Chocks: ஏலியன்ஸ் குறித்த பார்வை

Saturday, November 21, 2020

ஏலியன்ஸ் குறித்த பார்வை

ஏலியன்ஸ் குறித்த பார்வை

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. கோல்டன் ரெக்கார்ட்
  3. அறிவியல் ஆராய்ச்சிகள்
  4. போலி அறிவியல் அல்ல
  5. சில கேள்விகள் 
  6. முடிவுரை 
  7. குறிப்பு 
  8. விவரணைகள் 
முகவுரை 

பிரபஞ்ச ரகசியங்கள் முழுமையாக உணரப்படவில்லை என்பதன் இடைவெளியை பயன்படுத்தி தான் மதங்கள் எல்லாம் உருவாகின. இதற்கிடையில் அறிவியல் ரீதியில் பிரபஞ்ச ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. பூமியில் வாழும் பெரும்பாலான மக்கள் வளர்ப்பு பிராணிகளை தவிர மற்ற பிராணிகளை மதிப்பதில்லை. ஒரு வேளை வேற்று கிரக உலகில் வாழும் ஏலியன்ஸ் நம்மையும் அவ்வாறு அந்நிய பிராணிகள் போல துச்சமாக எண்ணி காட்சி கொடுக்காமல் இருக்கிறதோ என எண்ண தோன்றுகிறது. 

கோல்டன் ரெக்கார்ட்
விஞ்ஞானி கார்ல் சேகன் (Carl Sagan) அறிவுரையின் பேரில் வேற்று கிரக உலகம் குறித்து அறிய கோல்டன் ரெக்கார்ட் (Golden Record) என்ற கோல்டன் டிஸ்க் (Golden Disk) 1977இல் ஏவப்பட்ட வோயேஜர் (Voyager) விண்கலத்தில் சேர்க்கப்பட்டது. கோல்டன் ரெக்கார்ட் பதிவுகளில் பூமியில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை சித்தரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிகள், படங்கள் உள்ளன. தொலைதூர எதிர்காலத்தில் விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் தென்பட்டால் அவர்களுடன் நமது உலகத்தின் கதையை பகிர்ந்து கொள்ளவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

போலி அறிவியல் அல்ல

வேற்று கிரக ஆராய்ச்சி குறித்து அறிவியல் ரீதியாக அணுகாமல் அதன் தேடலை நீர்த்துப் போக செய்யும் வகையில் போலி அறிவியல் (Pseudoscience) கண்ணோட்டத்தில் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு ஆராய்ச்சியின் நோக்கத்தை சிலர் திசைமாற்ற முயல்வது வேதனைக்குரியது.

ஆனால் உண்மையில் வேற்று கிரக ஆராய்ச்சி போலி அறிவியல் பிரிவை சார்ந்தது அல்ல என்பதற்கு சான்றாக நாசாவின் கீழ்கண்ட ஆராய்ச்சி குறிப்பை படித்தால் தெளிவு கிடைக்கலாம்.


அறிவியல் ஆராய்ச்சிகள்

விண்வெளி ஆராய்ச்சி போல பூமியின் கீழ் குறிப்பாக ஆழ் கடல் பகுதி, மலைகள் முழுமையாக ஆராயப்பட வேண்டும். முதலில் நமது பூமியில் இன்னும் அறியப்படாமல் இருக்கும் பக்கங்களை புரட்டி படித்து விட்டால் அங்கிருந்து வேற்று கிரக உலகம் குறித்த ஆராய்ச்சி கண்ணிக்கு செல்லலாம். தொடர் ஆராய்ச்சி மூலம் வேற்று கிரக உலகம் நிருபிக்கப்பட்டால் அங்கு உயிர்கள் வாழ்ந்து வருவது குறித்து அறிந்து கொள்ள முடியும். 

சில கேள்விகள் 

*கருந்துளை (Black Hole), வெள்ளைத் துளை (White Hole), புழுத்துளை (Worm Hole) மற்றொரு உலகிற்கு நுழைவு வாயிலா?
*மனிதன் இறந்தால் கண்ணாடி உடைந்தது போல அல்லது கடிகாரம் நின்றது போல அவ்வளவு தானா?

*நியூட்ரினோஸ் (Neutrinos) ஒளியின் வேகத்தை விட (Speed of Light) வேகமாக செல்ல முடியுமா?

*உலகம் என்பது டென்னிஸ் பந்து கோடு போல ஆரம்பம் மற்றும் முடிவு கிடையாதா?

*பெரு வெடிப்பு உருவான வரலாறு தெரிந்துவிட்டது ஆனால் ஏன் உருவானது?

முடிவுரை 

விஞ்ஞானிகள் ஏலியன்ஸ் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்ய காரணம் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படை எண்ணம் தான். அறிவியல் துறையில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இருப்பதில் முதன்மையானது வேற்று கிரக உலகம் தான். வேற்று கிரகவாசிகள் மனிதர்களை விட முன்னேறிய உயிரினமாக அல்லது நுண்ணியிரியாக இருக்கலாம். ஏலியன்ஸ் குறித்து மேலும் அறிய 1947 Roswell UFO Incident, Area 51 என நிறைய செய்திகள் இருக்கிறது. நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் இணைய வழியில், புத்தக வழியில் மேலும் படிக்கலாம்.
அசாதாரண உரிமைகோரல்களுக்கு அசாதாரண சான்றுகள் தேவை (Extraordinary Claims Require Extraordinary Evidence) என்ற கார்ல் சேகன் கூற்றுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். 

குறிப்பு 

*விண்வெளியில் இறக்கும் நட்சத்திரங்களின் விளைவு கருந்துளை (Black Hole).

*இதில் ஈர்ப்பு விசையை இழுக்கும் சக்தி மிகவும் வலுவாக உள்ளது ஒளி கூட தப்பிக்க முடியாது.

*கருந்துளை எல்லையை நிகழ்வுத் பரப்பெல்லை (Event Horizon) எனப்படும்.

*உயர் நிறை நட்சத்திரங்கள் (Massive Stars) கருந்துளையாக இறக்கும்

*நடுத்தர நிறை நட்சத்திரங்கள் (Average Stars) வெள்ளை குள்ளனாக இறக்கும்.

*நம் சூரியன் நடுத்தர நிறை நட்சத்திரம் (Average Star) தான் அவ்வகையில் நம் சூரியன் சிவப்பு இராட்சத நட்சத்திரமாக (Red Giant Star) மாறி 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை குள்ளனாக (White Dwarf) இறக்கும். 
*Robert Dicke coined the term Black Hole with reference to "Black Hole of Calcutta" Prison. 

*This Calcutta Prison was defined that no one can escape alive if they enter the Prison.

*Later, John Wheeler popularised the term Black Hole in Science World.

*It is important to note that John Wheeler was the colleague of Robert Dicke. 

*John Wheeler was officially credited to coin the term Black Hole but it was Robert Dicke who termed it first.

விவரணைகள் 

The Golden Record


What Is Area 51 And What Goes On There?


The Black Hole Fifty Years After : Genesis Of The Name


Black Hole Of Calcutta


What Really Happened At Roswell?


Study Provides New Explanation For Neutrinos Anomalies In Antarctica


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -