Chocks: கறி வரலாறு

Sunday, November 15, 2020

கறி வரலாறு

கறி வரலாறு

*கறி என்ற தமிழ் சொல் ஆங்கில மொழிக்கு கொடுத்த சொல் கொடைகளில் ஒன்றாகும் (கறி = Curry).

*இன்று கறி என்ற சொல் பொதுவாக ஆட்டுக்கறி, கோழிக்கறி, மாட்டுக்கறி போன்ற இறைச்சியை குறிக்கிறது.

*ஆனால் கறி என்ற சொல்லிற்கு முதற்பொருள் மிளகு என்பதாகும்.

*உறைப்புக்கு பயன்படுத்தப்படும் பொருள் மிளகு ஆகும்.

*மிளகை உரித்த கருமிளகை கருங்கறி என்றனர். 

*இக்கறியிட்டு செய்கின்ற பொருட்கள் எல்லாம் கறி என்று பெயரிடப்பட்டது. 

*காயும் கறியும் இட்டு சமைப்பதாலே "காய்கறி" என்று பெயரிடப்பட்டது.

*துணையாக வைத்து கொள்ளகூடிய கூட்டு "தொடுகறி" என்று பெயரிடப்பட்டது 

*பிறகு கூடுதல் உறைப்புக்காக இக்கறியிட்டு சமைக்கப்படுகிற இறைச்சி உணவுக்கு "கறி" என்று பெயரிடப்பட்டது 

*நாளடைவில் இறைச்சி துண்டுகளுக்கு "கறி" என்று பெயரிடப்பட்டது காரணம் உறைப்புக்கு வேறு சொல் கிடைத்ததால்.

*அப்படி உறைப்பிற்கான இன்னொரு தாவரம் 13ஆம் நூற்றாண்டிலே வெளிநாடுகளில் இருந்து அறிமுகமானது 

*அறிமுகமான தாவரம் மிளகு போல் இருந்ததனாலே, அதை காயவைத்த வற்றலாக்கி தான் பயன்படுத்த முடியும் 

*அதற்கு மிளகாய் வற்றல் என்றும் மிளகாய் என்றும் பெயரிடப்பட்டது

*இதனை மிளகினுடைய ஒரு மாற்று வடிவமாக கொண்டார்கள் 

*மேலும் மிளகு போல உறைப்புடையது காயாக இருக்கிறது என்பதால் மிளகாய் என்று பெயரிடப்பட்டது

கறி குறித்த சொல்லின் இன்னொரு வரலாறு என்னவென்றால், 

கறித்தல் = கடித்தல் = துண்டாக்குதல் 

*கருங்கறியுடன் துண்டு துண்டாக சமைக்கக்கூடிய இறைச்சி "இறைச்சி கறி" என்றானது.

*கருங்கறியுடன் துண்டு துண்டாக சமைக்கக்கூடிய காய் "காய் கறி" என்றானது.


குறிப்பு 

கறி = Pepper.

வெள்ளை மிளகு = White Pepper.

கருங்கறி = Black Pepper.

மிளகாய் = Chili.

Pepper is a member of the Piper Plant.

Chili is a member of Capsicum Plant.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...