Chocks: நீலிக்கண்ணீர் கதை

Sunday, November 15, 2020

நீலிக்கண்ணீர் கதை

நீலிக்கண்ணீர் கதை

*காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வணிகன் முதல் மனைவி நீலியை கொலை செய்து விட்டு இரண்டாவது  திருமணம் புரிந்தான். 

*ஒரு நாள் அவ்வணிகன் வேலை காரணமாக பழையனூர் பயணமானான்.

*அச்சமயத்தில் இறந்து பேயாகிவிட்ட நீலி கணவனை பழிவாங்க முதல் மனைவி போல உருமாற்றம் கொண்டு  ஒரு தீய்ந்த கட்டையை குழந்தை ஆக்கி அவன் மனைவி என்று கண்ணீருடன் கதறினாள். 

*வணிகன் அவளை முதல் மனைவி என ஏற்க மறுத்ததால் பழையனூர் வேளாளர்களிடம் இவ்வழக்கு வந்தது.

*வணிகன் இங்கு நிற்பவள் தனது முதல் மனைவி நீலி இல்லையென்றும் இவளோடு வாழ சென்றால் என்னை கொன்றுவிடுவாள் என்றும் கோரிக்கை வைக்கிறான். 

*வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு பேசிய போது நீலிக் கண்ணீருடன் நிற்க அவள் இடுப்பிலிருந்த குழந்தையோ இவனை அப்பா என அழைத்தது.

*அதனை நம்பி வேளாளர்கள் நீ இவளோடு ஒரு நாளாவது தங்கிப் பார், ஒரு வேளை இவள் உன்னை கொலை செய்து விட்டால் நாங்கள் 70 வேளாளர்களும் தீக்குளிக்கிறோம் என்றனர். 

*வழக்கு விசாரணை மய்யத்தில் நீலி அழுதே காரியம் சாதித்து கணவனை தன்னுடன் வர வழி செய்தாள். 

*அப்படி தன்னுடன் வந்து தங்கிய முதல் இரவில் நீலிப்பேய் வணிகனைக் கொன்று விட்டு மறைந்தது.

*இதனால் வேதனையுற்ற 70 வேளாளர்களும் தமது வாக்கைக் காப்பாற்றுவதற்காக மறு நாள் காலையில் ஊரறிய தீ வைத்து கருகி பரிதாபமாக இறந்தனர்.

*நீலிக்கண்ணீர் கதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நாட்டார் மரபு வழிக் கதை என்று கூறப்படுகிறது. 

*இன்றும் பெண்கள் கண்ணீர் சிந்தினால் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள் என்று வசைபாடுவது குறிப்பிடத்தக்கது.

*பழையனுர் நீலிக் கதையில் கணவனை பழிவாங்க நீலி வடிக்கும் கண்ணீர் பொய்யானது அதன் அடிப்படையில் உருவான சொல்லே நீலிக்கண்ணீர்.
குறிப்பு 

*நீலிக்கண் என்றால் நெற்றிக்கண் என்றும் கூறுவர்.

*நீலிக்கதை என்றொரு சமண கதை குண்டலகேசி காப்பியத்தில் உண்டு.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

2 comments:

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...