நீலிக்கண்ணீர் கதை
*காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வணிகன் முதல் மனைவி நீலியை கொலை செய்து விட்டு இரண்டாவது திருமணம் புரிந்தான்.
*ஒரு நாள் அவ்வணிகன் வேலை காரணமாக பழையனூர் பயணமானான்.
*அச்சமயத்தில் இறந்து பேயாகிவிட்ட நீலி கணவனை பழிவாங்க முதல் மனைவி போல உருமாற்றம் கொண்டு ஒரு தீய்ந்த கட்டையை குழந்தை ஆக்கி அவன் மனைவி என்று கண்ணீருடன் கதறினாள்.
*வணிகன் அவளை முதல் மனைவி என ஏற்க மறுத்ததால் பழையனூர் வேளாளர்களிடம் இவ்வழக்கு வந்தது.
*வணிகன் இங்கு நிற்பவள் தனது முதல் மனைவி நீலி இல்லையென்றும் இவளோடு வாழ சென்றால் என்னை கொன்றுவிடுவாள் என்றும் கோரிக்கை வைக்கிறான்.
*வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு பேசிய போது நீலிக் கண்ணீருடன் நிற்க அவள் இடுப்பிலிருந்த குழந்தையோ இவனை அப்பா என அழைத்தது.
*அதனை நம்பி வேளாளர்கள் நீ இவளோடு ஒரு நாளாவது தங்கிப் பார், ஒரு வேளை இவள் உன்னை கொலை செய்து விட்டால் நாங்கள் 70 வேளாளர்களும் தீக்குளிக்கிறோம் என்றனர்.
*வழக்கு விசாரணை மய்யத்தில் நீலி அழுதே காரியம் சாதித்து கணவனை தன்னுடன் வர வழி செய்தாள்.
*அப்படி தன்னுடன் வந்து தங்கிய முதல் இரவில் நீலிப்பேய் வணிகனைக் கொன்று விட்டு மறைந்தது.
*இதனால் வேதனையுற்ற 70 வேளாளர்களும் தமது வாக்கைக் காப்பாற்றுவதற்காக மறு நாள் காலையில் ஊரறிய தீ வைத்து கருகி பரிதாபமாக இறந்தனர்.
*நீலிக்கண்ணீர் கதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நாட்டார் மரபு வழிக் கதை என்று கூறப்படுகிறது.
*இன்றும் பெண்கள் கண்ணீர் சிந்தினால் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள் என்று வசைபாடுவது குறிப்பிடத்தக்கது.
*பழையனுர் நீலிக் கதையில் கணவனை பழிவாங்க நீலி வடிக்கும் கண்ணீர் பொய்யானது அதன் அடிப்படையில் உருவான சொல்லே நீலிக்கண்ணீர்.
குறிப்பு
*நீலிக்கண் என்றால் நெற்றிக்கண் என்றும் கூறுவர்.
*நீலிக்கதை என்றொரு சமண கதை குண்டலகேசி காப்பியத்தில் உண்டு.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
😄😄😄
ReplyDeleteஅருமை
ReplyDelete