Chocks: கலைஞர் ஆட்சி சாதனைகள்

Wednesday, January 6, 2021

கலைஞர் ஆட்சி சாதனைகள்

கலைஞர் ஆட்சி சாதனைகள் 
கலைஞரின் ஆட்சி வருட பட்டியல் 
  1. 1969 - 1976 
  2. 1989 - 1991
  3. 1996 - 2001
  4. 2006 - 2011
1969 - 1976 

1. சுற்றுலா வாரியம்.

2. குடிசை மாற்று வாரியம்.

3. குடிநீர் வடிகால் வாரியம்.

4. சேலம் உருக்காலைத் திட்டம்.

5. சிப்காட் தொழில் வளாகங்கள்.

6. மாநிலத் திட்டக் குழு உருவாக்கம்.

7. 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்.

8. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்.

9. இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம் 

10. பூம்புகார் கப்பற் போக்குவரத்துக் கழகம்.

11. மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம்.

12. காவல்துறை மேம்பாட்டுக்கு காவல் ஆணையம். 

13. அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.

14. அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்.

15. ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்.

16. அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம்.

17. சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம்.

18. கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம்.

19. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம். 

20. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்.

21. ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள்.

22. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.

23. பேருந்துகள் நாட்டுடைமை மற்றும் போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம்.

24. 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

25. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம்.

26. பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி.

1989 - 1991 

1. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

2. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு.

3. பெண்களுக்கு சொத்துரிமை வழங்க தனிச் சட்டம்.

4. மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு.

5. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.

6. ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்.

7. வன்னியர் மற்றும் சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட இதுக்கீடு.

8. ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம்.

9. கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்.

10. ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18% இட ஒதுக்கீடு நிர்ணயித்து அதில் பழங்குடி இனத்தவருக்கு 1% தனி இட ஒதுக்கீடு.

11. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்.

12. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி.

1996 - 2001 

1. உழவர் சந்தைத் திட்டம்.

2. வருமுன் காப்போம் திட்டம்.

3. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

4. உயர்கல்வித் துறை உருவாக்கம்.

5. கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்.

6. பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்.

7. நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்.

8. சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம்.

9. கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம்.

10. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

11. கிராமங்கள்தோறும் சிமெண்ட் சாலைகள்.

12. தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கம். 

13. தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம்

14. சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.

15. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்.

16. சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்.

17. உள்ளாட்சி அமைப்பில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு.

18. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்.

19. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்.

20. தென்குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை.

21. பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.

22. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டது.

23. மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.

24. கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீடு.

25. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.

26. வரலாறு காணாத வகையில் ஆறு மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்.

27. 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம் 30. 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.

28. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள்.

29. ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.
 
2006 - 2011

1. கிலோ அரிசி 1 ரூபாய் என மாதம் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம்.

2. பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செரிவூட்டப்பட்ட கோதுமை மாவு சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கும் திட்டம்.

3. ஏழை, எளியோர் பயன்பெற ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருட்கள் ‘மானிய விலை மளிகைப் பொருட்கள்’ என ரூ.50க்கு வழங்கப்பட்டது. 

4. தமிழ்ப் புத்தாண்டை எல்லோரும் கொண்டாட ரூ.1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு அரிசி, பருப்பு, வெல்லம் வழங்கப்பட்டது.

5. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

6. கூட்டுறவுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் பயிர்க் கடனுக்கு வட்டி ரத்து செய்யப்பட்டது.

7. சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850, சன்ன ரக நெல் ரூ.880 என நடுவண் அரசு நிர்ணயித்த விலைகளை உயர்த்தி சாதாரண நெல் விலை ரூ.1,000 எனவும் சன்ன ரக நெல் விலை ரூ.1,050 எனவும் வழங்கப்பட்டது.

8. உழுவோரும் நுகர்வோரும் பயன் அடைய 117 உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டது.

9. கரும்பு விலை டன் ரூ.811 என்பதை நடுவண் அரசு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்த நிலையில் அதை கழக அரசு ரூ.1,000 ஆக உயர்த்தி போக்குவரத்துக் கட்டணமாக ரூ.90 சர்க்கரைக் கட்டுமான ஊக்கத் தொகை ரூ.30 சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,220 வழங்கப்பட்டது.

10. பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50% காப்பீட்டுத் தொகையாக அரசு மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2008 – 2009ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசு மானியம் பெற்று காப்பீடு செய்தனர்.

11. பயிர்க் காப்பீடு செய்யும் 25 லட்சம் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.40 கோடி.

12. ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.03.2006-ம் ஆண்டுவரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட ரூ.5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது 13. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாள் என அரசாணை பிறப்பித்து பள்ளிகளில் கல்வி விழா நடத்தப்பட்டது.

14. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கியக் கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து செய்யப்பட்டது.

15. தொழிற்கல்விச் சேர்க்கைக்கான இருந்ந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

16. ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்புவரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி முதுகலைப் பட்டப் படிப்புவரை நீட்டிக்கப்பட்டது.

17. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 – 2006ல் 61 லட்சம் டன் எனவும் 2008 – 2009ல் 91 லட்சம் டன் எனவும் உயர்ந்தது.

18. கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய அன்ணா தொழிற்நுட்பப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன.

19. பள்ளிகளில் 12-ம் வகுப்புவரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் இயற்றப்பட்டது.

20. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது.

21. அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய்வரை நிதியுதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

22. மக்கள் பயன்பெற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

23. 45 ஆயிரத்து 943 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன.

24. 4 ஆயிரத்து 730 கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டன.

25. தமிழ்நாட்டில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் ரூ .557 கோடி செலவில் கட்டப்பட்டன.

26. தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

27. சென்னையில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த மாநில நூலகம் அமைக்கப்பட்டது.

28. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது.

29. அடையாறு பூங்கா திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது.

30. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

31. இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

32. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

33. ஏறத்தாழ 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

34. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5% தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

35. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயனடைந்தனர்.

36. கடுமையான மாற்றுத் திறன் கொண்டோருக்கான உதவித்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடைந்தனர்.

37. கட்டணம் உயர்த்தப்படாமல் ஏற்கெனவே விடப்பட்ட 9,248 புதிய பேருந்துகளுடன், மேலும் 3,500 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. 

38. அருந்ததியினர் சமுதாயத்தினரின் அவலம் தீர 3% தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

39. மக்களுக்கு எந்தவொரு மதத்தில் இருந்தும் விடுபட உரிமை வேண்டும் என்பதற்காக, கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

40. சென்னை மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் இடையே ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது.

41. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. 

42. 2 வயது முதல் 15 வயதுவரையுள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டையும் வாழைப்பழமும் வழங்கப்பட்டன.

43. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 25 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 624 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

44. 6,87,319 87 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 314 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரத்து 933 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

45. 2 ஆயிரத்து 267 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதுடன் மேலும் 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.

46. ரூ.220 கோடி செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு ரூ.140 கோடி செலவில் 6 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.

47. 6 லட்சத்து 56 ஆயிரத்து 342 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

48. சென்னைப் பெருநகரின் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் போக்கிட வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

49. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென்சென்னை நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

50. மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அக்குழு வழங்கிய 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன.

51. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.

52. அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன 53. 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் 6 ஆயிரத்து 444 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

54. மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச் சுமையைக் குறைத்து மக்களுக்கு வசதிகள் செய்திட, அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.793 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.

55. தருமபுரியில் 'அரூர்' புதிய கோட்டம், திருவண்ணாமலையில் 'தண்டராம்பட்டு', திண்டுக்கல்லில் 'ஆத்தூர்' புதிய வட்டங்கள்.

56. சமத்துவச் சமுதாயம் காணும் நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

57. 1,75,355 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,427 ஏக்கர் இலவச நிலம்.

58. தமிழ்வழியில் பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெரும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. 11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசுத் தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன.

59. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

60. ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

61. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்டிருந்த சலுகைகளை மீண்டும் வழங்கியதுடன் 6வது ஊதியக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ரூ.4,247 கோடி செலவில் இடைக்கால நிவாரணமாக 3 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.

62. அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடம், மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

63. நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் பெயரளவுக்கு வசூலிக்க ஆணை.

64. படித்தும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாத 3,53,488 இளைஞர்களுக்கு 156,15,30,604 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

65. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2,033 கோடி செலவில் 10 ஆயிரத்து 96 ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

66. ரூ.210 கோடி செலவில் 420 பேரூராட்சி, 30 நகராட்சி பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

67. விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

68. 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை.

69. மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போலவே 2006-ம் ஆண்டுக்குப் பிறகு 19 ஆயிரத்து 885 இளைஞர் சுய உதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களும், 10 ஆயிரத்து 772 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு தேவையான நிதியுதவி வழங்கப்பட்டது.

70. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர்வரை வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற்பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் வழியே பெறுவதற்காக, திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம், தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது.

71. 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்ட 61, 687 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 3,276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

72. முதியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.400 என உயர்த்தப்பட்டது.

73. ‘வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டு 9,000 மருத்துவ முகாம்களில் 91 லட்சம் ஏழை எளியோர் பயன்பெற்றனர். மேற்கொண்டு 4,500 முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

74. மூவலூர் இராமாமிர்தம் அம்ம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி, ரூ.10,000 என்பது ரூ.20,000 என உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்கள் பயன்பெற்றனர். மேற்கொண்டு 75 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயன்பெற ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

75. கிராமப்புற ஏழைகளுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ‘அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்’ தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

76. 1,05,494 கைத்தறி நெசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நெசவாளர்களுக்கும் சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

77. ஏறத்தாழ 2 லட்சத்து 5 ஆயிரத்து 350 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 37 ஆயிரத்து 595 கோடி ரூபாய் முதலீட்டிலான 29 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவற்றில் 8 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன மற்றவை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

78. அருந்தமிழ்ச் சான்றோர் 62 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, 4 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிலேயே மேலும் 25-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

79. ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து பெறவேண்டும் என்பதற்காக ரூ.6,000 வீதம் 12,96,803 ஏழை மகளிர்க்கு 619 கோடியே 66 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு, மேலும் 4 லட்சம் தாய்மார்கள் பயன்பெற ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

80.திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், ஆகிய 5 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன் திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

81. தமிழ்நாட்டில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 3 செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டதால் 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 80,766ல் இருந்து 2008ம் ஆண்டு 2,41,078 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது.

82. மூடிய அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000. சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000. கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என அரசு நிதி உதவி வழங்கும் ‘இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம்’.

போக்குவரத்து துறை

தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். இதை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை தி. மு. கழக ஆட்சி 1976-க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது. அண்ணா தலைமையில் முதன்முறை திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றுக்கொண்டபோது நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன. 1998 மார்ச் 26-ம் நாள் தமிழக வரலாற்றில் முதன்முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் அதிகப்படியான சாலைகளும், பாலங்களும் அமைக்கப்பட்டன. 2000 மாவது ஆண்டு முடியும்போது தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும் 345 பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. 1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, 1,468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2,334 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 2,112 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

பெரிய பாலங்கள்

தமிழக நெடுஞ்சாலைகளில் கலைஞர் ஆட்சியில் உருவான பெரிய பாலங்களில் முதன்மையானவை,

1. 1969 - தஞ்சை - திருச்சி மாவட்டங்களை இணைத்துக் கொள்ளிடம் ஆற்றில் திருமானூர் அருகில் ஒரு பெரிய பாலம்.

2. 1969 - குளித்தலை - முசிறிக்கு இடையில் காவிரிப் பாலம்.

3. 1970 - திருநெல்வேலி சந்திப்புக்கு அருகில் - திருவள்ளூர் பெயரால் ஒரு ஈரோடுக்கு மேம்பாலம்.

4. 1971 - கோவையில் ஒரு மூன்றடுக்கு மேம்பாலம்.

5. 1972 - ஈரோடு - சத்தி சாலையில் ஒரு பாலம்.

6. 1973 - ஒகனேக்கல் சாலையில் சின்னாறு நதியில் பாலம்.

7. 1973 - பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் பாலம்.

8. 1973 - தேவிப்பட்டிணம் - திருப்பாலக்குடி சாலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாலம்.

9. 1973 - இராமநாதபுரம் மாவட்டத்தில் பொய்யேரி செல்லும் சாலையில் திருமணி ஆற்றில் பாலம்.

10. 1974 - முத்துப்பேட்டை - மீமிசல் சாலையில் அம்புலியாற்றில் பாலம்.

11. 1973 - கல்லார் சிமெண்ட் பள்ளி சாலையில் அரசனூர் ஆற்றில் பாலம்.

12. 1973 - உடுமலைப்பேட்டை - குமாரலிங்கம் சாலையில் அமராவதி ஆற்றில் பாலம்.

13. 1974 - செங்கல்பட்டு அருகில் சூணாம்பேடு சாலையில் பாலம்.

14. 1974 - வேலூர் அருகில் பாலாற்றில் போளூர் சுப்பிரமணியன் பாலம்.

15. 1974 - கடலூர் - சித்தூர் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே பாலம்.

16. 1974 - பேசின்பிரிட்ஜூக்கு அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்த பாலமும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இரயில்வே மேம்பாலமும் அகலப்படுத்திக் கட்டப்பட்டன.

17. 1975 - கடலூரில் - கடற்கரைச் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் அருகில் கடல் நீர் உள்ளே வரும் பகுதியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் பாலம்.

தேசிய நெடுஞ்சாலைகள்

1946-ம் ஆண்டில் தமிழகத்திலிருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1,637 கிலோமீட்டர். 1991-ம் ஆண்டில் 2002 கி.மீ. 1996-ம் ஆண்டிலும் 2002 கிலோ மீட்டர் மட்டுமே. ஆனால் தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 2000 மாவது ஆண்டில் மொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 3864 கிலோமீட்டர்களாக அதிகரித்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் கழக அரசு அமைத்த இன்றியமையாத பாலங்கள்,

1. 1969 - திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றில் 220 மீட்டர் நீளத்திற்குப் பெரிய பாலம்.

2. 1971 - மதுரை - திண்டுக்கல் புறவழிச் சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம்.

3. 1971 - மதுரை ஆண்டாள்புரம் அருகே முத்துராமலிங்கத் தேவர் மேம்பாலம்.

4. 1971 - மதுரை கல்லூரி அருகே மேயர் முத்து மேம்பாலம்.

5. 1972 - காரனோடை அருகில் குசத்தலை ஆற்றில் 400 மீட்டர் பாலம்.

6. 1972 - தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் தென்பெண்ணை ஆற்றில் இருமாத்தூர் அருகே பாலம்.

7. 1972 - திருச்சிக் கரையாற்றில் 113 மீட்டர் பாலம்.

8. 1972 - மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் பாலம்.

9. 1973 - சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம்.

10. 1974 - கும்மிடிப்பூண்டி அருகே ஆரணியாற்றில் 123 மீட்டர் பாலம்.

11. 1974 - சென்னை ஆர்.கே.மடம் சாலையில் பாலம்.

12. 1974 - உளுந்தூர்பேட்டை அருகில் கடிலம் ஆற்றில் 321 மீட்டர் பாலம்.

13. 1974 - சென்னை அடையாற்றில் திரு.வி.க. பாலம்.

14. 1974 - திருப்பூர் நகரில் பாலம்.

15. 1974 - திண்டுக்கல் அருகில், சென்னை திருச்சி திண்டுக்கல் - தேசிய நெடுஞ்சாலையில் சாதனையாற்றின் குறுக்கே 72 மீட்டர் நீளத்திற்குப் பாலம்.

16. 1974 - திண்டுக்கல் வட்டாணம் சாலையில் பாலம்.

17. 1974 - விருதுநகர் அருகே கவுசிக ஆற்றின் குறுக்கே 101 மீட்டர் நீளத்திற்குப் பாலம்.

18. 1974 - இராமேஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய பாம்பன் பாலம் (பணி துவக்கம்).

19. 1975 - மணப்பாறை அருகே - சித்தனாதன் ஆற்றின் குறுக்கே 132 மீட்டர் பாலம்.

20. 1975 - திருச்சி சமயபுரம் அருகே - உப்பாற்றில் 105 மீட்டர் பாலம்.

21. 1975 - மார்த்தாண்டம் பனிச்சம்மோடு சாலையில் குழித்துறை ஆற்றில் பாலம்.

22. 1989 - மாமண்டூர் அருகில் தாக்குபேட்டையில் என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலையில் 90 மீட்டர் பாலம்.

23. 1989 - அதே மாமண்டூர் அருகில் கிள்ளியாற்றில் 175 மீட்டர் பாலம்.

24. 1989 - செங்கல்பட்டு அருகில் பாலாற்றின் குறுக்கே 686 மீட்டர் பாலம்.

1989 - 1990 இல் கட்டப்பட்ட முதன்மை மேம்பாலங்கள்

1. சென்னை விம்கோ நகர் - எண்ணூர் இரயில் நிலையங்களுக்கிடையில் ஒரு இரயில்வே மேம்பாலம்.

2. மாயூரம் சாரங்கபாணி மேம்பாலம்.

3. திருவாரூர் மேம்பாலம்.

4. கும்பகோணம் இரயில்வே மேம்பாலம்.

5. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை முத்துப்பேட்டை சாலையில் ஒரு மேம்பாலம்.

6. கோவையில், கிராஸ்கட் சாலையில் மேம்பாலம்.

7. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆர்க்காடு - விழுப்புரம் சாலையில் ஒரு மேம்பாலம்.

8. கோவை - சத்தியமங்கலம் காமராஜ் நகர் சாலையில் ஒரு பாலம்.

9. கோவை - சிறுவாணி சாலையில் பாலம்.

10. கிழக்குக் கடற்கரைச் சாலையில் வயலூர் அருகில் பாலாற்றில் 61 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.

11. ஊட்டி அருகில் கன்னிக்கோடு - கூடலூர் சாலையில் பாலம்.

12. நெல்லை மாவட்டத்தில் கோதை ஆற்றில் அம்பாசமுத்திரம் - பாப்பாக்குடி இடையில் ஒரு பாலம்.

13. மயிலாடுதுறை - முத்துப்பேட்டை சாலையில் பழைய பாலம் ஒன்று புதுப்பித்து அமைக்கப்பட்டது.

14. மதுரை - தூத்துக்குடி சாலையில் விருதுநகருக்கு அருகில் உள்ள பாலம் புதுப்பிக்கப்பட்டது.

15. விருதுநகர் மாவட்டத்தில் - அர்ச்சுனா ஆற்றில் சிவகாசி - விருதுநகர் சாலையில் ஒரு உயர்மட்ட பாலம். விழுப்புரம் - கும்பகோணம் சாலையில் கடலூர் அருகில் பாலம்.

16. கோவை - திண்டுக்கல் சாலையில் கோவைக்கு அருகே பாலம் / திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் ஒரு பாலம்.

17. மதுரை - தென்காசி சாலையில் பாலம்.

18. ஆம்பூருக்கு அருகில் பாலாற்றில் ஒரு பாலம்.

19. விருதுநகருக்கு அருகில் அர்ச்சுனா ஆற்றில் குறுக்கே மேலும் ஒரு பாலம்.

20. பழனி - தாராபுரம் மேற்கு சாலையில் - மானூர் அருகில் சண்முகாநதி குறுக்கே ஒரு பாலம் என ஏராமான பாலங்களும் சாலைகளும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.

இதர பாலங்கள்

1. மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர் 80 அடி சாலையையும், காமராஜர் சாலையையும் இணைத்து வைகை ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 30.4.97 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

2. மதுரா கோட்ஸ் அருகில் புதிய ஜெயில் சாலையில் ஆறு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு மேம்பாலம் 13.11.99 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

3. மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த கல்பாலம் தாம்போகிக்கு பதிலாக 8 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப் பாலம் 23.2.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

4. மதுரை சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப்பாலம் 25.5.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

5. மதுரை சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் ஒரு மேம்பாலமும், 6 கோடி ரூபாய் செலவில் மற்றொரு மேம்பாலமும் 15.9.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டன.

6. மதுரை மாவட்டம் மேலூர்-பூவந்தி திருப்புவனம் சாலையில் தமிழ்நாடு விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம் 31.10.1997 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

7. மதுரை - தென்காசி சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் 30.7.2000 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

8. திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை - முத்துப்பேட்டை சாலையில் திருவாரூரில் 5 கோடி ரூபாய் செலவில் சாலைகீழ் பாலம் அமைக்கும் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

9. கடலூர் மாவட்டத்தில் கொத்தாச்சாரி - குண்டியமல்லூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.7.2000 அன்று முடிவடைந்தன.

10. முருகர்குடி - கிள்ளிமங்கலம் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே கோடியே 21 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

11. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகில் ஆரணி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 2.1.1999 அன்று முடிவடைந்தன.

12. தண்டலம் - பேரம்பாக்கம் சாலையில் 2 கோடியே 33 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

13. திருவொற்றியூர் - பொன்னேரி சாலையில் நாப்பாளையம் அருகில் 1 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 2.1.99 அன்று முடிவடைந்தன.

14. இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் - முதுகுளத்தூர் சாலையில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 31.10.2000 அன்று முடிக்கப்பட்டன.

15. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி - மறவமங்கலம் சாலையில், 1 கோடியே 29 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

16. இளையான்குடி - மறவமங்கலம் சாலையில், 1 கோடியே 11 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மற்றொரு பாலத்தின் பணிகள் 30.8.2000 அன்று முடிவடைந்தன. அதே இளையான்குடி - மறவமங்கலம் சாலையில் 2 கோடியே 22 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓர் உயர் மட்டப் பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன.

17. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து கொடநல்லூர் சேதாரக்குப்பம் சாலை வழியாக ஓசூர் செல்லும் சாலையில் 1 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன.

18. புதுப்பாளையம் சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன. போளூர் ஜமுனாமத்தூர் ஆலங்காயம் சாலையில் 1 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

19. சென்னையில் ராயபுரத்தில் இரண்டு இருப்புப் பாதைக் கடவுகளுக்குப் பதிலாக 17 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலத்தின் பணிகள் 15.11.1999 அன்று முடிவடைந்தன.

20. கிண்டி இரயில் நிலையத்தின் அருகில் 5 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன

21. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 7வது கிலோமீட்டரில் 3 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.1998 அன்று முடிவடைந்தன.

22. திருச்சி மாவட்டத்தில் 8 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தில்லைநகர் சாலையையும், கரூர் புறவழிச்சாலையினையும் இணைக்கும் இணைப்புச் சாலையும், அதில் அமைந்துள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகளும் 31.12.99 அன்று முடிவடைந்தன.

23. திருச்சி - நாமக்கல் சாலையில் 2 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட ஒரு பாலத்தின் பணிகளும், அதே சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட ஒரு பாலத்தின் பணிகளும் 31.10.2000 அன்று முடிவடைந்தன.

24. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் மதுரை - கன்னியாகுமரி புறவழிச்சாலையுடன் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 31.12.99 அன்று முடிவடைந்தன.

25. கோவை மாவட்டத்தில், கோவை நகராட்சி சாலையை மேம்பாடு செய்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 28.5.99 அன்று முடிவடைந்தன. கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கீழ்வழிப் பாதை 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுப் பணிகள் 15.11.99 அன்று முடிவடைந்தன.

26. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலாத்துக்கரை - கோலக்காநத்தம் சாலையில் 1 கோடியே 17 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.10.2000 அன்று முடிவடைந்தன.

27. கிருஷ்ணாபுரம் - பூலாம்பாடி சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.7.2000 அன்று முடிவடைந்தன.

28. விழுப்புரம் மாவட்டத்தில் வேட்டைக்காடு - கயத்தாறு சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன. விழுப்புரம் - சென்னை சாலையில் கீழ்பெரும்பாக்கத்தில் இருப்புப் பாதைக் கடவுகளுக்குப் பதிலாக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கீழ்பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

29. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி - கழுகு மலைச் சாலையில் 1 கோடியே 9 இலட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

30. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழவந்தாங்கல் இரயில் நிலையத்தின் அருகில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரயில்வே கீழ் பாலத்தின் பணிகள் 2.6.1997 அன்று நிறைவேறின. மதுராந்தகம் - வெண்நாகுபட்டு சாலையிலிருந்து தச்சூர் செல்லும் சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

31. தருமபுரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் - காக்கன்கரை சாலையில் 5 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் ஹட்கோ உதவித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

32. வேலூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் செலவில் அம்முண்டி பூட்டுதாக்குச் சாலையில் ஒரு புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளும், பூட்டுதாக்கு தாம்போகி சாலையில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகளும் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

33. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஏம்பல் சாலையில் 1 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

34. கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டு - மண்மாரி சாலையில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

35. சேலம் மாவட்டத்தில் சேலம் புறவழிச் சாலையில் 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன.

36. கொன்னன் செட்டி - ராஜபட்டினம் சாலையில் 1 கோடியே 35 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

சாலை வசதிகள் 

1. 1972-ம் ஆண்டு 1,500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டம் கழக அரசினால் அறிமுகம் செய்யப்பட்டது.

2. 1990-ம் ஆண்டு 1,000-க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்துக் கிராமங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.

3. இத்திட்டத்தின் கீழ் 1996-ம் ஆண்டுக்கு பிறகு, 517 கிராமங்கள் இணைப்புச் சாலை வசதிகளைப் பெற்றன.

4. இணைப்புச் சாலை வசதி இல்லாத 1,000 பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற சாதனை படைக்கப்பட்டது.

5. இணைப்புச் சாலைகள் உருவாக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக 1999-2000-ம் ஆண்டுகளில் முதற்கட்டமாக 500-க்கு மேல் 1000-க்குள் மக்கள் தொகை கொண்ட 340 கிராமங்களுக்கு ரூ.123.70 கோடி செலவில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன. 2000 - 2001-ம் ஆண்டுகளில் ரூ.90.75 கோடி செலவில் 140 கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன.

6. நபார்டு வங்கி உதவியில் ரூ.410.23 கோடி மதிப்பீட்டில் 4976.20 கி.மீ. நீள ஊரகச்சாலைகள் எடுக்கப்பட்டு, 4053 கி.மீ. நீளப் பணிகள் 294.30 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டன. 4154.15 கி.மீ. நீள மாவட்ட பெரிய சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளின் பணிகள் ரூ.271.09 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, 3588 கி.மீ. நீளப் பணிகள் முடிக்கப்பட்டன.

7. 1977-ம் ஆண்டுக்குப் பின் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் நெடுஞ்சாலைகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை. இக்குறையைப் போக்கிட 1998-99-ல் 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புறவழிச்சாலைகள் 

1. ரூ.49.85 கோடி செலவில் இரண்டு பெரிய பாலங்கள் உட்பட 18.80 கி.மீ. நீள தாம்பரம் - மதுரவாயல் - சென்னை புறவழிச்சாலைப் பணிகள் அமைக்கப்பட்டன.

2. 24.70 கி.மீ. நீள சாலைப் பணிகளும், 3 மேம்பாலப் பணிகளும் அடங்கிய மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணி ரூ.47.35 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.

3. ரூ.110 கோடி செலவில் 28.40 கி.மீ. நீளக் கோவை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

4. 1841.33 கி.மீ. நீள சாலைப் பணிகள் இயந்திரம் மூலம் தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் திட்டத்தின்கீழ் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

5. பன்மாநில முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரத் திட்டத்தின்கீழ், திருப்பூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகளில் 57.80 கி.மீ. சாலைப் பணிகளும், ஓர் உயர்மட்டப் பாலமும் ரூ.15.60 கோடியில் முடிக்கப்பட்டன.

6. கரும்புச்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 210 கி.மீ. நீள சாலை ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டது.

மாநில நெடுஞ்சாலைகள்

1991-92-ல் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1896 கி.மீ. 1995-96-ல் வெறும் 62 கிலோமீட்டர்களே அதிகரித்து 1,934 கிலோமீட்டர்களாக இருந்தது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 4192 கிலோமீட்டர்களாக அதிகரித்தது.

சென்னை பாலங்கள்

1. 1973 - சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம்.

2. 1974 - சென்னை ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள பாலம்.

3. 1974 - சென்னை அடையாற்றில் திரு.வி.க. பாலம்.

4. 1974 - சைதாப்பேட்டையில் மர்மலாங் பாலம் அகலப்படுத்தப்பட்டு மறைமலை அடிகள் பாலம் எனப் பெயரிடப்பட்டடது.

5. 1974 - துரைசாமி சாலையில் மாம்பலம் - கோடம்பாக்கம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சிவலிங்கம் கீழ் பாலம்.

6. 1974 - பேசின்பிரிட்ஜூக்கு அருகில் பக்கிம்ஹாம் கால்வாயில் அமைந்த பாலமும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே மேம்பாலமும் 36.05 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்டது.

7. 1989 – அண்ணா சாலையில் பெரியார் சிலை அருகே கூவம் பாலம் அகலப்படுத்தப்பட்டுப் பெரியார் பாலம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

8. 1989 - சென்னை விம்கோ நகர் - எண்ணூர் ரயில் நிலையங்களுக்கிடையில் 2.15 கோடி ரூபாய் செலவில் ஒரு இரயில்வே மேம்பாலம்.

9. 1990 - சென்னை - கல்கத்தா சாலையில் மூலக்கடை அருகில் பாலம்.

10. 1999 - நேப்பியர் பாலம் 5.11 கோடி செலவில் விரிவாக்கப்பட்டுள்ளது.

11. 1999 - ராயபுரத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 1010 மீட்டர் நீளமுள்ள பெரிய மேம்பாலம்.

மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தனது மேயர் பதவிக்காலத்தில் பல்வேறு மேம்பாலங்களை கட்டியவர் ஸ்டாலின்.

1. பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு.

2. பீட்டர்ஸ் சாலை – வெஸ்ட்காட் சாலை சந்திப்பு.

3. பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு.

4. புரசைவாக்கம் நெடுஞ்சாலை – ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு.

5. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – இராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு.

6. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பு.

7. டி.டி.கே.சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு.

8. சர்தார் பட்டேல் சாலை – டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு.

9. சர்தார் பட்டேல் சாலை – காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது. தலைவர் ஸ்டாலின் அவர்களது நிர்வாகத் திறமை, நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு மாநகராட்சியும் இத்தகைய மேம்பாலங்களை கட்டி முடித்ததில்லை. 10 வதாக கட்டிமுடிக்கப்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. இன்று சென்னை மக்கள் ஓரளவேணும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறதென்றால் அதற்கு தி.மு.க முன்னெடுத்த நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும். அதேபோல் கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 300 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான்.

தகவல் தொழில்நுட்பத் துறை

# இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் தனி முத்திரை பதித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு தான். 

# 05-10-1998 இல் தகவல் தொழிற்நுட்பத்துக்கென்றே சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே துறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படத் தொடங்கியது.

# இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழிற்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) ஒன்றும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 

# இக்கொள்கை தகவல் தொழிற்நுட்பத் தொழில் முனைவோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

# இந்தியாவிலேயே தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கென தனிக் கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலமும் தமிழ்நாடுதான்.

# இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

# 2000 ஆம் ஆண்டிலேயே தமிழகம் இந்த நிலையை எட்டிவிட்டது தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளே இதற்குக் காரணம். 

# 1998 செப்டம்பர் வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 21,371 பேருக்கு விசா வழங்கியது.

# இதே காலகட்டத்தில் மென்பொருள் பட்டதாரிகளுக்கு மும்பை தூதரகம் 9,734 பேருக்கும், புதுதில்லி தூதரகம், 5,460 பேருக்கும், கொல்கத்தா தூதரகம் 1,367 பேருக்கும் விசாக்களை வழங்கின. 

# இது, மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகம் பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்து செல்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.

# 2000 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் மென் பொருள் பூங்கா சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறக்கப்பட்டது. 

# 12 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், தரை தளம், 12 மேல் தளங்கள், 2 தரைகீழ் தளங்கள் கொண்ட டைடல் பூங்காவில் இருந்து தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 

# முழுவதும் குளிர்ப்பதனப்படுத்தப்பட்ட டைல் பூங்காவில் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக “Thermal Energy Storage System” அறிமுகம் செய்யப்பட்டது.

# அப்போது இந்த “மின்தொகுப்பு முறை” உலகிலேயே மூன்றாவது பெரியது அமைப்பாக விளங்கியது. 

# இதே போல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டுத் தரத்தினாலான பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழிற்நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கியது.

# இதன் மூலம் டைடல் பூங்கா அமைந்துள்ள சென்னை தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக உயர்வு பெற்றது. 

# இந்தச் சாலையில் பல்வேறு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தொழிற்சாலைகளை கழக ஆட்சிட்யின்போதே நிறுவின.

# சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (T.C.S) நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தை தொடங்கியது அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இப்பகுதியில் நிறுவின.

# இங்கிலாந்திலுள்ள World Tel நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தொழில் முயற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கழக ஆட்சியின்போது 13,000 சமுதாய இணைய மையங்களை அமைக்கப்பட்டதன் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

# கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன், நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத் தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் சென்னை மாநகரம் மருத்துவ சுற்றுலா நகரமாக வளர்ச்சியடைந்தது 

கணினி கல்வித் திட்டம்

# உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக தமிழ் இணையப் பல்கலைக் கழகம் (http://www.tamilvu.org) தொடங்கப்பட்டது.

# மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டம், 187 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டது.

# இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 48,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மென்பொருள் துறையில் வேலை பெறும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக வெளியே வந்தனர்.

# இத்திட்டம் அரசின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டதின்  மூலம் ஆண்டுதோறும் 60,000 மாணவ மாணவியர் கணினிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றனர்.

# பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கணினி கல்வித் திட்டம்தான், இந்தியாவிலேயே முதலாவது மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

# இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-04-1999 அன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், “சமூகநீதிக் காவலனாகப் பாடுபடும் தமிழக அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படிக்க வருபவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வதாக” தி.மு.க அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தது.

அரசுத் துறைகள் கணினிமயம்

# ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்.

# முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முடிவுரை 

மேற்கூறியவை போக தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

விவரணைகள் = https://dmk.in/achievements

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...