Chocks: முப்பாடலும் ஜெயலலிதாவும்

Monday, November 16, 2020

முப்பாடலும் ஜெயலலிதாவும்

முப்பாடலும் ஜெயலலிதாவும்

1.கலாட்டா கல்யாணம் 1968 - நல்ல இடம் நீ வந்த இடம்

2.குமரிக் கோட்டம் 1971 - என்னம்மா ராணி பொன்னான மேனி 

3.சவாலே சமாளி 1971 - சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?

மேற்கண்ட மூன்று பாடல்களும் ஜெயலலிதாவின் அந்தந்த நேரத்து திரையுலக வாழ்வியல் சூழலை பிரதிபலிக்கும் வகையில் கவிஞர்கள் பொறி வைத்து எழுதிய பாடல்கள் என கூறப்படுகிறது.

கலாட்டா கல்யாணம் 1968 - நல்ல இடம் நீ வந்த இடம்
*1965இல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா சிவாஜியுடன் ஜோடி சேர மூன்று வருடங்களானது. 

*எம்.ஜி.ஆருக்கு திரையுலக போட்டியாளராக கருதப்படுகிற சிவாஜிக்கு முதல் முறையாக ஜெயலலிதா 1968இல் கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்தார். 

*எம்.ஜி.ஆரை விட்டுவிட்டு ஜெயலலிதா சிவாஜிக்கு முதல் முறையாக ஜோடி சேர்ந்த இடமும் நல்ல இடம் என்ற பொருளில் கவிஞர் வாலி எழுதிய பாடல் "நல்ல இடம் நீ வந்த இடம்"

நல்ல இடம் நீ வந்த இடம் 

வர வேண்டும் காதல் மகராணி 

இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும்

இப்பாடல் வலையொளி - https://www.youtube.com/watch?v=JEP3FYuJq7c

குமரிக் கோட்டம் 1971 - என்னம்மா ராணி பொன்னான மேனி 
*1971இல் இருந்து எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா அன்பில் பிணக்கு ஆரம்பமானது என கிசுகிசுக்கப்பட்டது. 

*திரையுலகில் தன்னை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மறந்துவிட்டாரோ என்று பொருள்படும் வகையில் 1971இல் கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய பாடல் "என்னம்மா ராணி பொன்னான மேனி".

என்னம்மா ராணி பொன்னான மேனி

ஆல வட்டம் போட வந்ததோ 

ஏறி வந்த ஏணி தேவை இல்லை 

என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ

இப்பாடல் வலையொளி - https://www.youtube.com/watch?v=eRPx9EVbkdA

சவாலே சமாளி 1971 - சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?
*1971-1973 காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் 5 படங்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்து எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா உறவை முறித்துக்கொண்டார் என்று அறியப்படுகிறது இதே காலகட்டத்தில் தான் "சோபன் பாபு - ஜெயலலிதா" கதையும் கிசுகிசுக்கப்பட்டது.

*எம்.ஜி.ஆர் தயவு இல்லாமல் ஜெயலலிதா சுதந்திர பறவை ஆகிவிட்டார் என பொருள்படும் வகையில் 1971இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் "சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

தென்றலே உனக்கேது சொந்த வீடு?

உலகம் முழுதும் பறந்து பறந்து

ஊர்வலம் வந்து விளையாடு

மரத்தில் படரும் கொடியே

உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?

மண்ணில் நடக்கும் நதியே

உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்?

உங்கள் வழியே உங்கள் உலகு

இந்த வழிதான் எந்தன் கனவு

பழத்தை கடிக்கும் அணிலே

இன்று பசிக்கின்றதோ? பழம் ருசிக்கின்றதோ?

பாட்டு படிக்கும் குயிலே

நீ படித்ததுண்டோ? சொல்லி கொடுத்ததுண்டோ?

நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்

நினைத்த படியே நடக்கவேண்டும்

வளரும் தென்னை மரமே

நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்

வணங்கி வளையும் நாணல்

நீ வளைவதை போல் தலை குனிவதில்லை

பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்

பாவை உலகு மதிக்க வேண்டும்

இப்பாடல் வலையொளி - https://www.youtube.com/watch?v=-HtWVJO_RF0

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...