Chocks: சங்க கால செய்திகள் சில

Sunday, April 11, 2021

சங்க கால செய்திகள் சில

சங்க கால செய்திகள் சில

சங்க கால கடற்போர்

சேர மன்னர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உத்தரவின் பெயரில் மகன் சேரன் செங்குட்டுவன் கடற்படையை வழி நடத்தி சென்று குறும்பர்களை வீழ்த்தி வெற்றிகரமாக நாடு திரும்பியதே தமிழ்நாட்டின் முதல் கடற்போர் என்று தமிழ்நாட்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க காலத்தில் சேர மன்னர்கள் கடற்போரில் வல்லவர்களாக திகழ்ந்து உள்ளனர் என்றும் இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தான் "தமிழ்நாடு கப்பற்படை" உலக புகழ் பெரும் வகையில் வளர்ந்தது என்றும் இலக்கிய குறிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

சங்க கால வரலாறு அறிய வழிகள்

# Epigraphy = கல்வெட்டு

# Geography = புவியியல்

# Numismatic = பழங்காசு

# Chronology = காலவரிசை

# Archeology = அகழ்வாராய்ச்சி

# Ancient Literature = சங்க இலக்கியம்

கல்வெட்டு, பழங்காசு, அகழ்வாராய்ச்சி, சங்க இலக்கியம் என்பது நிலையானது (Static) மற்றும் புவியியல், காலவரிசை என்பது மாறக்கூடியது (Dynamic). வரலாறு நெடுகிலும் உள்ள நிலையான பொருட்களின் மீது ஆய்வு செய்யும்போது மாறக்கூடிய உருப்படிகள் வெளிப்படும். எடுத்துக்காட்டாக நிலையான சங்க இலக்கியத்தில் மாறக்கூடிய வெவ்வேறு பருவங்களை சகாப்தங்களை பற்றி குறிப்பிடுகிறது.

சங்க கால நுண்கலைகள்

# Music = இசைக்கலை = இயல் - இசை - நாடகம் = முத்தமிழ்

# Architecture = கட்டிடக்கலை = கட்டிட வடிவமைப்பு

# Painting = ஓவியக்கலை = சித்திரங்கள்

# Sculpture = சிற்பக்கலை = சிற்பங்கள்

# Epic = காவியக்கலை = காப்பியங்கள்

இங்கே இசைக்கலையில் குறிப்பிடப்பட்ட நாடகம் என்றால் கூத்து எனப்படும். கூத்து என்றால் “ஆடல் பாடல்” (நடனம், பாட்டு) எனப்படும். 1930 - 1940 களில் திரைப்படங்களில் ஆடல் பாடல் தான் முதன்மையாக இருந்துள்ளது நாளடைவில் கலைஞர் வருகைக்கு பிறகு வசனம், ஸ்ரீதர் வருகைக்கு பிறகு இயக்கம் அதனை தொடர்ந்து பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் வருகைக்கு பிறகு பலவித மாற்றங்கள் ஏற்படலாயிற்று.

சங்க கால படை

# Infantry = காலாட்படை = கால்களால் நடந்து தாக்கும் படை

# Chariot Tactics = தேர்ப்படை = தேரில் நகர்ந்து தாக்கும் படை

# Cavalry = குதிரைப்படை = குதிரையில் அமர்ந்து தாக்கும் படை

# War Elephant = யானைப்படை = யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட படை

நவீன கால படை

# Air Force = வான்படை = வான்வழி தாக்குதல் மற்றும் காத்தல் படை

# Navy = கடற்படை = போர் கப்பல் / நீர்மூழ்கிகள் / கடல்குண்டு / கடல் தாண்டி தாக்குதல் மற்றும் காத்தல் படை

# Army = தரைப்படை = தரையில் ராணுவ ஆயுதங்களை கொண்டு தாக்குதல் மற்றும் காத்தல் படை

தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப என்ற தொல்காப்பியக் கூற்றின்படி காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய நான்கு படைகள் தான் சங்க கால படைகளாகும் மற்றும் தொல்காப்பியர் காலத்தில் கப்பற்படை இருந்ததாக உறுதிபூண்ட முடியாது.

பிற்காலத்தில் கடல் தாண்டி செல்வதற்கு கருவிகளை, ஓடங்களை, கட்டுமரங்களை உருவாக்கிட மனிதர்கள் அறிந்திட அதுவே "கப்பற்படை" உருவாக காரணமாயிற்று. மேலும் நாளடைவில் யானைப்படை மற்றும் குதிரைப்படை பயன்பாடு அந்தந்த விலங்குகள் மீதான துன்புறுத்தல் என கருதப்பட்டு அப்படைகள் கைவிடப்பட்டது. நவீன யுகத்தில் வணிகப் போக்குவரத்து விரிவாக்கத்திற்கு பிறகு வான்படை, கப்பற்படை மற்றும் ராணுவ டாங்கி உற்பத்திக்கு பிறகு தரைப்படை ஆகிய மூன்று படைகள் மட்டுமே உலகம் முழுவதும் பரவலாக வளர்ந்தது. இதற்கிடையே 2019 இல் அமெரிக்க அரசாங்கம் விண்வெளி படையை (Space Force) உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 

சங்க இலக்கியங்களில் கடற்போர்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...