Chocks: உயிரினங்கள் குறித்த பார்வை

Saturday, November 21, 2020

உயிரினங்கள் குறித்த பார்வை

உயிரினங்கள் குறித்த பார்வை

குறிப்பு

உயிரின வரலாற்றை ஒரு சில பக்கங்களில் அடக்கிட இயலாது இருப்பினும் நான் படித்த, கேட்ட, உணர்ந்த புதைபடிமவியல், மானுடவியல், தொல்லியல் செய்திகளை சில பக்கங்களில் பகிர முயற்சி செய்து இதனை எழுதியுள்ளேன். மேலும் உயிரினங்களின் கால அளவை நிர்ணயம் செய்வதில் விஞ்ஞானிகள் வேறுபடுவதால் வெவ்வேறு ஆய்வு தரவுகளை பொறுத்து கால அளவு மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

சுருக்கம் 
  1. முகவுரை
  2. குரங்கு பங்காளி
  3. ஆப்பிரிக்க பூர்வீகம்
  4. நவீன வளர்ச்சி யுகம் 
  5. உயிரியல் தோற்றம் 
  6. உலகளாவிய பொதுவான மூதாதையர்
  7. பரிணாம வளர்ச்சி 
  8. உயர் விலங்கினம் முதனி 
  9. ஹோமோ இனம் 
  10. ஹோமோ சேப்பியன்ஸ் வளர்ச்சி 
  11. முடிவுரை 
  12. பின் குறிப்பு 
  13. விவரணைகள் 
முகவுரை

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு கோட்பாட்டின் அடிப்படையில் பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்கள் கடந்து 457.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பமமும் 454.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியும் உருவானது. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு உயிரினங்கள் பூமியில் பரிணமித்தது. இதில் பூமியில் வாழும் எல்லா உயிரினத்திற்கு மூல உயிரினம் தெய்வீக சக்தியால் உருவானது என்ற மூட நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்து பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்று எடுத்துரைத்து மனித பரிணாம வளர்ச்சி துறையை விரிவு செய்தவர் சார்லஸ் டார்வின். இவரின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக மரபியல் ரீதியாக மனிதனின் 99% டி.என்.ஏ சிம்பன்சியின் டி.என்.ஏவை ஒத்திருப்பதன் மூலம் சிம்பன்சி மனிதனின் நெருங்கிய உறவினர் ஆகிறது.

குரங்கு பங்காளி

பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆணிவேர் ஒரு பழமையான மூதாதையரிடமிருந்து எழுந்தன என்பதை அறிவியல் சமூகம் நன்கு ஏற்றுக் கொண்ட வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் நாலாம் தலைமுறையை பார் நாவிதனும் சித்தப்பன் ஆவான் ஆகிய தமிழ் பழமொழி முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது தவறு ஏனெனில் உயிரியல் கோட்பாட்டின் படி மனிதர்களும் குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையரைப் (Common Ancestor) பகிர்ந்து வெவ்வேறு பரிணாம பாதைகளை கொண்டு வளர்ந்துள்ளது. இவ்வகையில் குரங்குகள் நமது முன்னோர் அல்ல பங்காளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்க பூர்வீகம்

2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. அவ்வகையில் ஹோமோ சேபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி. ஆப்பிரிக்க மக்களாகிய நாம் சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில் ஆப்பிரிக்க தேசத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு தேசங்களில் ஐக்கியமானோம். அப்படி நாம் சென்ற தேசங்களில் திராவிடர்கள், ஆரியர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம். 
நவீன வளர்ச்சி யுகம் 

மனிதன் உயிர் வாழ்வதற்கு உண்ணுதல் அவசியம் அதற்கு உணவு தானியங்கள் தான் ஆதாரம். மனித கூட்டம் பெருகியதால் உணவின் தேவை அதிகரித்தது. நாளடைவில் உணவு தேடி சென்ற சமூகம் உணவு உற்பத்தி (விவசாயம் - விவசாயிகள்) செய்யும் சமூகமாக மாறியது. விவசாய வளர்ச்சியில் உள்ள நுண்ணரசியல் காரணமாக தான் பழங்கால பொதுவுடைமை சமூகம் உடைந்தது, மதங்கள் உருவானது, சாதிகள் வந்தது, மேட்டுக்குடி தோன்றியது, அடிமை முறைக்கு கொண்டு சென்றது, நிலவுடைமையாக வளர்ந்தது, முதலாளித்துவமாக மாறியது. வெகு சில இடங்களில் சோசலிசம் கம்யூனிசம் உருவாகியுள்ளது.
உயிரியல் தோற்றம் 

பரிணாம உயிரியலில் உயிரற்ற கரிம சேர்மத்திலிருந்து (Organic Compounds) முதல் உயிரினம் மிக எளிமையாகவும் படிப்படியான செயல்முறை மூலம் இன்றைய பல உயிரின வடிவங்களும் உருவாகியுள்ளது என்பது அபியோஜெனெஸிஸ் (Abiogenesis). இனப்பெருக்கம் (Reproduction) மூலம் புதிய உயிரினங்கள் மற்ற உயிரினங்களிலிருந்து மட்டுமே உருவாகி வருகின்றன என்பது பயோஜெனெஸிஸ் (Biogenesis). 
உலகளாவிய பொதுவான மூதாதையர்

400 கோடி ஆண்டுகளுக்குப் முன்பு உலகளாவிய பொதுவான மூதாதையர் (LUCA - Large Universal Common Ancestor) பிறந்தது. ஹைட்ரோதெர்மல் வென்ட்களிலிருந்து (Hydrothermal Vents) ஹைட்ரஜன் வாயுவை ஆக்சிஜனேற்றும் ஆற்றலை LUCA பெற்றது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் வாயுவிலிருந்து கார்பன் மற்றும் நைட்ரஜன் செல்களின் கட்டுமான தொகுதிகள் கிடைத்தன. மேலும் நொதிகளை (Enzymes) உருவாக்க LUCA ஹைட்ரோதெர்மல் வென்ட் அருகிலுள்ள இரும்பு - கந்தகம் ரசாயனங்களை பயன்படுத்தியது. ஆய்வுகளின் அடிப்படையில் LUCA உயிரினம் இயற்கையாகவே ஹைட்ரோதெர்மல் வென்ட்களில் உருவாகும் அமினோ அமிலங்களை (Amino Acids) மட்டுமே நம்பியிருக்க வேண்டும். LUCA உயிரினம் டி.என்.ஏவை (D.N.A) விட ஆர்.என்.ஏவை (R.N.A) அடிப்படையாகக் கொண்டது. மேலும் பூமியின் முதல் உயிரினம் LUCA என உறுதி செய்யப்படவில்லை ஆனால் இன்றைக்கு வாழும் சந்ததியினர் LUCA அடிப்படையில் அமைந்துள்ளதாக நிறுவப்பட்டுள்ளது.

Hydrothermal Vents -> Oxidising Hydrogen Gas / Carbon - Nitrogen / Iron - Sulfur Enzymes / Amino Acids -> LUCA
பரிணாம வளர்ச்சி 

*380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு LUCA உயிரினத்தில் இருந்து டி.என்.ஏ (D.N.A) செயல்பாட்டுடன் கரு (Nucleus) இல்லாத புரோகாரியாட்டிக் (Prokaryotes) உயிரினம் பரிணமித்தது.

*இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் புரோகாரியாட்டிக் (Prokaryotes) உயிரினத்தின் பிரிவாக கொண்டு பாக்டீரியா (Bacteria) மற்றும் ஆர்க்கியா (Archaea) உயிரினம் பரிணமித்தது.

Prokaryotes -> Bacteria / Archaea 

*350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை செல் (Single Cell) உயிரினங்களின் பழமையான புதைபடிவங்கள் (Fossil) கண்டறியப்படுகிறது.

*215 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரிய ஒளி (Sunlight) மற்றும் கார்பன் டைஆக்சைடை (Carbon Dioxide) ஆகியவற்றை உள்வாங்கி கொண்டு துணை தயாரிப்பாக ஆக்ஸிஜனை (Oxygen) வெளியிடுவதன் மூலம் ஆற்றலைப் (Engery) பெறும் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) திறன் தொடங்கியது.

*200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு LUCA உயிரினத்தில் இருந்து சிக்கலான உள் உறுப்புகளுடன் (Complex Organs) டி.என்.ஏ (D.N.A) செயல்பாட்டுடன் கரு கொண்ட யூகேரியாட்டிக் (Eukaryotes) உயிரினம் பரிணமித்தது.

*ஒரு செல்லினம் மற்றொரு செல்லினத்தை மூழ்கடிக்கும்போது யூகாரியோடிக் செல்கள் உருவாகி இருவரும் ஒன்றென இணக்கமாக வாழ்ந்து எண்டோசைம்பியோசிஸ் (Endosymbiosis) நடவடிக்கையால் மூழ்கிய பாக்டீரியா இறுதியில் இழைமணியாக (Mitochondria) மாறி யூகாரியோடிக் செல்களுக்கு ஆற்றலை (Energy) வழங்குகிறது. அனைத்து யூகாரியோடிக் செல்களின் கடைசி பொதுவான மூதாதையருக்கு இழைமணி இருந்தது. மேலும் பாலியல் இனப்பெருக்கத்தையும் (Sexual Reproduction) உருவாக்கியது. இதில் மரபணுக்கள் டி.என்.ஏ (D.N.A) வடிவத்தில் சேமிக்கப்பட்டன. 

*ஆர்.என்.ஏ (R.N.A) செயல்பாடு டி.என்.ஏ (D.N.A) செயல்பாடாக மாறியது உயிரின வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

LUCA -> Life With RNA

Prokaryotes -> Life With DNA Without Nucleus

Eukaryotes -> Life With DNA Within Nucleus

*150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு யூகேரியாட்டிகை (Eukaryotes) பிரிவாக கொண்டு வெவ்வேறு காலகட்டத்தில் தாவரங்கள் (Plants), பூஞ்சைகள் (Fungi) மற்றும் விலங்குகள் (Animals) தனித் தனி பரம்பரைகளாகப் பரிணமித்தது.

Eukaryotes -> Plants / Fungi / Animals
*90 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் பல்லுயிர் (Multi Cell) உயிரினம் உருவாகிறது. 

*40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூச்சிகள் (Insects) பரிணமித்தது மற்றும் தாவரங்கள் மர தண்டு (Stems) வடிவம் பெற்றுள்ளது.

*39.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கால் விலங்குகள் டெட்ராபோட் (Tetrapods) நிலத்தை அடைக்கின்றது.

*டெட்ராபோட் பிரிவை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு காலகட்டத்தில் நீந்துவன (Aquatic), ஊர்வன (Reptiles), பறப்பன (Birds), பாலூட்டி (Mammals) பரிணமித்தது.

Tetrapods -> Aquatic, Reptiles, Birds, Mammals

*37.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீன் மற்றும் நான்கு கால் நில விலங்குகளுக்கு இடை நிலையான டிக்டாலிக் (Tiktaalik) உருவாகியது.

*24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு டைனோசர் (Dinosaur) வகைகள் உருவாகியது.

*15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தெரோபோட்ஸ் (Theropods) எனப்படும் இறைச்சி உண்ணும் டைனோசர்களின் குழுவிலிருந்து பறவைகள் (Birds) இனம் பரிணமித்தது.

Theropods -> Birds

*6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் நிகழ்வு (Cretaceous–Paleogene Extinction) மூலம் டைனோசர் ஊர்வன உட்பட பல்வேறு உயிரினங்களின் ஒரு பகுதி அழிகிறது. 

*இந்த அழிவானது பாலூட்டிகள் (Mammals) பூமியில் ஆதிக்கம் செலுத்திட வழி வகுக்கிறது.

Cretaceous–Paleogene Extinction -> Killed Many Life -> Mammals Started Ruling

உயர் விலங்கினம் முதனி 

*6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடமிருந்து ஸ்ட்ரெப்ஸிர்ஹினி (ஈரமான மூக்கு - Wet Nose) மற்றும் ஹாப்ளோரினி (உலர்ந்த மூக்கு - Dry Nose) முதனி பரம்பரை பரிணமித்தது.

Primates -> Strepsirrhine / Haplorhini

*ஸ்ட்ரெப்ஸிர்ஹினியை அடிப்படையாக கொண்டு லெமூரிபார்ம்ஸ் பரம்பரை பரிணமித்தது.

Strepsirrhines -> Lemur / Loris

*ஹாப்ளோரினியை அடிப்படையாக கொண்டு சிமியன் மற்றும் டார்சியர் பரம்பரை பரிணமித்தது.

Haplorhini -> Simian / Tarsier

*5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிமியன் பரம்பரையிலிருந்து புதிய உலக குரங்கு (New World Monkey) இனம் பரிணமித்தது.

Simians -> New World Monkeys

*2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீதமுள்ள சிமியன் பரம்பரையிலிருந்து பழைய உலக குரங்கு (Old World Monkeys) இனம் மற்றும் வாலில்லா மனிதக் குரங்கு இனம் (Apes) பரிணமித்தது.

Simians -> Old World Monkeys / Apes

Hominoidea Super Family -> Apes

Apes - Human Last Common Ancestor
*1.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் குரங்கு இனத்திலிருந்து கிப்பன் குரங்கு பரம்பரை பரிணமித்தது.

Hominoidea Super Family -> Hylobatidae Family (Lesser Apes) -> Hylobates Genus

Gibbons - Human Last Common Ancestor

*1.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் குரங்கு இனத்திலிருந்து பெரு மனிதக் குரங்கு இனம் பரிணமித்தது.

Hominoidea Super Family -> Hominidae Family (Great Apes) 

*1.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரு மனிதக் குரங்கு இனத்திலிருந்து ஒராங்குட்டான் குரங்கு பரம்பரை பரிணமித்தது.

Hominidae Family -> Pongidae Sub Family -> Pongo Genus

Orangutan - Human Last Common Ancestor

*1.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரு மனிதக் குரங்கு இனத்திலிருந்து கிளை பரிணமித்தது.

Hominidae Family -> Homininae Sub Family

*90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிளையிலிருந்து கொரில்லா பரம்பரை பரிணமித்தது.

Homininae Sub Family -> Gorillini Tribe -> Gorilla Genus

Gorilla - Human Last Common Ancestor

*80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிளையிலிருந்து துணை குடும்பம் பரிணமித்தது.

Homininae Sub Family to Hominini Tribe

*70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து சிம்பன்சி பரம்பரை பரிணமித்தது.

*மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் கடைசி பொதுவான மூதாதையர் இந்த காலகட்டத்தை சேர்ந்தது தான்.

Hominini Tribe -> Pan Genus

Chimpanzee - Human Last Common Ancestor
           
*70 - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து ஆர்டிபிதேகஸ் பரம்பரை பரிணமித்தது.

*மனிதன் மற்றும் குரங்கு பண்புகளை கொண்ட ஆர்டிபிதேகஸ் பரம்பரையானது நான்கு கால்களில் நடக்காமல் இரண்டு கால்களில் நடக்க தொடங்கியது.

Hominini Tribe -> Ardipithecus Genus (West - Central Africa)

*42 - 38 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து ஆஸ்ட்ராலோபிதீசின் பரம்பரை பரிணமித்தது.

Hominini Tribe -> Australopithecus Genus (East Africa)

*27 - 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து பராந்த்ரோபஸ் பரம்பரை பரிணமித்தது.

Hominini Tribe -> Paranthropus Genus (East Africa)

ஹோமோ இனம் 

*25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து நவீன மனிதர்களின் பிரிவை உள்ளடக்கிய ஹோமோ பரம்பரை பரிணமித்தது.

Hominini Tribe -> Homo Genus (Africa)
*24 - 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஹபிலிஸ் இனம் ஆப்பிரிக்காவில் பரிணமித்தது.

*ஹோமோ ஹபிலிஸ் இனமானது பெரிய கால் விரல்களையும் தாடையின் நீட்சி குறைந்த அளவினையும் கற்கருவிகள் பயன்பாட்டினையும் கொண்டது.

Homo Genus -> Homo Habilis Species (East And South Africa)

*19 - 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ருடால்பென்சிஸ் இனம் ஆப்பிரிக்காவில் பரிணமித்தது.

Homo Genus -> Homo Rudolfensis Species (East Africa)

*18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ எரெக்டஸ் இனம் பரிணமித்தது.

*ஹோமோ எரெக்டஸ் இனமானது தொடர்ந்து நேராக நிமிர்ந்து நடக்கவும் நெருப்பின் பயன்பாட்டினையும் அறிந்து கொண்டது.

Homo Genus -> Homo Erectus Species (North, East, South Africa - Central Asia)

*7 - 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Heidelbergensis Species (Africa - Europe - Asia)

*4 லட்சம் - 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ நியாண்டர்தால் இனம் பரிணமித்தது.

*கரடு முரடான கருவிகள் பயன்பாட்டினை கொண்டாலும் ஹோமோ நியாண்டர்தால் இனமானது வேட்டையாடும் திறனில் பின்தங்கியது.

Homo Genus -> Homo Neanderthals Species (Europe - Southwest to Asia)

*4 - 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து டெனிசோவன் இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Denisovan Species (Southeast to Asia)

*4 - 1.25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ரோடீயென்சிஸ் இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Rhodesiensis Species (East Africa)

*3.35 - 2.36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ நலேடி இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Naledi Species (South Africa)

*1 லட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஃப்ளோரெசென்சிஸ் இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Floresiensis Species (Asia)

*3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ சேப்பியன்ஸ் இனம் பரிணமித்தது.

Homo Genus -> Homo Sapiens Species (Africa To Worldwide)

*70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ லுசோனென்சிஸ் இனம் பரிணமித்தது.

*2007இல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு 2019இல் தான் ஹோமோ லுசோனென்சிஸ் தனி இனம் என்று வரையறுக்கப்பட்டது.

*இதன் தோராயமான கால மதிப்பீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Homo Genus -> Homo Luzonensis Species (Asia)

ஹோமோ சேப்பியன்ஸ் வளர்ச்சி 

*ஹோமோ சேப்பியன்ஸ் இனமே நவீன மனித வாழ்வின் தொடக்கமாகும்.

*கற்கருவிகளுடன் எலும்பாலான கருவி, குத்தி கிழிக்கும் கருவி, நெம்புகோல் கருவி உட்பட பல்வேறு கரடு முரடான கருவிகளை பயன்படுத்தினான்.

*வேட்டையாடி உணவை சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தவன் ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு கண்டங்களில் குடியேறினான்.

*50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனத்திடம் உருவான அறிவு புரட்சியானது இயற்கையையும் பிற உயிரினங்களையும் ஆள தொடங்கி விட்டது. 

*25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தை தவிர பிற ஹோமோ இனங்கள் மறைந்தன.

*10,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் வேளாண்மை, நாய்கள் வளர்ப்பு, நகரங்கள் வளர்ந்தது.

*5,000 ஆண்டுகளுக்கு முன்பு தொன்மையான எழுத்து வடிவங்கள் நடைமுறைக்கு வந்தன.

*3,500 ஆண்டுகளுக்கு முன்பு மெசொப்பொத்தேமியாவில் வசித்த சுமேரியர்கள் உலகின் முதல் நாகரிகத்தை உருவாக்கினர்.

முடிவுரை 

50 ஆண்டுகளுக்கு முன்பு கணினி உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களை ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் அறிவார்ந்த மனிதர்கள் கண்டுபிடிக்க அதற்கு ஆதாரமாக பரிணாம வளர்ச்சி குறித்து நான் எங்கோ அமர்ந்து எழுதிய பதிவை நீங்கள் எங்கோ அமர்ந்து படிக்க ஏதுவாக இருக்கிறது. இந்த பரிணாம வளர்ச்சியானது தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் மாற்று உயிரினத்துடன் உறவு கொண்டும் கணினியின் துணைக்கொண்டும் எதிர்க்காலத்தில் நம்மை விட திறமையான உயிரினமாக “சூப்பர் ஹோமோ” பிறக்க வழிவகை செய்யக்கூடிய வாய்ப்பு அதிகம் என கூறிக் கொண்டு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

பின் குறிப்பு 

மனிதக் குரங்கு இனத்திலிருந்து (Hominoidea) ஹோமோ பரம்பரை (Homo Genus) பிறகு அப்பரம்பரையிலிருந்து ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) பரிணமித்துள்ளது. எப்படி பிறந்தோம்? என்பது ஓரளவு அறியப்பட்டாலும் நம்முடைய பரிணாம வளர்ச்சியின் இடைவெளியில் (Human's Last Common Ancestor  / Missing Link) உள்ள உயிரினம் என்ன என்பதன் தெளிவு இன்னும் புலப்படவில்லை.

*நாம் ஏன் பிறந்தோம்? 

*நாம் இறந்த பின் எங்கு செல்வோம்? 

*இன்னும் அறியப்படாத மனித இனங்கள் ஏதேனும் உள்ளதா? 

*நம்முடன் இருந்த ஹோமோ இனங்கள் எப்படி மறைந்தார்கள்?

*மனித இனம் ஏன் மற்ற இனத்தை விட அறிவாளியாக இருக்க வேண்டும்? 

மேலும் விடை தெரியா பல்வேறு கேள்விகளுக்கான பதிலை பெற்றிட தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 

Evolution Of Life Timeline


History Of Life On Earth


Endosymbiosis


Evolution FAQ


Life's Origin


Humans Tree


Research For Life Like Cells Creation


Fish To Humans


Ape To Humans


Early Life To Humans


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. மிக அருமையான கட்டுரை...நான் எனது வாட்ஸ்ஆப்பில் இதை தொடராகவே எழுதி வருகிறேன்...கட்டுரையாளரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -