Chocks: திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்

Sunday, April 11, 2021

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்
# சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட "பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு" உதவ வேண்டும் என்கிற நோக்கில் 1912 இல் "மெட்ராஸ் யுனைடெட் லீக்" (Madras United League) இயக்கத்தை உருவாக்கி சமுகப் பணிகளை மேற்கொண்டார் டாக்டர் சி.நடேசன்.

# 1914 இல் "மெட்ராஸ் யுனைடெட் லீக்" இயக்கமானது "மெட்ராஸ் திராவிடர் சங்கம்" (Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

# மெட்ராஸ் திராவிடர் சங்கத்தின் சார்பில் "திராவிடர் இல்லம்" என்கிற மாணவர் விடுதியை நடத்தினார்.

# காங்கிரஸ் கட்சியில் நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தை கண்டு மனம் வெதும்பி பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம்.நாயரும் 1916 இல் வெளியேறினர்.

# சி.நடேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்ததே இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

# அரசியல் நடவடிக்கை மூலம் திராவிடர்களின் தாழ்ந்த நிலையை போக்க பிட்டி தியாகராயர் மற்றும் டி.எம்.நாயர் ஆகியோருடன் சி.நடேசன் கைகோர்த்தார்.

# பிட்டி தியாகராயரும் டி.எம்.நாயரும் சி.நடேசனும் பல்வேறு திராவிட போர்வாள்களின் ஆதரவுடன் இணைந்து "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" (South Indian Liberal Federation) என்ற பார்ப்பனர் அல்லாத இயக்கத்தை 20 நவம்பர் 1916 இல் தொடங்கினர்.
# தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வ ஏட்டின் பெயர் "ஜஸ்டிஸ்" (Justice) என்பதை தொடர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் "ஜஸ்டிஸ் பார்ட்டி" (Justice Party - நீதிக் கட்சி) என்று அழைக்கப்படலாயிற்று.

# இந்திய அரசு சட்டம், 1919 மூலம் மொன்டாகு-செல்ம்ஸ்ஃபோர்ட் (Montagu-Chelmsford) சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டது.

# இதன் மூலம் மெட்ராஸ் பிரசிடென்சிக்கு தேர்தல் நடக்க வழிவகை செய்யப்பட்டது.

# 1920 முதல் 1937 வரை ஐந்து தேர்தல்களை உள்ளடக்கிய காலகட்டத்தில் நீதிக் கட்சி 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது (1926 - 1930 காலப்பகு தவிர).

# இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, திராவிட நாடு கோரிக்கை, மாநில சுயாட்சி கோரிக்கை, சத்துணவு திட்டம், பெண்களுக்கு முன்னுரிமை, பார்ப்பனர் அல்லாதோர் முன்னேற்றம் உட்பட பல்வேறு சமூக நீதி கோட்பாடுகள் நீதிக் கட்சி ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது.

# 1924 இல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் ஊரில் சோமநாதர் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் கீழ் சாதியினருக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது.

# வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கேசவ மேனன், சகோதரன் ஐயப்பன் மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர்.

# வைக்கம் போராட்டம் முடிவுற்ற நிலையில் 1925 இல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வந்த பார்ப்பனிய மயத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார்.

# நாளடைவில் நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுயமரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது.

# 1944 இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு தொடர்ந்து சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட தொடங்கியது.

# திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வழியில் 1949 இல் "தி.மு.கழகம்" பிறந்தது.

# தி.மு. கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர் வழியில் 1972 இல் "அ.தி.மு.க" பிறந்தது.

# 1974 இல் மத்திய காங்கிரஸ் அரசானது மாநில சுயாட்சி குறித்த ராஜமன்னார் குழு பரிந்துரைகளை ஏற்கவும் உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழி வகுக்க இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்யவும் சட்டசபையில் தீர்மானத்தை (State Autonomy Resolution) கொண்டு வந்தது அன்றைய மாநில தி.மு.க அரசு.

# நூறாண்டு கடந்த திராவிட இயக்க அரசியல் வடிவத்தின் ஆணிவேர் பிட்டி தியாகராயரும் டி.எம்.நாயரும் சி.நடேசனும் தான்.

# 1967 க்கு பிறகு தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் தான் தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகின்றனர் அப்படிப்பட்ட திராவிட இயக்க "அதிகார அரசியல்" வடிவத்தின் முன்னோடி விதையை வித்திட்டவர் டாக்டர் சி.நடேசன் என்றால் மிகையல்ல.
விவரணை 

டாக்டர் சி.நடேசன் - Keetru


டாக்டர் சி.நடேசன் - The Hindu



நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...