நீரும் விஷமும்
முகவுரை
நீரும் நெருப்பும் அறிந்து இருப்போம் அது என்ன நீரும் விஷமும் என்று யோசனை செய்கிறீர்களா? வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஆழமான நீர் பகுதி, கொட்டும் அருவி, குளியல் தொட்டி, வடிகால் நீர், மட்டமான சரக்கு உட்பட பல காரணங்களால் ஏதோ ஒரு வகையில் நீர் மூலம் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழப்பது உண்டு. ஆனால் குடிநீரால் மனிதர்கள் உயிரிழப்பது உண்டா? ஆம் உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குடிநீரை ஒரே நேரத்தில் சுமார் 7 லிட்டருக்கு மேல் பருகுவது உயிர் போக கூடிய (Lethal Dose) ஆபத்தான அளவாகும்.
விஷமும் மருந்தும்
வேதியல் துறை மற்றும் மருத்தவ துறை ஆகிய இரு துறையையும் 16 ஆம் நூற்றாண்டில் ஒருங்கிணைத்தவர் பாராசெல்சஸ் (1493 - 1541) ஆவார். அவரே "அனைத்து திட அல்லது திரவப்பொருளும் விஷம் நிறைந்தவை. விஷம் இல்லாதது என்று எதுவும் இல்லை. ஆனால் மருந்திற்கும் விஷத்திற்கும் இடையிலான பொருளில் உள்ள வேறுபாடு அதனை பயன்படுத்தும் அளவில் உள்ளது" என்றார்.
குடிநீர் விஷம் ஆனா கதை
# 2007 இல் அமெரிக்காவில் குடிநீர் அருந்தும் போட்டி Hold Your Wee For A Wii நடத்தப்பட்டது.
# சிறுநீர் கழிக்காமல் இயன்றவரை குடிநீர் பருக வேண்டும் என்பதே இப்போட்டியின் சாராம்சம் ஆகும்.
# இப்போட்டியில் கலந்துக் கொண்டு இரண்டாம் இடம் பெற்ற Jennifer Strange சுமார் 7.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபின் சில மணி நேரத்திற்குள்ளே இறந்து போனார்.
# சம்பவம் நடைபெற்றது அமெரிக்காவில் அல்லவா? அதனால் இப்பிரச்சினை குறித்து வழக்கு தொடுக்கப்பட்டு நடுவர் மன்றம் (Jury) Jennifer Strange குடும்பத்திற்கு 16.5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயின் அன்றைய மதிப்பில் 77 கோடி இன்றைய மதிப்பில் 122 கோடி) தொகையை நஷ்ட ஈடாக வழங்க வழிவகை செய்தது.
# I didn't know what was wrong with me but I just knew I had never felt so sick in my life என்று இப்போட்டியில் முதலிடம் பெற்று உயிருக்கு ஆபத்தில்லாமல் மீண்ட Lucy Davidson கூறினார்.
விவரணைகள்
2021 - Man nearly dies having excess water to cure COVID
2009 - Jury Rules Against Radio Station
https://abcnews.go.com/GMA/jury-rules-radio-station-jennifer-strange-water-drinking/story?id=8970712
2007 - Water Intoxication Death Investigation
2007 - Women Dies After Water Drinking Contest
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment