Chocks: கடன் அரசியல்

Monday, November 16, 2020

கடன் அரசியல்

கடன் அரசியல் 

"உயிருள்ள மனிதர்கள்" மேலும் தலைமுறை மனிதர்களை உருவாக்கிடும் வல்லமை படைத்தவர்கள் அதே பாணியில் "உயிரற்ற பணம்" மேலும் பணத்தை உருவாக்கிடும் வல்லமை படைத்தது. மனிதன் குட்டியிடுவது விலங்குகள் குட்டியிடுவது போல பணமும் "வட்டி" என்ற குட்டியிடும் வேலையை செவ்வனே செய்துவிடும். கொஞ்சம் சிரமப்பட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணத்தை சேர்த்துவிட்டு சரியான முதலீட்டில் பணத்தை போட்டால் அப்பணம் "பணங்களை" தரும். குடும்பம் நடத்தவும் தொண்டு செய்யவும் பணம் தான் தேவை அதனால் பணத்தை கவனமாக கையாளுங்கள். 
உலகமயமாக்கலின் முக்கிய அங்கம் "வங்கி - கடன்". இதன் எதிரொலியாக பெரும்பாலான வங்கிகளில் "கடன் திருவிழா - லோன் மேளா" துண்டுப்பிரசுரம், கடன் விளம்பர பலகை, ஒரு குடும்பம் சிரித்துக்கொண்டு நிற்கும் விளம்பர படத்தில் கீழே "உடனடி கடன் வசதி உண்டு" என்ற வாசகம் மற்றும் ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடன் நகைகளை அடகு வைப்பதாக விளம்பர படம் இடம் பெற்றிருக்கும்.

கடன் வாங்குவது எப்படி திருவிழாவாகும்? 

அது எப்படி மகிழ்ச்சியாகும்? 

அது எப்படி மேளாவாகும்? 

கடன் என்றைக்கும் கொடுப்பவருக்கு தானே லாபம்! 

கடன் வாங்குவோர் சரியாக கட்டவில்லை என்றால் கஷ்டம் தானே!

ஆதிகால பண்டமாற்றம் முறையில் இருந்து நிகழ்கால பணத்தாள்கள் புழக்கத்தில் பெரும்பாலும் கடன் வாங்குவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிப்போனது. கடன் நிச்சயம் தேவை என்றால் வாங்கிடுங்கள் ஆனால் வங்கிகளில், செயலிகளில் கடன் எளிதாக கிடைப்பதால் மட்டுமே மயங்கி கடனை பெற்று எதையும் வாங்கிட முயலாதீர்கள். ஏனெனில் கடன் வாங்குவதை கவனத்துடன் அணுக வேண்டும் இல்லையென்றால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குதல், அக்கடனை அடைக்க பொருட்களை விற்றல், வட்டிக்கு வட்டி என வாழ்க்கை முழுவதும் கடனுக்கு வாழ வேண்டி இருக்கும். திராணிக்கு மீறி கடன் வாங்காமல் "விரலுக்கு ஏற்ற வீக்கம்" என்பது போல நடந்து கொள்வது நல்லது.

இன்றைய உலகில் சேமிக்க தெரிந்தவரே பிழைக்கத் தெரிந்தவர்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...