்களை ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பௌத்தம் "நவயான" என்ற புதிய பௌத்தமாக இருக்கும்" என்றார் டாக்டர் அம்பேத்கர்.

பீகாரை அழித்த இந்தி 

*1950 களில் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் பீகார் மாநிலம் ஒன்றாக இருந்துள்ளது.

*2020 களில் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் கடைசி மாநிலமாக பீகார் இருக்கிறது.
*பீகாரின் பூர்விக மொழியாக போஜ்புரி, மைதிலி, மகாஹி அறியப்படுகிறது.

*பீகார் மாநிலத்தில் 1881 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி படிப்படியாக உள்ளே நுழைந்தது.

*கிட்டத்தட்ட 1980 களில் பீகார் மாநில மக்கள் இந்தி மொழி மற்றும் இந்தி பண்பாட்டை முழுமையாக ஏற்றதால் தங்கள் சுயமரியாதையை, மொழியை, பண்பாட்டை இழந்தனர். 

*ஆனால் இன்றும் பீகாரின் மைதிலி மொழி பேசும் மக்கள் இந்தியை எதிர்ப்பது கவனிக்கத்தக்கது.

பீகார் பிராமணியம் 

*பிராமணிய கோட்பாட்டில் மயங்கி இன்று பீகார் மக்கள் தங்கள் மண்ணின் வரலாறை மறந்து சாதிகளை உயர்த்தி பிடித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

*பீகாரில் இன்றும் கூட இந்த ஏற்ற தாழ்வு போக்கை பலர் கண்கூடாக பார்த்திருக்கலாம்.

*சாதி இல்லை என்று உபதேசித்த புத்தர், மகாவீரர் பிறந்த பீகார் மாநிலத்தில் இன்று சாதி தான் பலவற்றை தீர்மானிக்கிறது. அந்தோ பரிதாபம்!

பீகாரும் இட ஒதுக்கீடும்   

1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களில், பீகார் மாகாணம் கல்வி அடிப்படையில் மிகவும் பின்தங்கி இருந்தது, ஏனெனில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையை மாற்ற கோரிய பல்வேறு காலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, 1952 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்தில் வேலைவாய்ப்புகளில் பிறப்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா அறிமுகமாகியது, ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு, முங்கேரி லால் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கர்பூரி தாக்கூர் தலைமையிலான பீகார் அரசு வேலைவாய்ப்புகளில் பிறப்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பீகாரில் செயல்படுத்தியது.

தமிழ்நாடு எப்படி பிழைத்தது? 

*பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட போர்ப்படை வீரர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு இன்று பீகார் போல தான் ஆகியிருக்கும்.

*திராவிட அரசியலை வெறும் "ஊழல் குற்றச்சாட்டு" என்ற மாய கண்ணோட்டத்துடன் அணுகி எதிரணியினர் எதிர்க்கிறார்கள்.

*தமிழ்நாட்டிற்குள் இந்தி மொழி திணிப்பை இந்தி பண்பாட்டை நுழைய விட்டால் நம் தமிழ்நாடும் விரைவில் இன்றைய பீகார் போல ஆகிவிடும். அதனால் "தமிழ் மொழி காப்போம், தமிழ் மானம் காப்போம்" என உள்ளத்தில் உறுதி பேணுவோம் .

*புதியவர்களை நம்பி திராவிட அரசியலை வெறுப்புடன் அணுகி இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் "வீணாக கூட்டாக" சேர்ந்து கெட்டுப்போய் விடுவோம் என்பதை மறவாதீர்.

*புதியவர்கள் கூறுவது போல ஊழலை ஒழிப்பது முக்கியம் தான் ஆனால் அவை கொள்கை ஆக முடியாது.

*ஏனெனில் ஊழல் ஒழிப்பு என்பது நடைமுறை (Practical) திட்டம் ஆனால் கொள்கை (Policy) என்பது மக்கள் திட்டம்.

வலதுசாரிகளுக்கு ஏன் பீகார் தேவை? 

*இடதுசாரிகள் ஆண்டால் ஓரளவுக்காவது சமத்துவம் மேம்படும் ஆனால் வலதுசாரிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே அதனால் வலதுசாரிகளுக்கு "சாதி பிரிவினை, பிறரின் ஏழ்மை" தினசரி அரசியல் செய்ய அவசியமாகிறது அதற்கு அவர்களுக்கு பீகார் போன்ற மாநிலங்கள் தேவைப்படுகிறது.

*நமக்கு யார் தேவை என்பதை மக்கள் சுதாரித்து கொள்ளவில்லை என்றால் பிறகு நாம் "குடும்ப அளவில் - வேலை அளவில் - கலை அளவில்" மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் "பொது நெறியில் நாடு மோசமாகும்" 

*கிணற்றில் போட்ட கல்லாக நம் சமுதாயம் மாறிவிட கூடாது அதனால் சிந்தித்து ஓட்டளிக்கவும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

Waterways Shaped Ancient Civilizations

Waterways Shaped Ancient Civilizations Waterways have always been vital to the development of Ancient Civilizations. By supporting agricultu...