விண்வெளியும் நாயும்
சுருக்கம்
- லைக்கா நாய்
- ரஷ்ய விண்வெளி சாதனைகள்
- பனிப்போர்
- விவரணைகள்
லைக்கா நாய்
# விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் உயிரினம் லைக்கா என்ற பெண் நாய் ஆகும்.
# 03-11-1957 அன்று உலகின் இரண்டாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 2 மூலம் லைக்கா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டது.
# பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பும் வகையில் இச்செயற்கை கோள் வடிவமைக்கப்படவில்லை.
# 1957 இல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சில மணி நேரத்திலே லைக்கா இறந்ததாக ரஷ்யா கூறியது.
# 2002 இல் விண்வெளியில் 4 நாட்கள் தங்கியிருந்த லைக்கா வெப்பம் தாங்காமல் இறந்தது என உண்மையை கூறியது ரஷ்யா.
# 11-04-2008 அன்று ரஷ்ய ராணுவ ஆய்வுக்கூடத்தில் லைக்காவுக்கு சிலை வைக்கப்பட்டது.
ரஷ்ய விண்வெளி சாதனைகள்
# 04-10-1957 அன்று ரஷ்யாவின் ஸ்பட்னிக் 1 (Sputnik 1) விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கை கோள்.
# 03-11-1957 அன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 (Sputnik 2) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் உயிரினம் லைக்கா (Laika) நாய்.
# 07-10-1959 அன்று ரஷ்யாவின் லூனா 3 (Luna 3) விண்கலம் மூலம் இதற்கு முன்னர் பார்த்திடாத சந்திரனின் பகுதிகளைப் புகைப்படம் எடுத்தது.
# 12-04-1961 அன்று ரஷ்யாவின் வோஸ்டாக் 1 (Vostok 1) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர் யூரி ககரின் (Yuri Gagarin).
# 16-06-1963 அன்று ரஷ்யாவின் வோஸ்டாக் 6 (Vostok 6) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி வலண்டீனா தெரெசுக்கோவா (Valentina Tereshkova).
# 18-03-1965 அன்று ரஷ்யாவின் வஸ்ஹோத் 2 (Voskhod 2) விண்கலம் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்சேய் லியோனவ் (Alexei Leonov).
# 03-02-1966 அன்று ரஷ்யாவின் லூனா 9 (Luna 9) விண்கலம் முதன்முதலாக சந்திரனில் (Moon) தரையிறங்கியது.
# 15-12-1970 அன்று ரஷ்யாவின் வெனீரா 7 (Venera 7) விண்கலம் மூலம் முதன்முதலாக வேறு கோளில் (Venus) தரையிறங்கி அங்கிருந்து தகவல் (Transmit Data) பெறப்பட்டது.
# 19-04-1971 அன்று ரஷ்யாவின் சல்யூட் 1 (Salyut 1) உலகின் முதல் விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டது.
# 02-12-1971 அன்று ரஷ்யாவின் மார்ஸ் 3 (Mars 3) விண்கலம் முதன்முதலாக செவ்வாய் (Mars) கிரகத்தில் தரையிறங்கியது.
பனிப்போர்
# ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் முன்னணி பெறுவது கம்யூனிச ரஷ்யாவா? முதலாளித்துவ அமெரிக்காவா? என்ற போட்டியில் ரஷ்யாவே 1970 ஆரம்பப்பகுதி வரை அனைத்திலும் கலக்கி கொண்டு இருந்தது.
# 29-07-1958 அன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த நாசா அமைப்பு தொடங்கப்பட்டது.
# அதன் தொடர்ச்சியாக 20-07-1969 அன்று அமெரிக்காவின் நாசா மேற்பார்வையில் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனில் காலடி எடுத்துவைத்த முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் பெருமை பெற்றார்.
# நாசா உருவான பிறகு 1960 பிற்பகுதியில் இருந்து உலக விண்வெளி இயக்கமே அமெரிக்க கைகளுக்குள் வந்தது.
முடிவுரை
# "விண் - கடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நாடே நன்கு வளர முடியும்" என்று பொருள்படும் விதத்தில் புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் ஒரு இடத்தில் ஆசிரியர் சிங்காரம் சொல்லி இருப்பார். உண்மை தானே தோழர்களே!
விவரணைகள்
விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்
First Animal in Orbit
Story of the Space Dog - Laika
Nehru - Yuri Gagarin Meet
Artificial Satellite Sputnik 1 Launch
Moon Landing by NASA Team
Apollo 11 Journey to Moon
What if Russia Landed on Moon?
Space Race History - 1
Space Race History - 2
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment