தமிழி - வட்டெழுத்து
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
*பண்டைய தமிழ்நாட்டில் ஓலைச் சுவடி, கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ் மொழி எழுதப் பெற்றுள்ளது.
*இவற்றில் காலத்தால் முற்பட்ட ஓலைச் சுவடிகள் கிடைக்கவில்லை என்றாலும் பல நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன.
*பழங்கால தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி - வட்டெழுத்து என அழைக்கிறோம்.
*தமிழி (தமிழ்ப் பிராமி) = கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை.
*வட்டெழுத்து = கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment