Chocks: சொற்களின் பொருள் அறிவோம்

Monday, November 16, 2020

சொற்களின் பொருள் அறிவோம்

சொற்களின் பொருள் அறிவோம் 
பே

*பே என்றால் "அச்சம்" என பொருள்படும்.

*நாட்டார் தெய்வமான பேச்சியம்மன் = பே(ய்)ச்சி + அம்மன் = அச்சமூட்டும் தெய்வம் என்று பொருள்படும்.

கம்னாட்டி

*கைம்பெண்டாட்டி = Widow

*கம்னாட்டி = Come Naught Boy 

*அக்காலத்தில் "கைம்பெண்டாட்டி வளர்த்த கழிசடை" என்றும்  "Hey, Come Naught Boy" என்றும் தந்தையில்லாத குழந்தைகளை ஆங்கிலேயர்கள் திட்டுவார்கள். 

*நாளடைவில் கைம்பெண்டாட்டி மற்றும் Come Naught Boy இரண்டும் ஒன்றாகி இறுதியாக "கம்னாட்டி" என்ற வசவு சொல்லாக மாறிப்போனது.

பேமானி 

*பேமானி என்ற சொல்லின் வேர் பெர்சியா ஆகும்.

*பேமானி = பே + மானி = இல்லை + மானம் = நேர்மை அற்றவர் (Opposite to அபிமானி).
கஸ்மாலம் 

*கஸ்மலம் = கஸ் + மலம் = கசியும் + கசடு = அழுக்கு உடையவன் 

*கஸ்மலம் என்ற சம்ஸ்கிருத சொல் "கஸ்மாலம்" என்ற வசவு சொல்லானது.

கம்முன்னு கிட 

*கம்முன்னு கிட = Be Calm 

*Be Calm என்ற ஆங்கில சொல் தமிழில் காமா இரு (அமைதியா இரு) என்றும் நாளடைவில் "கம்முனு கெட" என்றுமானது.

கிண்டி 

*கிண்டி = Country Side 

*ஆங்கிலேயர்கள் அடையார் பகுதிக்கு அடுத்துள்ள மேற்கு பகுதியை "கன்ட்ரி சைடு" என அழைத்தனர் அதுவே காலப்போக்கில் மருவி கன்ட்ரி, கன்டி, கிண்டி என்றானது.

பஜாரி 

*பஜார் = பஜாரி

*பஜாரில் மலிவு விலையில் பேரம் பேசி பொருட்களை வாங்க சண்டை போடும் பெண்கள் "பஜாரி" என்றழைக்கப்பட்டனர்.

பேஜார் 

*பேஜார் = Don't Bother Me

*ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களிடம் சில இந்திய பிச்சைக்காரர்கள் உதவி கேட்க அவர்கள் "Don't Bother Me" என்றனர்! அதுவே Bother (பாதர்), பாஜர், பேஜார் என்றானது.

புறம்போக்கு 

*பென் புரோக் = புறம் போக்கு

*வரி வசூலாகாத காலனிய நாட்டில் உள்ள நிலங்களை அரசு நிலமாக்க ஆங்கிலேயர்கள் "பென் புரோக்" (Lands of Earl of Pembroke Act / Pembroke Roads Act) என்னும் சட்டத்தை இயற்றினர்.

*அப்படி யாருக்கும் சொந்தமில்லாத நிலங்கள் Pembroke, Poramboke, புறம்போக்கு என்றானது.
பேட்டை ரவுடி 

*பேட்டை பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் "பேட்டை" ரவுடி என்று அழைக்கப்பட்டனர்.

*ஆரம்ப கால சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தான் இப்பெயர் உருவானது என்று கூறப்படுகிறது.

அப்பாலிக்கா

*அப்பாலிக்கா = அப்பால் = தொடர்நிலைத் தொடர், அப்புறம், அதன்மேல்.

மெர்சல் 

*மெர்சல் = மெரிசல் > மிரட்சி = அச்சம் / பயம் / பயங்கரம்.

தெனாவட்டு 

*தெனாவட்டு = தினவு + அட்டு = தினவட்டு = அதீத திமிர், அடங்க மறுப்பு, இறுமாப்பு.

*தினவட்டு என்பதே மருவி தெனாவட்டு என்றாகியது .

*தினவு = அதீதமான உணர்ச்சி, அடக்க இயலாத உணர்வு, அரிப்பு.

*அட்டு = அட்டுதல் = சேர்த்தல், கூட்டுதல், மிகுத்தல்.

நினைவேக்கம் (Nostalgia)

*நினைவு + ஏக்கம் = நினைவேக்கம்

*நினைவேக்கம் என்றால் "இளமைக்கால வாழ்க்கையில் நாம் அனுபவித்த சுகமான நினைவுகள் மற்றும் அன்று போல் இன்று இல்லையே என்ற ஏக்கம்" எனப்படும்.

*இளமைக்காலத்தில்  மணமான / மணமாகாத வாழ்க்கை, சுதந்திரமான கால சூழல், உடல் ஆரோக்கியம், விருப்ப உணவுகள் போன்றவை பெரும்பாலும் முதுமைக் காலத்தில் மாறிவிடும் என்பதால் இளைமைக்கால வாழ்க்கையின் நினைவுகளை நினைவில் கொள்வது. 

*இளமைக்காலத்தில் நாம் கேட்ட பாடல்கள், பார்த்த படங்கள், உற்ற நண்பர்கள், உறவாடிய உறவுகள், உண்ட உணவுகள், வாய்த்த காதல்கள் போன்றவைகளை நீங்கா நினைவுகளாக எண்ணி நினைவேக்கம் கொள்கிறோம் ஆனால் உண்மையில் நாம் நினைத்து மெச்சி கொள்வதோ நமது இளமைக்கால வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை தான்.

பண்பாடு

*பண்பாடு = வெளிப்பாடு

*பண்பாடு தனி நபர் சார்ந்து இயங்காது மாறாக ஒரு குழுவாக தான் இயங்கும்.

*தனி நபர் குறித்த பார்வை என்றால் அது "குணம்" எனப்படும்.

*திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு, ஐரோப்பா பண்பாடு, அமெரிக்க பண்பாடு, ஆப்பிரிக்கா பண்பாடு என பல பண்பாட்டு பிரிவுகள் உண்டு.

*பண்பாடு என்றால் நாகரிகம், நாகரிகம் என்றால் வெளிப்பாடு அவ்வகையில் "பண்பாடு என்றால் வெளிப்பாடு".

*கூடி வாழ்தல், விருந்தினர் உபசரிப்பு, உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், பெற்றோரை பேணுதல், கல்வியறிவு பெறுதல் போன்றவை பொது பண்பாட்டின் கூறுகளாகும். 

*மானம் காக்க பயன்படும் கோவணம் என்பதும் பண்பாடு தான்!

*நாட்டார் தெய்வத்திற்கு படையலிடப்படும் கறி விருந்து என்பதும் பண்பாடு தான்!

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

2 comments:

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...