ஐ.ஆர் எட்டும் எல்.விஜயலட்சுமியும்
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
எல்.விஜயலட்சுமி
# 1960 களில் "ஜெய்சங்கர் - எல்.விஜயலட்சுமி" ஜோடி நல்ல வரவேற்பு பெற்ற தமிழ் திரைப்பட ஜோடியாக விளங்கினர்.
# தமிழ் - தெலுங்கு - மலையாளம் - இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
# எம்.ஜி.ஆர் நடித்த "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படத்தின் "கண்களும் காவடி" என்ற அறிமுக பாடலுக்கு நடனமாடியவர்.
# 1967 இல் "ஊட்டி வரை உறவு" திரைப்படம் தான் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கடைசி தமிழ் திரைப்படம்.
# 1968 இல் வெளியான "குடியிருந்த கோவில்" திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆரின் அன்பு வேண்டுகோளை ஏற்று "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்" என்ற பாடலுக்கும், 1971 இல் வெளியான சபதம் திரைப்படத்திற்கு ரவிச்சந்திரனின் அன்பு வேண்டுகோளை ஏற்று "ஆடும் அலைகளில் நீதி" என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
# தனது சகோதரரின் நண்பன் "சூரஜித் குமார் டி தத்தா" என்பவரை 1969 இல் திருமணம் புரிந்துகொண்டார் எல்.விஜயலட்சுமி.
# திருமணத்திற்கு பிறகு நடிப்பு தொழிலை கைவிட்டு மேற்படிப்பு முடித்து நிதித்துறையில் வேலையில் சேர்ந்தார்.
# 82 வயதாகும் இவர் தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்தியாவின் பசுமைப் புரட்சி
# 1963 இல், பிரதமர் இந்திரா காந்தி தலைமையில், வேளாண்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக்கை (Norman Borlaug) இந்தியாவில் விவசாய மேம்பாட்டிற்கான வழிகாட்டல் வழங்க அழைத்தனர். நார்மன் போர்லாக்கின் வருகைக்கு உறுதுணையாக அவரது நெருங்கிய நண்பரும் வேளாண் விஞ்ஞானியான தில்பாக் சிங் அத்வால் சேவை செய்தார்.
# மெக்சிகோவில், பூச்சி எதிர்ப்புத் தன்மை கொண்டதும், சாதாரண கோதுமையைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதுமான சிறப்பு கோதுமை வகையை உருவாக்கி வெற்றி கண்டார் நார்மன் போர்லாக். அதே கோதுமை இரகம், இந்தியாவில் பயிரிடப்பட்டு உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க பெரிதும் உதவியது. இதுவே இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது.
# இந்தியாவின் பசுமைப் புரட்சியால் சீரான விதைத்திட்டங்கள், உயர்தர விதைகள், சிறந்த உரங்கள், நலமான நீர் வழங்கல் மற்றும் புதுமையான இயந்திரங்களின் கலவையால் மகசூல் அதிகரித்தது, அதன் முக்கிய தாக்கம் கோதுமை மற்றும் அரிசி விவசாயத்தில் தெளிவாக காணப்பட்டது. இதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரித்து, உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் திறனை மேம்படுத்தியது.
ஐ.ஆர் எட்டு அரிசி
# அதே காலகட்டத்தில், 1960 களில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute, IRRI) தொடர்ச்சியான நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
# இந்த ஆராய்ச்சியில் IRRI குழுவினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றியவர் வேளாண் விஞ்ஞானி சூரஜித் குமார் டி. தத்தா (நடிகை எல்.விஜயலட்சுமியின் கணவர்).
# இந்தியா உட்பட ஆசியாவின் நெல் விளையும் பிராந்தியங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர் 8 (I.R 8) நெல் வகையை நவம்பர் 1966 இல் வெற்றிகரமாக சோதனை செய்தவர் சூரஜித் குமார் டி. தத்தா.
# குறுகிய வளர்ச்சி காலம் மற்றும் அதிக மகசூல் காரணமாக, "Miracle Rice" என்று அழைக்கப்படும் ஐ.ஆர் 8 நெல் விவசாயிகளிடையே விரைவில் பிரபலமடைந்தது.
# ஆந்திராவில் விவசாயி நெக்கண்டி சுப்பாராவ் (Nekkanti Subba Rao) மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1,600 ஹெக்டேர் பரப்பளவில் ஐ.ஆர் 8 விதைகளை பரிசோதித்து, அதனை பரவலாக்க முயற்சி மேற்கொண்டார்.
# நெல் ஆராய்ச்சியும் ஐ.ஆர். 8 வளர்ச்சியும் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு மேலும் வலு சேர்த்தது என்றால் அது மிகையாது.
விவரணைகள்
Miracle Rice
Dr.Surajit Kumar De Datta
A Tribute to the 'Miracle Rice' that Helped India Fight One Of Its Worst Famines
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.



No comments:
Post a Comment