Chocks: ஜெமினி கணேசன் குறித்த பார்வை

Friday, November 20, 2020

ஜெமினி கணேசன் குறித்த பார்வை

ஜெமினி கணேசன் குறித்த பார்வை

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. முத்துலட்சுமி ரெட்டி
  3. குடும்ப வாழ்க்கை 
  4. துணுக்குகள் 
  5. முடிவுரை 
முகவுரை 

1949இல் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு விண்ணபித்தவர் இயக்குனர் கே.பாலசந்தர் அப்போது அவருக்கு வேலை இல்லை என்று பதில் கூறியவர் ஆர்.கணேசன். இந்த ஆர்.கணேசன் பின்னாட்களில் இயக்குனர் கே.பாலசந்தரின் விருப்பமான நடிகராக மாறிப்போனார் அந்த ஆர்.கணேசன் தான் ஜெமினி கணேசன். சிவாஜி கணேசன் பிரபலமான காரணத்தால் ஆர்.கணேசன் தன் தாய் வீடான ஜெமினி ஸ்டுடியோவில் இருக்கும் ஜெமினி பெயரை இணைத்து ஜெமினி கணேசன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

முத்துலட்சுமி ரெட்டி

ஜெமினி கணேசனின் சின்ன தாத்தா மகள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஜெமினி கணேசனின் தந்தை இறந்த பிறகு அவர் சொத்துக்களுக்கு கார்டியனாக செயல்பட்டவர் முத்துலட்சுமி ரெட்டி. ஜெமினி கணேசனின் தாய் தந்தையர் பிராமணர்கள். முத்துலட்சுமி ரெட்டியின் தந்தை பிராமணர், தாய் இசை வேளாளர். 

குடும்ப வாழ்க்கை 

அலமேலு, புஷ்பவல்லி, சாவித்திரி என மூன்று பெண்களை மணந்து எட்டு குழந்தைகளை பெற்றவர் ஜெமினி கணேசன். குறிப்பிட்டு சொல்லும் பொருட்டு ஜெமினி கணேசன் - அலமேலு இணையரின் மகள் பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ். ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி இணையரின் மகள் பிரபல பாலிவுட் நடிகை ரேகா. தமிழ் சினிமாவில் நாடறிந்த முதல் காதல் ஜோடி ஜெமினி கணேசன் - சாவித்திரி. ஜெமினி கணேசன் - சாவித்திரி இணையரின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி வழி பேரன் அருண் Y.G.M.மதுவந்தியின் கணவர். தன் 78 வயதில் ஜீலியானா ஆண்ட்ரூ என்ற சிங்கப்பூர் இந்தியரை காதலித்து ஜெமினி கணேசன் அவருடன் வாழ்ந்து வந்தார்.

துணுக்குகள் 

*ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த திரைப்படங்கள் வல்லவனுக்கு வல்லவன் 1965 மற்றும் தாயுள்ளம் 1952. 

*ஜெமினி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் முகராசி 1966.

*ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே திரைப்படம் இயக்குனர் கே.பாலசந்தரின் "நான் அவனில்லை" 1975. 

*ஜெமினி கணேசன் தாமரை மணாளன் என்பவருடன் இணைந்து இயக்கிய ஒரே திரைப்படம் "இதய மலர்" 1976. 

*எஸ்.பி.பி முதலாவதாக பாடி இரண்டாவதாக வெளிவந்த "இயற்கை என்னும் இளையகன்னி" பாடல் ஜெமினி கணேசனுக்காக பாடியது அத்திரைப்படமே "சாந்தி நிலையம்" 1969. 

*திரையுலகில் ஜெமினி கணேசனுக்குரிய குரல் என ரசிகர்கள் கருதிய திரையிசை குரல் "பி.பி.ஸ்ரீனிவாஸ்".

*1970களுக்கு பிறகு தனி ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் ஜெமினி கணேசன் பெரும்பாலும் நடித்ததில்லை. 

*1977இல் ஒரு நிருபரை ஹோட்டலில் சந்தித்து உரையாடினார் ஜெமினி கணேசன் அப்போது ரஜினி யதார்த்தமாக அங்கு வருகை தர ஜெமினி கணேசன் அந்நிருபரிடம் இவன் மிகப்பெரிய ஹீரோவாக வருவான் என்றார்.

*பத்ம ஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றாலும் ஜெமினி கணேசனின் சிறந்த விருது மக்கள் கொடுத்த "காதல் மன்னன்" விருது, சிலர் இவரை "சாம்பார் நாயகன்" என்பர்.

முடிவுரை 

இயக்குனர் கே.பாலச்சந்தர் தான் இயக்கி ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த புன்னகை (1971) மற்றும் சிவகுமார் கதாநாயகனாக நடித்த அக்னி சாட்சி (1982) ஆகிய இரண்டையும் மிகவும் பிடித்த திரைப்படங்களாக சொல்வதுண்டு. இந்த புன்னகை திரைப்படத்தில் ஒரு மருத்துவமனையில் ஜெமினி கணேசன் "இவ்வளவு நாள் வாழ்ந்தோமே! எதையாவது சாதிச்சு இருக்கோமானு பார்த்தா ஒண்ணுமே இல்லை! சரி முழுமையான வாழ்க்கையாவது வாழ்ந்திருக்கோமானு பார்த்தா அதுவுமில்ல" என்று வசனம் பேசுவார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஜெமினி கணேசன் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்றே நான் எண்ணுகிறேன். 

பிறப்பு = 17-நவம்பர்-1920 

இறப்பு = 22-மார்ச்-2005

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...