ஏன் கடலில் அலைகள் உருவாகிறது? 
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ஓதங்கள் (Tides)
*கடலில் மிகப்பெரிய அலையான ஓதங்கள் உருவாக சந்திரனின் ஈர்ப்பு விசை (Moon's Gravity) முக்கிய காரணியாகும்.
*காரணம் சந்திரனின் நிறை (Mass) அதிகம் மற்றும் பூமியின் நிறை 70%  கடலால் சூழப்பட்டது (Large Volume of Water Content is Important). 
*எனவே அவற்றிற்கு இடையிலான ஈர்ப்பு விசையும் அதிகம்.
*கடல் என்ற பிரமாண்டத்துடன் ஒப்பிடும் போது குளம், ஆறு, ஏரியின் நிறை சொற்பம். 
*எனவே அவற்றிற்கு இடையிலான ஈர்ப்பு விசை குறைவாகவே இருக்கும். 
*ஆகவே தான் குளம், ஆறு, ஏரி சந்திரனின் ஈர்ப்பு விசையால் பெரிய அலைகள் உண்டாவதில்லை.
*ஒவ்வொரு 24 மணி 50 நிமிடங்களுக்கு பூமி இரண்டு உயர் அலைகளையும் இரண்டு குறைந்த அலைகளையும் அனுபவிக்கிறது. 
*ஒவ்வொரு 12 மணி 25 நிமிடங்களுக்கும் உயர் அலை நிகழ்வு. 
*உயர் அலை முதல் குறைந்த அலை வர 6 மணி 12.5 நிமிடங்கள் ஆகும்.
கடற்கரை அலைகள் (Seashore Waves)
*கடல் மேற்பரப்பில் அலைகள் பொதுவாக காற்றினால் (Wind) உருவாகின்றன. 
*காற்று வீசும் போது அது உராய்வு (Friction) மூலம் ஆற்றலை மாற்றுகிறது.
*கடல் மேற்பரப்பில் அலையின் அளவு காற்றின் வேகம், காற்றின் காலம், காற்று வீசும் பகுதி, எவ்வளவு தூரம் தடையின்றி வீச முடியும் ஆகியவற்றைப் பொறுத்தது. 
*இரண்டும் ஒன்று போல் உணரப்பட்டாலும் ஓதம் (Tide) வேறு அலை (Wave) வேறு.
Glimpse
Tides (Big Waves) = Moon's Gravity 
Waves (Seashore Waves) = Wind & Air Pressure
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.


 
 
 
 
 
No comments:
Post a Comment