Chocks: மதுரை தியேட்டர்கள்

Sunday, December 13, 2020

மதுரை தியேட்டர்கள்

மதுரை தியேட்டர்கள் 

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. தியேட்டர் பெயர்கள் 
  3. எம்.ஜி.ஆருக்கு மீனாட்சி 
  4. சிவாஜிக்கு சென்ட்ரல் 
  5. தியேட்டர்களில் முதல்வன் 
  6. முடிவுரை 
முகவுரை 

திரைப்படங்கள் வெளியாகும் நாளன்று தயாரிப்பாளர்கள் தொலைபேசியில் திரைப்படம் எப்படி போகிறது? மக்களுக்கு படம் பிடித்து இருக்கிறதா? என்று புது திரைப்படம் குறித்த வசூலையும் விமர்சனத்தையும் மதுரை திரையரங்க முதலாளிகளிடம் தான் முதலில் கேட்பார்கள். அந்த அளவுக்கு மதுரை மாநகர மக்களுக்கு திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது சராசரி பொழுதுபோக்கு அம்சத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பாகும். தூங்காநகரமும் சினிமாவும் பிண்ணி பிணைந்ததன் எதிரொலியாக தான் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்க, பிரச்சாரம் தொடங்க மதுரையை தேர்ந்தெடுக்கிறார்கள். 
தியேட்டர் பெயர்கள் 

அக்காலத்தில் மதுரை சுற்றுவட்டத்தில் ~50 தியேட்டர்கள் இருந்ததாக அறியப்படுகிறது இன்றோ ~25 தியேட்டர்கள் தான் இருக்கிறது. மதுரையில் இருந்த பிரபல தியேட்டர்கள் பெயர்கள் தங்கள் பார்வைக்கு.

1. சிடி 
2. மதி 
3. குரு 
4. தேவி 
5. பத்மா 
6. சந்திரா 
7. அமிர்தம் 
8. இம்பீரியல்
9. அலங்கார் 
10. கதிர்வேல் 
11. மிட்லண்ட்
12. கல்லானை 
13. பாண்டியன் 
14. பரமேஸ்வரி
15. தீபா - ரூபா 
16. நியூ சினிமா
17. சக்தி - சிவம் 
18. சோலைமலை 
19. ஷா - ஹாஜிரா
20. ஹரி விக்னேஷ் 
21. ராம் விக்டோரியா
22. வெள்ளைக்கண்ணு
23. அபிராமி - அம்பிகை 
24. அம்பிகா - மூகாம்பிகா
25. பிரியா காம்ப்ளக்ஸ் (சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா)
26. நடனா காம்ப்ளக்ஸ் (நடனா, நாட்டியா, நர்த்தனா)
27. விநாயகர் காம்ப்ளக்ஸ் (சண்முகா காம்ப்ளக்ஸ்)
28. மகாராணி - இளையராணி (தமிழ் - ஜெயா)
29. கலைவாணி (தேவி கலைவாணி)
30. கல்பனா (அண்ணாமலை)
31. சுந்தரம் (ஜாஸ் - அர்ஸ்)
32. மணி (மணி இம்பாலா)
33. சரஸ்வதி (கோபுரம்)
34. தினமணி (கணேஷ்)
35. கார்த்திக் (விஜய்)
36. ரீகல் (தங்க ரீகல்)
37. நட்ராஜ் (ஜெயம்)
38. மது (வெற்றி)
39. லட்சுமி (ஸ்ரீ விஜயலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்) 
40. சிந்தாமணி (ராஜ் மகால் சில்க்ஸ்)
41. தங்கம் (தி சென்னை சில்க்ஸ்)
42. மீனாட்சி (திருமண மகால்)

எம்.ஜி.ஆருக்கு மீனாட்சி 

*மீனாட்சி திரையரங்கை நிர்வகித்தது லேட் E.M.கோபாலகிருஷ்ணன், லேட் E.M.G.சௌந்தரராஜன். 

*E.M.G நிறுவியது E.M.G யாதவர் கலைக் கல்லூரி, திருப்பாலை, மதுரை.

*மதுரை மீனாட்சி திரையரங்க முதல் படம் எம்.ஜி.ஆரின் "ஒளி விளக்கு" (1968).

*1968க்கு பிறகு வெளியான எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் பல இத்திரையரங்கில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

*மதுரையில் எம்.ஜி.ஆரின் நூறு நாள் திரைப்பட விழாவுக்கு எம்.ஜி.ஆர் அதிகம் பங்கேற்றது மீனாட்சி திரையரங்கில் தான்.

*இப்போது மீனாட்சி திரையரங்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது.

*ரஜினி முருகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. 
சிவாஜிக்கு சென்ட்ரல் 

*சென்ட்ரல் திரையரங்கை நிறுவியவர்கள் சந்தான கிருஷ்ண கோனார், நடராஜா பிள்ளை, கோவிந்தசாமி பிள்ளை மற்றும் சுப்பராம அய்யர். 

*இன்று நடராஜா பிள்ளையின் பேரன் கணேசன் மற்றும் சந்தான கிருஷ்ண கோனாரின் பேரன் கோவிந்தராஜன் ஆகியோரால் நடத்தப்படுகிறது.

*சென்ட்ரலில் சிவாஜி படம் வெளியானாலே பெரும் கொண்டாட்டம் தான். 

*சிவாஜி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாட்களில் சிறப்பு கொண்டாட்டங்களும் உண்டு. 

*சென்ட்ரல் திரையரங்கில் இருக்கும் திருவள்ளுவர் சிலை 1975இல் "பல்லாண்டு வாழ்க" படக்குழு வழங்கிய பரிசாகும். 

*சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரையரங்க காட்சிகள் இங்கு தான் படமாக்கப்பட்டுள்ளன. 

*சென்ட்ரல் திரையரங்குடன் இணைந்து உள்ளே மாட்டு கொட்டகை உள்ளது. 

*இன்று சென்ட்ரல் திரையரங்கில் டிக்கெட் விலை 30, 20 மற்றும் நொறுக்குத்தீனிகள் 5, 10, 15 ரூபாய் ஆனால் வெளியில் உள்ள ஹோட்டல் கௌரியில் காபி விலை 20. 😂
தியேட்டர்களில் முதல்வன் 

*மதுரையில் முதல் திரையரங்கம் "இம்பீரியல் சினிமா" திரையரங்கம்.

*ஆசியாவின் பெரிய திரையரங்கம் தங்கம் தியேட்டர் (54,000 சதுரடி). 

*மதுரையில் முதல் குளிர்சாதன திரையரங்கம் "மினிப்ரியா". 

*மதுரையில் முதல் 70 MM திரையரங்கம் "சினிப்ரியா".

*மதுரையில் முதல் DTS திரையரங்கம் "ரூபா".

*மதுரையில் திரையை மறைக்காத நாற்காலிகள் அமைத்த முதல் திரையரங்கம் "அம்பிகா - மூகாம்பிகா" (இத்திரையரங்கின் திரை விலகல் ரொம்ப பேமஸ்).

முடிவுரை 

*சுகாதாரம் இல்லாத அக்கால தியேட்டர்கள் மூலம் உடல்நலம் கெட்டு நேயர்கள் நோயாளிகள் ஆனது உண்டு இருப்பினும் அப்போது இருந்த மகிழ்ச்சி சுவடுகள் இன்று இல்லை என்றே அறியப்படுகிறது. 

*இன்று திரையரங்கங்கள் பரிணாம வளர்ச்சியில் IMAX, DND, OTT என வளர்ந்து இருக்கிறது.

*பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையே ஆனால் ஏதோ ஒரு குறை இந்த புதிய திரையரங்க வளர்ச்சியில் இருக்கத்தான் செய்கிறது. 

Every Theatre Conveys "Reel Story" & "Real Story" 

Every Theatre Express "Memories". 

திரையரங்கம் குறித்து எழுத இன்னும் ஏகப்பட்ட செய்திகள் இருக்கிறது ஆனால் இத்துடன் முடிக்கிறேன். 

விவரணைகள் 

Madurai Cinema Theatres Directory


Madurai's Central In Operation Since 1939


Flashbacks Of Film Crazed Town


தூங்காநகர் மதுரையின் அழிந்த அடையாளங்கள்


2.7 Acres Of Encroached Temple Land Retrieved


It's Curtains For Madurai's Chinthamani


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள்

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள் பொருளடக்கம்  முகவுரை மகாத்மா காந்தியின் படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்...