சட்ட மேலவை
# Indian Council Act, 1861 சட்டம் மூலம் ஆலோசனை குழுவாக செயல்பட ஒரு அவையை உருவாக்கியது ஆங்கிலேய அரசு.
# Indian Council Act, 1892 சட்டம் மூலம் அவையின் வலிமை விரிவாக்கப்பட்டது.
# Indian Council Act, 1909 சட்டம் மூலம் அவைக்கு வரையறுக்கப்பட்ட தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலவை அமைப்பு
# இரட்டை ஆட்சி முறை (Diarchy / 1921 - 1937) காலத்தில் Unicameralism படி ஒற்றை சட்டமன்ற அமைப்பாக கவுன்சில் செயல்பட்டது.
# மாகாண சுயாட்சி (Provincial Autonomy / 1937 - 1950) காலத்தில் Bicameralism படி இருசபை சட்டமன்றத்தின் மேலவையாக செயல்பட்டது.
# குடியரசு (Republic) காலத்தில் மெட்ராஸ் மாநில சட்டமன்றத்தின் மெட்ராஸ் மேலவையாக (Madras Legislative Council / 1950 - 1969) செயல்பட்டது.
# 1969 இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ் நாடாக மாறியபோது மெட்ராஸ் மேலவை தமிழ்நாடு மேலவையாக (Tamil Nadu Legislative Council / 1969 - 1986) செயல்பட்டது.
# படித்தவர்கள், தொழிலதிபர்கள், கவிஞர்கள், ஜமீன்தார்கள், முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சான்றோர் அவையின் ஆலோசனைகளை அரசு நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
மேலவை அதிகாரம்
# மேலவை உறுப்பினர்கள் மசோதாக்களை நகர்த்த, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
# நிர்வாகியை கேள்வி கேட்க, தீர்மானங்களை நகர்த்த, பட்ஜெட்டை நிறைவேற்ற மேலவை உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை.
# மாநில மேலவை உறுப்பினர்களை கொண்டு மாநில அரசாங்கத்தை உருவாக்கவோ கலைக்கவோ முடியாது.
# இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநில மேலவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை தான் அளிக்கிறது.
# மேலவையின் தலைவராக எப்போது, எங்கு, எவ்வளவு காலம் சபையை கூட்ட வேண்டும், எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதில் ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
மேலவை முதல்வர்
# தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் மேலவை உறுப்பினராக 2 முறை முதல்வர்கள் (1952 - ராஜாஜி, 1967 - அண்ணா) நியமிக்கப்பட்டுள்ளனர்.
# Rajya Sabha பதவியை ராஜினாமா செய்து அண்ணா தமிழ்நாடு முதல்வராக மார்ச் 6, 1967 இல் பதவியேற்ற பிறகு ஏப்ரல் 22, 1967 இல் மேலவைக்கு தேர்வானார்.
மேலவை கலைப்பு
# எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க ஆட்சியில் 1986 இல் திரைப்பட நடிகை வெண்ணிறாடை நிர்மலா மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஏப்ரல் 23, 1986 இல் அவர் பதவியேற்பு திட்டமிடப்பட்டது.
# பதவியேற்புக்கு முன்னர் வெண்ணிறாடை நிர்மலா தான் நொடித்துப்போயிருப்பதாக (Insolvency) அறிவித்திருந்தார்.
# இந்திய அரசியலமைப்பு 102-(1)(சி) பிரிவின் கீழ் திவாலானவர் மக்கள் மன்ற உறுப்பினராக பணியாற்ற முடியாது என்ற அடிப்படையில் ஏப்ரல் 21, 1986 இல் வழக்கறிஞர் சுந்தரம் வெண்ணிறாடை நிர்மாலா சபைக்கு பரிந்துரைக்கப்பட்டதை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
# இதனை தொடர்ந்து அ.தி.மு.க கட்சி நிதியில் இருந்து 4,65,000 ரூபாயை வெண்ணிறாடை நிர்மலாவுக்கு கடனாக கொடுத்து அவரின் நொடித்துப்போன (Insolvency) அறிவிப்பு ரத்தாக வழி செய்தார் எம்.ஜி.ஆர்.
# பிறகு வழக்கறிஞர் சுப்பிரமணியம் பிச்சை நீதிபதி ராமலிங்கத்திடம் முறையிட்டு வெண்ணிறாடை நிர்மலாவின் திவால் தன்மையை ஒதுக்கி வைக்கும்படி வற்புறுத்தினார்.
# The Presidency Towns Insolvency Act of 1909, பிரிவு 31 விதியைப் பயன்படுத்தி திவால் தன்மையை மறுபரிசீலனை செய்து வெண்ணிறாடை நிர்மலாவின் நியமனத்தை செல்லுபடியாக்கி அதற்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி செய்தார் நீதிபதி.
# இதற்கிடையில் பரபரப்பான சூழலில் வெண்ணிறாடை நிர்மலா மேலவைக்கான பரிந்துரையை வாபஸ் பெற்றார்.
# தமிழ்நாடு ஆளுநர் சுந்தர் லால் குரானா எம்.ஜி.ஆரிடம் வெண்ணிறாடை நிர்மலாவின் நியமனம் எவ்வாறு சரியான சோதனை இல்லாமல் முன்மொழியப்பட்டது? என்பதை விளக்குமாறு கேட்டார்.
# இச்சம்பவத்தால் கோபமுற்ற எம்.ஜி.ஆர் மே 14, 1986 இல் சட்ட மேலவையை ஒழிக்க முடிவு செய்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
# The Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986 பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு ஆகஸ்ட் 30, 1986 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றது.
# இச்சட்டம் நவம்பர் 1, 1986 முதல் நடைமுறைக்கு வந்ததன் மூலம் மேலவை ரத்து செய்யப்பட்டது.
# 1986 பிறகு தி.மு.க சார்பில் சில முறை மேலவையை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கைகூடவில்லை.
விவரணை
சட்ட மேலவை என்றால் என்ன?
Legislative Assembly vs Legislative Council
The Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment