Chocks: உலகமயமாக்கல்

Sunday, November 15, 2020

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்
சுருக்கம் 
  1. முகவுரை
  2. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்
  3. ஒப்பந்த நிறுவனங்கள்
  4. முக்கிய கருவிகள்
  5. முடிவுரை
  6. விவரணைகள் 
உலகமயமாக்கல் உலகமயமாக்கல் என்பது உலகளவில் மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் செயல்முறையாகும். 1990 களில், மேற்கத்திய உலகில் பனிப்போருக்குப் பிறகு, இந்தியாவில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்திய பிறகு, சர்வதேச இணைப்புகள் உலகமயமாக்கலாக மாறியது.

முகவுரை

*பண்டைய வணிகம் = பொருட்களின் வணிக பரிமாற்றம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நடைபெற்றது (Direct Sales - Immediate).

*உலகமயமாக்கல் வணிகம் = பொருட்களின் வணிக பரிமாற்றம் இடைத்தரகர்கள் மூலம் நடைபெறுகிறது (Indirect Sales - Intermediary).
அதிகார மையமான அரசு ஆட்சி புரிவதற்கு வெளிப்படையான அல்லது மறைமுகமான வரிகளை சார்ந்துள்ளது. அரசு கடன் தொகை, வட்டித் தொகை, வைப்புத் தொகை ஆகியவற்றை செலுத்துவதற்கும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வரி வசூல் ஒரு முக்கிய கருவியாக செயல்படுகிறது. இவ்வாறு, வரி வசூல் அரசின் நிதி நிலைத்தன்மைக்கும், அடிப்படைவசதி (கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலைவசதி) மேம்பாட்டிற்குமான ஆதாரமாகிறது.

இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்

இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) இங்கிலாந்து வென்றிருந்தாலும், பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், காலனிய நாடுகளை நிர்வகிக்க இங்கிலாந்துக்கு சிரமம் ஏற்பட்டது, இது இந்தியா உட்பட பல ஆங்கிலேய காலனிய நாடுகள் விடுதலை பெற்றதற்கான ஒரு காரணமாக மாறியது.

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களில் அணுகுண்டு வீசி, போரினை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தியது. இக்காலகட்டத்தில், இங்கிலாந்தை காட்டிலும் அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் ஆளுமைத்திறனையும் ஸ்திரத்தன்மையுடன் முன்னேற வலுப்படுத்திக் கொண்டது.

ஒப்பந்த நிறுவனங்கள்

பெரும் மந்தநிலை (Great Depression) மற்றும் இரண்டாம் உலகப் போர் (1929-1945), 20 ஆம் நூற்றாண்டின் பொருளாதார சுதந்திரத்திற்கான மிகுந்த அச்சுறுத்தல்களை உருவாக்கிய காலமாக இருந்தன. இதனால், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார சேதங்களைச் சரி செய்யவும், உலக பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவும் பல ஒப்பந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
World Bank - ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் வறுமையை குறைப்பது.

UN - மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவது.

UNESCO - உலகம் முழுவதும் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவது.

IMF - அனைத்துலக நாணய ஒத்துழைப்பை ஊக்குவிப்பது.

GATT - வர்த்தக தடைகளை நீக்கி சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவது. 

WHO - ஒவ்வொரு தனிநபருக்கும் மிக உயர்ந்த அளவிலான சுகாதார சேவையை நிறுவுவது. 

WEF - உலகளாவிய வணிக, அரசியல் மற்றும் கல்வித் தலைவர்களை ஒன்றிணைத்து எதிர்காலத்தை வடிவமைப்பது.

EU - ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் அரசியல் தொகுதியாக செயல்படும் 27 ஐரோப்பா நாடுகளின் குழு.

WTO - GAATக்கு மாற்றாக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது.
முக்கிய கருவிகள் 

Money - பணம் (Dollars) 

Power - அதிகாரம் (Super Power) 

Logistics - தளவாடங்கள் (Sea, Train, Bus, Truck, Air) 

Production - உற்பத்தி பெருக்கல் (Multiplication)

முடிவுரை 

பண்டைய காலத்தில், இங்கிலாந்து காலனித்துவத்தின் (Colonisation - Imperialism) மூலம் பல நாடுகளை கைப்பற்றி, வகுத்து ஆட்சி (Divide & Rule) செய்து உலகை ஆண்டது. நவீன காலத்தில், சர்வதேச வர்த்தகத்தில், டாலர்களை ஒரு பரிமாற்ற நாணயமாக (Medium of Exchange) பயன்படுத்தி, அமெரிக்கா உலகமயமாக்கலின் (Globalisation - Capitalism) மூலம் உலகை ஆட்சி செய்கிறது.

உலகமயமாக்கலை நோக்கி நகர்ந்து விட்ட உலகத்தில் தற்சார்பு என்பது தேன் தடவிய வார்த்தை ஜாலங்கள் தவிர ஒன்றுமில்லை. ஏனெனில், தற்போதைய பொருளாதார உலகில் உலகமயமாக்கல் அரசியலில் இருந்து 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.' ஆனால் வலதுசாரிகளின் பாசிச அடிப்படையிலான உலகமயமாக்கல் அரசியலுக்கு இடதுசாரிகளின் சோசலிசம் அடிப்படையிலான உலகமயமாக்கல் அரசியல் மக்களுக்குரியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Modern Globalism functions in a centralized manner, much like Capitalism, while Blockchain technology operates on a decentralized model, partly like Communism. Due to a lack of trust, unclear regulations, threats from traditional banks, and scalability problems, blockchain is mostly unorganized and functions in the informal sector as of now. However, there is hope for its future development.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. அருமையான கட்டுரை...இதை எனது வாட்ஸ்ஆப் லிங்கில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அனுப்பினேன்...இன்னும் இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை தமிழில் தாங்கள் எழுத கேட்டுக்கொள்கிறேன்...நன்றி

    ReplyDelete

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...