Chocks: July 2021

Wednesday, July 14, 2021

நீரும் விஷமும்

நீரும் விஷமும்

முகவுரை

நீரும் நெருப்பும் அறிந்து இருப்போம் அது என்ன நீரும் விஷமும் என்று யோசனை செய்கிறீர்களா? வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.

ஆழமான நீர் பகுதி, கொட்டும் அருவி, குளியல் தொட்டி, வடிகால் நீர், மட்டமான சரக்கு உட்பட பல காரணங்களால் ஏதோ ஒரு வகையில் நீர் மூலம் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழப்பது உண்டு. ஆனால் குடிநீரால் மனிதர்கள் உயிரிழப்பது உண்டா? ஆம் உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குடிநீரை ஒரே நேரத்தில் சுமா‌ர் 7 லிட்டருக்கு மேல் பருகுவது உயிர் போக கூடிய (Lethal Dose) ஆபத்தான அளவாகும்.
விஷமும் மருந்தும்

வேதியல் துறை மற்றும் மருத்தவ துறை ஆகிய இரு துறையையும் 16 ஆம் நூற்றாண்டில் ஒருங்கிணைத்தவர் பாராசெல்சஸ் (1493 - 1541) ஆவார். அவரே "அனைத்து திட அல்லது திரவப்பொருளும் விஷம் நிறைந்தவை. விஷம் இல்லாதது என்று எதுவும் இல்லை. ஆனால் மருந்திற்கும் விஷத்திற்கும் இடையிலான பொருளில் உள்ள வேறுபாடு அதனை பயன்படுத்தும் அளவில் உள்ளது" என்றார்.

குடிநீர் விஷம் ஆனா கதை 
# 2007 இல் அமெரிக்காவில் குடிநீர் அருந்தும் போட்டி Hold Your Wee For A Wii நடத்தப்பட்டது.

# சிறுநீர் கழிக்காமல் இயன்றவரை குடிநீர் பருக வேண்டும் என்பதே இப்போட்டியின் சாராம்சம் ஆகும்.

# இப்போட்டியில் கலந்துக் கொண்டு இரண்டாம் இடம் பெற்ற Jennifer Strange சுமார் 7.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபின் சில மணி நேரத்திற்குள்ளே இறந்து போனார்.

# சம்பவம் நடைபெற்றது அமெரிக்காவில் அல்லவா? அதனால் இப்பிரச்சினை குறித்து வழக்கு தொடுக்கப்பட்டு நடுவர் மன்றம் (Jury) Jennifer Strange குடும்பத்திற்கு 16.5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயின் அன்றைய மதிப்பில் 77 கோடி இன்றைய மதிப்பில் 122 கோடி) தொகையை நஷ்ட ஈடாக வழங்க வழிவகை செய்தது.

# I didn't know what was wrong with me but I just knew I had never felt so sick in my life என்று இப்போட்டியில் முதலிடம் பெற்று உயிருக்கு ஆபத்தில்லாமல் மீண்ட Lucy Davidson கூறினார்.

விவரணைகள் 

2021 - Man nearly dies having excess water to cure COVID


2009 - Jury Rules Against Radio Station 


2007 - Water Intoxication Death Investigation


2007 - Women Dies After Water Drinking Contest


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

விண்வெளியும் நாயும்

விண்வெளியும் நாயும்
சுருக்கம் 
  1. லைக்கா நாய்
  2. ரஷ்ய விண்வெளி சாதனைகள்
  3. பனிப்போர்
  4. விவரணைகள்
லைக்கா நாய்

# விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் உயிரினம் லைக்கா என்ற பெண் நாய் ஆகும்.

# 03-11-1957 அன்று உலகின் இரண்டாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 2 மூலம் லைக்கா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டது.

# பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பும் வகையில் இச்செயற்கை கோள் வடிவமைக்கப்படவில்லை.

# 1957 இல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சில மணி நேரத்திலே லைக்கா இறந்ததாக ரஷ்யா கூறியது.

# 2002 இல் விண்வெளியில் 4 நாட்கள் தங்கியிருந்த லைக்கா வெப்பம் தாங்காமல் இறந்தது என உண்மையை கூறியது ரஷ்யா.

# 11-04-2008 அன்று ரஷ்ய ராணுவ ஆய்வுக்கூடத்தில் லைக்காவுக்கு சிலை வைக்கப்பட்டது.

ரஷ்ய விண்வெளி சாதனைகள்

# 04-10-1957 அன்று ரஷ்யாவின் ஸ்பட்னிக் 1 (Sputnik 1) விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கை கோள்.

# 03-11-1957 அன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 (Sputnik 2) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் உயிரினம் லைக்கா (Laika) நாய்.

# 07-10-1959 அன்று ரஷ்யாவின் லூனா 3 (Luna 3) விண்கலம் மூலம் இதற்கு முன்னர் பார்த்திடாத சந்திரனின் பகுதிகளைப் புகைப்படம் எடுத்தது.

# 12-04-1961 அன்று ரஷ்யாவின் வோஸ்டாக் 1 (Vostok 1) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர் யூரி ககரின் (Yuri Gagarin).

# 16-06-1963 அன்று ரஷ்யாவின் வோஸ்டாக் 6 (Vostok 6) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி வலண்டீனா தெரெசுக்கோவா (Valentina Tereshkova).

# 18-03-1965 அன்று ரஷ்யாவின் வஸ்ஹோத் 2 (Voskhod 2) விண்கலம் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்சேய் லியோனவ் (Alexei Leonov).

# 03-02-1966 அன்று ரஷ்யாவின் லூனா 9 (Luna 9) விண்கலம் முதன்முதலாக சந்திரனில் (Moon) தரையிறங்கியது.

# 15-12-1970 அன்று ரஷ்யாவின் வெனீரா 7 (Venera 7) விண்கலம் மூலம் முதன்முதலாக வேறு கோளில் (Venus) தரையிறங்கி அங்கிருந்து தகவல் (Transmit Data) பெறப்பட்டது.

# 19-04-1971 அன்று ரஷ்யாவின் சல்யூட் 1 (Salyut 1) உலகின் முதல் விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டது.

# 02-12-1971 அன்று ரஷ்யாவின் மார்ஸ் 3 (Mars 3) விண்கலம் முதன்முதலாக செவ்வாய் (Mars) கிரகத்தில் தரையிறங்கியது.

பனிப்போர்

# ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் முன்னணி பெறுவது கம்யூனிச ரஷ்யாவா? முதலாளித்துவ அமெரிக்காவா? என்ற போட்டியில் ரஷ்யாவே 1970 ஆரம்பப்பகுதி வரை அனைத்திலும் கலக்கி கொண்டு இருந்தது.

# 29-07-1958 அன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த நாசா அமைப்பு தொடங்கப்பட்டது.

# அதன் தொடர்ச்சியாக 20-07-1969 அன்று அமெரிக்காவின் நாசா மேற்பார்வையில் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனில் காலடி எடுத்துவைத்த முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் பெருமை பெற்றார்.

# நாசா உருவான பிறகு 1960 பிற்பகுதியில் இருந்து உலக விண்வெளி இயக்கமே அமெரிக்க கைகளுக்குள் வந்தது.

முடிவுரை

# "விண் - கடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நாடே நன்கு வளர முடியும்" என்று பொருள்படும் விதத்தில் புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் ஒரு இடத்தில் ஆசிரியர் சிங்காரம் சொல்லி இருப்பார். உண்மை தானே தோழர்களே!
விவரணைகள்

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்


First Animal in Orbit


Story of the Space Dog - Laika



Nehru - Yuri Gagarin Meet


Artificial Satellite Sputnik 1 Launch


Moon Landing by NASA Team


Apollo 11 Journey to Moon


What if Russia Landed on Moon?


Space Race History - 1


Space Race History - 2


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, July 11, 2021

Introduction to the Landing

Introduction to the Landing
Points to Remember

# Landing refers to the action of coming down onto the ground.

# It's crucial to remember that takeoff can be optional, but landing is always mandatory.

# Basic landing procedures include planes, jets, helicopters, spacecraft, air balloons, and parachutes.

Time of Landing 

# Day Time Landing => Generally considered easier to Land

# Night Time Landing => To Land using the lights available on the runway.
Pattern of Landing

# Hard Landing => To Land with greater vertical speed. 

# Soft Landing => To Land with gentle speed.

Types of Landing

# Runway => Paved surface on which Planes typically Land. 
# Touch and Go => To Land by coming to a full stop and then taking off again from the start of the runway.
# Water Landing => To Land Planes on water in emergency situations, as depicted in the movie "Sully."
# Crosswind Landing => To land planes, pilots correct for wind drift when the wind is blowing across rather than parallel to the landing direction.
# Touchdown => The gentle settling of Planes onto the Landing surface occurs at the minimum controllable airspeed.
# Helicopter / Jet / Air Balloon => Vertical Landing = Departing, Hovering and Landing Vertically. 
# Splashdown => To Land a Spacecraft in water, a Parachute is used. 
# Parachute => Parachute Landing Fall => Parachutist to Land safely with controllable speed to avoid deadly injuries.
# Ship => To Land a Ship, various methods such as anchoring, mooring, and docking are used.
Anchoring => Dropping a heavy object attached to the Ship into the water, which latches onto the seabed with hooks and suction to keep the Ship in a fixed place.

Mooring => Tying the Ship to a fixed object, such as a buoy (navigation mark). 

Docking => Using ropes and knots to secure the Ship to the dock, pulling the Ship as parallel as possible.

Landing In Tamil

தமிழில் விமானம், கப்பல், விண்கலம், ஹெலிகாப்டர், பாராச்சூட் உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களுக்கும் Landing என்றால் தரையிறக்குதல் / இறக்குதல் / நிலத்திற்கு கொண்டு வருதல் எனப்படும். துள்ளி குதித்து உயர பறந்தாலும் தரைக்கு வந்து தானே ஆகணும்.

Reference

Types of Landing


Emergency Landing


Ship Landing


Thanks for reading my blog

Basics of Forensic Science

Basics of Forensic Science
Synopsis
  1. Introduction
  2. Areas of Forensic Science
  3. Modern Forensic Science
  4. Crime Novels
  5. First Forensic Laboratory
  6. Forensic Science Sections
  7. Fingerprint Impression
  8. Bloodstain Pattern Analysis
  9. Conclusion
  10. Reference
Introduction

Forensics involves observations and experiments conducted using scientific techniques. It is defined as the inspection of the reliability and validity of the evidence, leading to a logical conclusion based on the evidence.
1.Forensic Medicine - Doctors investigating a body to determine the cause of injuries or death.

2.Forensic Science - Specialists investigating drugs, ballistics, DNA, documents, physical evidence, and fingerprints.

Areas of Forensic Science

# Archaeology = Reconstructing the past events.

# Arts = Examining the originality of artifacts.

# Disasters = Reconstructing disaster events.

# Politics = Prosecution of war criminals.

# Crime = Identification of suspects.

# Sports = Testing for drugs.

Modern Forensic Science

The French Criminologist Edmond Locard (1877 - 1966) is considered the father of modern forensic science.
One of his famous quotes was "every contact leaves a trace", which came to be known as Locard's exchange principle. He went on to say that "wherever he steps, whatever he touches, whatever he leaves, even unconsciously, will serve as a silent witness against him. Not only his fingerprints or his footprints but also his hair, the fibers from his clothes, the glass he breaks, the tool mark he leaves, the paint he scratches, the blood or semen he deposits or collects – all of these and more bear mute witness against him. This is evidence that does not forget. It is not confused by the excitement of the moment. It is not absent because human witnesses are. It is factual evidence. Physical evidence cannot be wrong; it cannot perjure itself, and it cannot be wholly absent. Only human failure to find it, study, and understand it can diminish its value".

Crime Novels

Sir Arthur Conan Doyle (1859 - 1930) was a Scottish doctor who, having an unsuccessful career, turned to writing stories to fill his free time. He played a major role in conceptualising forensics through literature with his Sherlock Holmes book series, long before forensics gained recognition as an investigative tool in legal proceedings.
First Forensic Laboratory

# In France, the first forensic laboratory was founded by Edmond Locard in 1910.

# In Canada, the first forensic laboratory was founded by Lomer Gouin in 1914.

# In Germany, the first forensic laboratory was founded by Robert Heindl in 1915.

# In the United States, the first forensic laboratory was founded by Los Angeles Police Department (L.A.P.D) Chief August Vollmer in 1924 and the Federal Bureau of Investigation (FBI) crime laboratory was founded in 1932.

# In the United Kingdom, the first forensic laboratory was founded by Metropolitan Police Service (M.P.S - Scotland Yard) in 1935.

# In India, the first forensic laboratory was founded by Dr. B.C. Roy in 1952 in Kolkata.

Forensic Science Sections
# Physical Science = Analysis of physical and chemical properties to compare and identify evidence through chemical tests, microscopy, spectroscopy, fragments, and explosives.

# Voice Analysis = Identification of speech, language, speaker, gender, emotion, age, and locating keywords from the speech.

# Criminal Profiling = Analysis of behavioral characteristics to assess whether he/she is likely to have committed a crime.

# Documents = Analysis of faked and forged documents through handwriting, prints, paper, and ink scrutiny.

# Hair Analysis = Extraction of DNA from hair samples to identify the suspect and victim.

# Polygraph = Detection of changes in physiological characteristics using a lie detector.

# DNA Profiling = Analysis of DNA is crucial and the most reliable evidence in forensics.

# Cyber Forensic = Focusing on the recovery of digital data and electronic trails.

# Firearms = Analysis of guns, bullets, cartridge cases, and firearm damages.

# Photography = Identification of real and fake photographs.

# Forensic Odontology = Evaluation of dental evidence.

# Forensic Toxicology = Examination of drugs and poisons.

# Forensic Entomology = Analysis of insects related to the crime.

# Forensic Geology = Analysis of various minerals found on the earth to know the composition rates.

# Forensic Anthropology = Analysis of the skeleton is a helpful technique used when the body is found after decomposition.

# Forensic Facial Reconstruction = Reconstruction of the skull using the clay method or graphical method to identify the person.

# Forensic Serology = Detection of biological materials like blood, semen, saliva, and urine to link the suspect and victim to the scene.

# Forensic Botany = Study of botanical evidence like pollen, spores, seeds, leaves, flowers, fruits, and wood in establishing relationships among articles, place, suspect, and victim.

Fingerprint Impression

Fingerprint impressions are used for the identification of individuals since they don't change over a person's lifetime, and no two fingerprints are exactly the same, even among identical twins. Consequently, fingerprints are widely employed in criminal cases to identify both suspects and victims.

The ancient usage of fingerprints can be traced back to the Babylonian empire and the Chinese Qin empire, while the modern application of fingerprints can be traced to the British Raj. In July 1858, Jangipur Chief Magistrate William James Herschel collected fingerprints from the local businessman Rajyadhar Konai to seal official documents for a government deal.
In the 1880s, Mark Twain and Francis Galton (cousin of Charles Darwin) gained fame for popularising the usage of fingerprint analysis. Mark Twain incorporated fingerprints into his fiction books, 'Life on the Mississippi' (1883) and 'Pudd'n Head Wilson' (1894), using them to identify a murderer.

Anthropologist Francis Galton studied fingerprints for individual identification and established the systematic classification of fingerprints. He published 'Finger Prints' (1892), 'Decipherment of Blurred Finger Prints' (1893), and 'Fingerprint Directories' (1895). Argentine Police Officer Juan Vucetich began the first fingerprint files based on Francis Galton's fingerprint pattern analysis.
Bloodstain Pattern Analysis

Bloodstain Pattern Analysis (BPA) is an important tool in the forensic serology section, used to reconstruct the crime scene by analyzing the amount of blood and the types of patterns.
Impact spatter occurs when a weapon strikes a victim, resulting in circular bloodshed rather than elongated patterns. Back spatter happens when blood splatters on the attacker, while forward spatter occurs when blood leaks from the victim's wound and splatters on nearby surfaces. The speed of the weapon used in the attack can affect the magnitude of the blood spatter, and the attack can be classified as high, medium, or low velocity.

# Gunshot wounds yield little droplets due to High-Velocity Splatter, which typically occurs at a speed of 100 feet per second and produces blood droplets that are 1 millimeter in diameter or smaller.

# Medium-Velocity Splatter refers to bodily harm induced by a strong blow with a dull object, resulting in cast-off blood patterns. In this category, blood droplets ranging from 1 to 4 millimeters in length are typically created at velocities of 5 to 25 feet per second.

# Blood dripping from a person usually causes Low-Velocity Spatter.

Conclusion

Forensic Science is an important tool for investigating and researching civil or criminal cases. It is used to determine the nature, cause, time, and answer relevant 'WH' questions concerning murders, accidents, crashes, theft, and frauds. The agenda of forensic scientists is to establish whether the cause was accidental, environmental, occupational, deliberate murder, or foul play (duplicity).
Reference

Galton Fingerprints 


Science of Forensic


Overview of Digital Forensic


Introduction to Forensic Science (NTU)


Father of Forensic Science Branches


Thank you for reading my blog

Sunday, July 4, 2021

வாங்க சும்மா பேசலாம்

வாங்க சும்மா பேசலாம் 
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சும்மா என்ற தலைப்பில் உரையாற்றியதை சும்மா படியுங்கள் நிச்சயம் அசந்து தான் போவீர்கள்.  பேச்சுவழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியால்  உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சொல் தான் சும்மா. சும்மா என்கிற சொல்லுக்கு தமிழில் 15க்கும் மேற்பட்ட பொருள் உண்டு என்றால் பாருங்களேன். வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா அழகாக எடுத்துக்காட்டுகிறது.

1. கொஞ்சம் "சும்மா" இருடா! 

=> அமைதியாக / Quiet 

2. கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே? 

=> களைப்பாறி கொண்டு / Leisurely 

3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது! 

=> அருமை / Fact 

4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? 

=> இலவசமாக / Free

5. "சும்மா" கதை விடாதே? 

=> பொய் / Lie 

6. "சும்மா" தான் இருக்கு நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். 

=> உபயோகமற்று / Without Use 

7. "சும்மா", "சும்மா" கிண்டல் பண்ணுகிறான். 

=> அடிக்கடி / Very Often 

8. இவன் இப்படி தான் "சும்மா" சொல்லிக்கிட்டே இருப்பான். 

=> எப்போதும் / Always

9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன். 

=> தற்செயலாக / Just 

10. இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. 

=> காலி / Empty 

11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. 

=> மறுபடியும் / Repeat 

12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக் கூடாது. 

=> வெறுங்கையோடு / Bare

13. "சும்மா" தான் இருக்கின்றோம். 

=> சோம்பேறித்தனமாக / Lazily 

14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். 

=> வெட்டியாக / Idle 

15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். 

=> விளையாட்டிற்கு / Just For Fun

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சும்மா என்கிற ஒரு சொல் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும் தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான பொருளை இங்கே கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை. உலகில் உள்ள மற்ற மொழிகள் அனைத்தும் வாயினால் பேச செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் நம்முடைய தமிழ் மொழியானது இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாக இருக்கின்றது என்பதாலே தமிழுக்கு அமுதென்று பேர். இவ்வாறு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் பேசினார்.

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன ஆனால் தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும் எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...