Chocks: விமானத்தில் மின்னல் விபத்துக்கள்

Sunday, December 13, 2020

விமானத்தில் மின்னல் விபத்துக்கள்

விமானத்தில் மின்னல் விபத்துக்கள்

சுருக்கம் 
  1. 1963 பான் அம் விமானம் 214
  2. 1971 லான்சா விமானம் 508
  3. 2019 ஏரோஃப்ளோட் விமானம் 1492 
  4. பிற மின்னல் விபத்துகள் 
  5. பாதுகாப்பு அம்சம் 
1963 பான் அம் விமானம் 214

*பான் அம் விமானம் 214 சான் ஜுவான்விலிருந்து பால்டிமோர் மற்றும் பிலடெல்பியாவுக்கு வழக்கமாக செல்லும் விமானப் பயணமாகும்.

*8 டிசம்பர் 1963 அன்று பால்டிமோரில் இருந்து பிலடெல்பியாவுக்கு பறந்து கொண்டிருந்தபோது ​​மின்னல் தாக்கி மேரிலாந்தின் அருகே இவ்விமானம் விபத்துக்குள்ளானது.

*முதலாம் எண் எரிபொருள் தொட்டியில் எரிபொருள் / காற்று கலவையின் பற்றவைப்பைத் தூண்டியது மின்னல்.

*மின்னல் தாக்கியதின் விளைவாக இடது வெளிப்புற இறக்கை வெடித்து சிதறி விமானம் கட்டுப்பாட்டை இழந்து 81 பேரும் இறந்தனர்.

*இவ்விபத்தே விமானத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் மின்னல் விபத்து ஆகும்.
1971 லான்சா விமானம் 508

*லான்சா விமானம் 508 லிமாவிலிருந்து பெருக்கு வழக்கமாக செல்லும் விமானப் பயணமாகும்.

*24 டிசம்பர் 1971 அன்று லிமாவிலிருந்து பெரு செல்லும் வழியில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளாகி 92 பேரில் 91 பேர் இறந்தனர். 

*இவ்விபத்தே விமானத்தில் பதிவான மோசமான மின்னல் விபத்தாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

*இவ்விமான விபத்தில் தப்பித்த ஒரே ஒரு பயணி 17 வயதான ஜூலியன் கோய்ப்கே என்ற பெண்மணி ஆவார். 

*9,200 அடி அமேசான் மழைக்காடுகளில் விழுந்து தப்பியவ ஜூலியன் கோய்ப்கே 11 நாட்கள் காட்டில் சுற்றி திரிந்த போது காட்டில் மரங்களை வெட்டும் தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டார்.
2019 ஏரோஃப்ளோட் விமானம் 1492 

*ஏரோஃப்ளோட் விமானம் 1492 என்பது மாஸ்கோவிலிருந்து மர்மன்ஸ்க்க்கு வழக்கமாக செல்லும் விமானப் பயணமாகும்.

*5 மே 2019 அன்று 78 பேருடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியதால் விமானத்தில் மின்சாரம் செயலிழந்து அவசர தரையிறக்கத்திற்காக மாஸ்கோவுக்கு திரும்பியது. 

*விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் இறந்தனர்.

*துன்பியல் செய்தி என்னவென்றால் சில பயணிகள் தங்கள் பயண உடைமைகளை மீட்டெடுப்பதை நிறுத்தியிருந்தால் மேலும் சில உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
பிற மின்னல் விபத்துகள் 

*1967 இல் இம்பீரியல் ஈரானிய விமானப்படை பறந்த லாக்ஹீட் ஜெட் மின்னல் தாக்கியதில் விபத்துள்ளாகி 23 பேர் இறந்தனர். 

*1971 இல் லான்சா விமானம் பெருவில் விபத்துக்குள்ளானதில் 91 பேர் இறந்தனர். 

*1988 இல் ஜெர்மனியில் ஸ்வரோங்கன் மெட்ரோ விமானம் மின்னல் தாக்கியதால் அதன் இறக்கையை இழந்து 21 பேர் இறந்தனர். 

பாதுகாப்பு அம்சம் 

*தொடர் மின்னல் விபத்தின் எதிரொலியாக 1977 இல் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பறப்பியல் துறைக்கு ஒரு அவசர செய்தியை அனுப்பி "மின்னல் தாக்குதல்களில் இருந்து விமான சேதத்தையும் உயிர் பலியையும் குறைக்க புதிய ஆராய்ச்சிக்கு கோரியது". 

*1986 இல் நாசா குழும்பம் ஆகாயத்தில் மின்னல் விபத்தை தவிர்க்கும் நோக்கில் நீண்டதொரு ஆராய்ச்சியை செய்து விமான வடிவமைப்பில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியது.

விவரணைகள் 

Lightning And The Space Program


Lightning Hitting Airplanes


Highest Death Toll Caused By Lightning (In Flight)


Aircraft Accident Report 


The Double Survival Miracle of Juliane Koepcke


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள்

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள் பொருளடக்கம்  முகவுரை மகாத்மா காந்தியின் படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்...