Chocks: எண்கள் வரலாறு

Sunday, January 24, 2021

எண்கள் வரலாறு

எண்கள் வரலாறு 

எண்கள் உருவாக்கத்தில் சுமேரியர்கள், ரோமானியர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பல நாட்டினரின் பங்களிப்பு இருக்கிறது. பண்டைய காலத்தில் பல நாடுகளில் பல வகையிலான எண்கள் பயன்படுத்தப்பட்டாலும், கணித எண்களை சுழி எண் (பாழ் / பூஜ்யம்) கொண்டு 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 0 என ஒருமுகப்படுத்தியது பல்வேறு இந்திய கணிதவியலாளர்கள் ஆகிறார்கள். மொத்தத்தில், இன்றைய நவீன எண்கள் பயன்பாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். இந்திய எண்களை அரபிய வணிகர்கள் மேற்குலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ததால், அங்கு இந்த பயன்பாடு பரவியது. இதனால் ஐரோப்பியர்கள் இந்த எண்களை "இந்திய (இந்து) - அராபிய எண்ணுருக்கள்" (Hindu - Arabic Numeral System) என அழைத்தனர். இதற்கிடையில், எண்கள் வரலாற்றில் தமிழுக்கு தனித்துவமான எண்கள் இருந்தன, ஆனால் காலப்போக்கில் அவை வழக்கொழிந்து விட்டன.

இந்திய கணிதவியலாளர்கள் பிராமி எண்களை உருவாக்க, பேரரசர் அசோகரின் வேண்டுகோள் முக்கிய காரணமாக இருந்தது. இந்த பிராமி எண்களே நவீன எண்களின் (இந்திய - அரபிய எண்கள்) நேரடி மூதாதையர் வடிவமாகும். சுருக்கமாகச் சொன்னால்: பிராமி எண் -> தேவநாகரி எண் -> அரபிக் எண் -> நவீன எண் -> ஐரோப்பா பரவல் -> இந்திய - அரபிய எண் என்றானது.

நிகோலா டெஸ்லா கூறிய 3-6-9 கோட்பாடு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறிய சார்புக் கோட்பாடு (Theory of Relativity), செயற்கை நுண்ணறிவு (AI), பெரிய தரவு (Big Data), டிஜிட்டல் சந்தை (Digital Market) போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை "எண்கள்" சாத்தியப்படுத்தியுள்ளது. எண்கள் இல்லாவிடில், உலக வளர்ச்சி தடைபட்டு இருக்கும். மொத்தத்தில், எண்கள் பொருளாதார அங்கமாக மட்டுமல்ல வாழ்வின் அங்கமாகவும் விளங்குகின்றன; காரணம், இந்த பிரபஞ்சம் எண்களால் நிறைந்துள்ளது.


விவரணைகள் 

Tamil Numeration System


Mathematics - Universe


Bakhshali Manuscript


Brahmagupta


Ramanujan 


Aryabhatta


6174


வாசித்தமைக்கு நன்றி.


வணக்கம்.


No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...