Chocks: இணைந்த கைகள் திரைப்படம் 1990

Wednesday, January 6, 2021

இணைந்த கைகள் திரைப்படம் 1990

இணைந்த கைகள் திரைப்படம் 1990

*தமிழ் திரையுலகில் பிரமாண்டம் என்பதற்கு இணைந்த கைகள் திரைப்படம் ஒரு முன்னோடி என்றால் மிகையல்ல.

*மேலும் இந்தியாவிலே திரைப்படங்களை பிரமாண்டமாக இயக்க இயலும் என்று பறைசாற்றிய திரைப்படம்.

*இரண்டு கதாநாயகர்கள் கதைக்கு ஹிந்தியில் Sholay திரைப்படம் ஒரு Trendsetter ஆனது போல தமிழில் இணைந்த கைகள் திரைப்படம் ஒரு Trendsetter.

*இந்தியாவில் வெளியிடப்படும் அதே நாளில் வெளிநாடுகளிலும் வெளியிடும் நடைமுறையை அறிமுகம் செய்த திரைப்படம்.

*இத்திரைப்படத்தில் சிறைச்சாலை காட்சி, இடைவேளை காட்சி அற்புதமாக அமைந்திருந்தது.

*ஆபாவாணனின் ஊமை விழிகள், செந்தூர பூவே, உழவன் மகன் திரைப்படங்களின் வெற்றி ஏற்படுத்திய பரபரப்பில் இத்திரைப்படம் வெளியானது.

*ஒரு திரை அரங்கில் டிக்கெட்டிற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவர் இறந்ததாக கூட தகவல் உள்ளது.

*இத்திரைப்படத்தை இயக்கியது பிரபல ஒளிப்பதிவாளர் N.K.விஸ்வநாதன் ஆவார்.

*நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக அறியப்படும் N.K.விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராக அறிமுகமான முதல் திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் சட்டம் என் கையில் திரைப்படமாகும்.

*இன்றைய பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் இணைந்த கைகள் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்துள்ளார்.

*1990களில் Video Cassette புழக்கத்தில் இருந்த காலத்தில் இத்திரைப்பட Video Cassette விற்பனை படுஜோராக இருந்தது.

*S.P.B மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து பாடிய இரு தமிழ் பாடல்களில் ஒன்றாக இப்படத்தில் இடம் பெற்ற "அந்தி நேர தென்றல் காற்று" பாடல் மிக பிரபலம்.

*80s மற்றும் 90s கிட்ஸ்க்கு செம ஜாலியான திரைப்படமாக (Nostalgia) அமைந்தது.

*தமிழ்நாட்டில் 150 நாட்கள், மும்பையில் 80 நாட்கள் ஓடிய திரைப்படம்.

*இத்திரைப்படத்தின் கருவை கொண்டு இன்றைக்கு விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால் அது நிச்சயம் வெற்றிப்படமாக அமையக்கூடும்.

*இத்திரைப்படத்தை தோல்விப்படம் என்று சிலர் சொல்வதுண்டு ஆனால் உண்மையில் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக இணைந்த கைகள் நல்ல வெற்றி திரைப்படம் தான்.
விவரணைகள் 

இணைந்த கைகள் திரைப்படம் 


இடைவேளை காட்சி 


அந்தி நேர தென்றல் காற்று பாடல் 


இணைந்த கைகள் திரைப்படம் பற்றிய காணொளி - 1


இணைந்த கைகள் திரைப்படம் பற்றிய காணொளி - 2


இணைந்த கைகள் திரைப்படம் பற்றிய காணொளி - 3


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...