Chocks: உலகமயமாக்கல்

Sunday, November 15, 2020

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்
சுருக்கம் 
  1. நவீன உலகமயமாக்கல் 
  2. உலகமயமாக்கல் வளர காரணிகள்
  3. உலகமயமாக்கல் ஒப்பந்த நிறுவனங்கள்
  4. உலகமயமாக்கல் முக்கிய கருவிகள்
  5. உலகமயமாக்கல் அரசியல்
நவீன உலகமயமாக்கல் 

*பழங்காலத்தில் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியுடன் நேரடி வணிக பரிமாற்றம் இருந்தது (Direct Sales - Immediate)

*உலகமயமாக்கல் காலத்தில் பொருட்களுக்கு அதிகபட்ச வரியுடன் மறைமுக வணிக பரிமாற்றம் இருக்கிறது (Indirect Sales - Delayed)
*அதிகார மையங்கள் வெளிப்படையான வரிகளை அல்லது மறைமுக வரிகளை சார்ந்துள்ளது.

*வரி வசூல் என்பது கடன் தொகை, வட்டி தொகைவைப்பு தொகை, நலத்திட்டங்கள் போன்றவைக்கு முக்கிய கருவி ஆகும்.

உலகமயமாக்கல் வளர காரணிகள்

*இரண்டாம் உலகப் போரில் (1939-1945) இங்கிலாந்து வென்றிருந்தாலும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை கண்டதால் இக்காலகட்டத்தில் இந்தியா உட்பட பல்வேறு ஆங்கிலேய காலனி நாடுகள் விடுதலை பெற்றது.

*இரண்டாம்  உலகப் போரில் ஜப்பானின் இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டை வீசி அமெரிக்கா போரினை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தியது.

*இக்காலகட்டத்தில் தான் அமெரிக்கா இங்கிலாந்தை காட்டிலும் தன்னுடைய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்திக் கொண்டது.

*பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் 20ஆம் நூற்றாண்டின் பொருளாதார சுதந்திரத்திற்கான பயமுறுத்தும் காலங்களாக இருந்தன (1929-1945).

*எனவே இக்காலகட்ட பொருளாதார சேதங்களை சீர் செய்து உலக பொருளாதாரத்தை சமநிலைப்படுத்த பல ஒப்பந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

உலகமயமாக்கல் ஒப்பந்த நிறுவனங்கள்
World Bank - ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் வறுமையை குறைப்பது.

UN - மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவது.

UNESCO - உலகம் முழுவதும் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவது.

IMF - அனைத்துலக நாணய ஒத்துழைப்பை ஊக்குவிப்பது.

GATT - வர்த்தக தடைகளை நீக்கி சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவது. 

WHO - ஒவ்வொரு தனிநபருக்கும் மிக உயர்ந்த அளவிலான சுகாதார சேவையை நிறுவுவது. 

WEF - உலகளாவிய வணிக, அரசியல் மற்றும் கல்வித் தலைவர்களை ஒன்றிணைத்து எதிர்காலத்தை வடிவமைப்பது.

EU - ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் அரசியல் தொகுதியாக செயல்படும் 27 ஐரோப்பா நாடுகளின் குழு.

WTO - GAATக்கு மாற்றாக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது.
உலகமயமாக்கல் முக்கிய கருவிகள் 

Money - பணம் (Dollars) 

Power - அதிகாரம் (Super Power) 

Logistics - தளவாடங்கள் (Sea, Train, Bus, Truck, Air) 

Production - உற்பத்தி பெருக்கல் (Multiplication)

உலகமயமாக்கல் அரசியல்

*அக்காலத்தில் இங்கிலாந்து காலனித்துவம் (Colonisation) மூலம் பல நாடுகளை கைப்பற்றி உலகை (Divide & Rule) ஆட்சி செய்தது.

*இக்காலத்தில் அமெரிக்கா உலகமயமாக்கல் (Globalisation) மூலம் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனையாக டாலர் (Dollar) மூலம் உலகை ஆட்சி செய்கிறது.

*கள யதார்த்தம் என்னவெனில் "தற்சார்பு" என்பதெல்லாம் தேன் தடவிய வார்த்தை ஜாலங்கள் ஏனெனில் சென்ற உலகமும் இன்றைய உலகமும் நாளைய உலகமும் உலகமயமாக்கல் அரசியலில் இருந்து "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது". 

*ஆனால் வலதுசாரிகளின் பாசிச அடிப்படையிலான உலகமயமாக்கல் அரசியலுக்கு இடதுசாரிகளின் சோசலிசம் அடிப்படையிலான உலகமயமாக்கல் அரசியல் ஓரளவுக்காவது மக்களுக்குரியதாக இருக்கும் என நம்பலாம்.
Tit-Bits

*Modern Globalism operates on centralised mode (Crony Capitalism) while Blockchain Technology operates on decentralised mode (Communism).

*Due to lack of trust, absence of clarity, bankers threat and scalability issues Blockchain Technology is unorganised as informal sector and still there is a HOPE in the long run.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. அருமையான கட்டுரை...இதை எனது வாட்ஸ்ஆப் லிங்கில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அனுப்பினேன்...இன்னும் இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை தமிழில் தாங்கள் எழுத கேட்டுக்கொள்கிறேன்...நன்றி

    ReplyDelete

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...