Chocks: March 2022

Thursday, March 24, 2022

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்

விளக்கம்

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் என்பது பொருளாதார சூழ்ச்சிகள், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், கேள்விக்குரிய நியமனங்கள் மற்றும் நிதி இழப்புகளை நிரூபிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான ஊழல் வழக்கு ஆகும். இது இந்திய பங்குச்சந்தை நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல் (Accountability) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
சுருக்கம்
  1. முகவுரை
  2. Moneylife கட்டுரை 
  3. யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்?
  4. யார் இந்த ஆனந்த் சுப்ரமணியன்?
  5. ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம்
  6. என்ன ஊழல்?
  7. என்ன நடந்தது?
  8. யோகியும் சித்ரா ராமகிருஷ்ணாவும்
  9. ஆனந்த் சுப்பிரமணியனும் மின்னஞ்சலும்
  10. என்ன உத்தரவுகள்?
  11. மேல்முறையீடுகள்
  12. கைது படலம் 
  13. இந்திய ஊடகங்களின் மௌனம்
  14. முடிவுரை
  15. விவரணைகள்
முகவுரை

தற்போதைய தரவுகளின்படி, தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவை தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் ஐயத்திற்கிடமான நியமனங்கள் மற்றும் பா.ஜ.க ஆட்சியில் உறுதியாக ஊழல் நடந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி முதல் 75,000 கோடி வரையிலான இழப்பு (Notional Loss) ஏற்பட்டு இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எப்படியாகினும் தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழலால் எந்தவொரு முதலீட்டாளர்களுக்கும் அல்லது வர்த்தகர்களுக்கும் உரிய இழப்புகளை நிரூபிப்பது சிக்கலானது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். வாருங்கள், இனி கதைக்குள் செல்வோம்.

Moneylife கட்டுரை 

இணை இருப்பிட சேவை (Co-location Service) = “வெவ்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு தங்கள் சர்வர் மற்றும் கணினி அமைப்புகளை பரிமாற்ற வர்த்தக தளத்திற்கு அருகாமையில் வைக்க ஒரு இடத்தை வழங்குவது” இணை இருப்பிட சேவை எனப்படும். வர்த்தக நிறுவனங்கள் பரிமாற்ற வர்த்தக தளத்திற்கு அருகாமையில் இருப்பது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தக தளத்திற்கு இடையே தரவு பயணிக்க எடுக்கும் நேரத்தை குறைக்கிறது, இது வர்த்தகங்களை வேகமாக செயல்படுத்த வழிவகுக்கிறது.
ஆகஸ்ட் 2009 அன்று தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India - NSE) இணை இருப்பிட சேவைகளைத் தொடங்கியது. பரிவர்த்தனை சேவையகங்களுடன் நெருக்கமாக இருப்பதால், பங்குச்சந்தையிலிருந்து விலைகளை வாங்க அல்லது விற்க தரகர்கள் விரைவான அணுகலைப் பெறுகிறார்கள். இந்த அருகாமை, நிகழ்நேர சந்தை தரவுகளின் அடிப்படையில் வர்த்தகங்களை விரைவாக செயல்படுத்த அனுமதிக்கிறது, விரைவான முடிவெடுக்கும் மற்றும் சாத்தியமான அனுகூலமான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. நிகழ்நேர டிக்-பை-டிக் தரவு (Tick-By-Tick Data), பரிமாற்றத்தில் நிகழும் ஒவ்வொரு வர்த்தகத்தின் விரிவான பதிவை வழங்குகிறது, வெவ்வேறு நபர்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க அனுமதிக்கிறது. பங்குச்சந்தை நடத்தை பற்றிய முன்னோக்கு, பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுடன் துல்லியமான புரிதலுடன் முடிவுகளை எடுக்க இது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.
அனைவரும் சர்வரில் இருந்து சமமான தொலைவில் இருக்கும் போது, ​​கோட்பாட்டளவில் ஒரே நேரத்தில் விலைத் தகவல் பெறப்படும். இருப்பினும், ஒரே மாதிரியாக ஒளிபரப்பப்படுவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் சில நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அணுகல் மற்றும் செயலாக்க வேகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஜனவரி 2015 அன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தில் குறிப்பிட்ட தரகர்களுக்கு முன்னுரிமை அணுகல் (Priority Access) வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி இணை இருப்பிட ஊழல் செயல்முறையை பத்திரிகையாளர்கள் சுசேதா தலால் மற்றும் தேபாஷிஸ் பாசு Moneylife வலைத்தளத்தில் அம்பலப்படுத்தினார்கள். இதையெடுத்து, ஜூலை 2015 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் Moneylife மீது தேசியப் பங்குச்சந்தை ரூபாய் 100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தது. 

செப்டம்பர் 2015 அன்று தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்தும் ஊடகங்களுக்கு பதிலளிப்பதில் கையாண்ட அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்தும் சுசேதா தலால் மற்றும் தேபாஷிஸ் பாசு ஆகியோருக்கு தலா ரூபாய் 1,50,000 வழங்குமாறும் மும்பையில் உள்ள மசினா மருத்துவமனை மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனைக்கு நன்கொடையாக ரூபாய் 47,00,000 வழங்குமாறும் தேசியப் பங்குச்சந்தைக்கு உத்தரவிட்டதுடன் Moneylife சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் SEBI அமைப்புக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்?

1980 களின் இறுதியில்  SEBI வழிகாட்டுதல்களுக்கு அடித்தளம் அமைத்த IDBI குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த சித்ரா ராம்கிருஷ்ணா செப்டம்பர் 2009 அன்று தேசியப் பங்குச்சந்தையின் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2013 அன்று தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராம்கிருஷ்ணா பதவி உயர்வு பெற்றார். 1985 முதல் பங்கு வர்த்தக துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சித்ரா ராம்கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு தேசியப் பங்குச்சந்தையின் தினசரி வருவாய் இருமடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஆனந்த் சுப்ரமணியன்?

பால்மர் லாரியின் துணை நிறுவனத்தில் இடைநிலை நிர்வாகியாக பணிபுரிந்து வந்த ஆனந்த் சுப்ரமணியனை ஏப்ரல் 2013 அன்று தேசியப் பங்குச்சந்தையின் முதன்மை திட்ட ஆலோசகராக (Chief Strategic Advisor - CSA) சித்ரா ராமகிருஷ்ணன் பணியமர்த்தினார். ஏப்ரல் 2015 அன்று குழு இயக்க அதிகாரியாக (Group Operating Officer - GOO) ஆனந்த் சுப்ரமணியன் பதவி உயர்த்தப்பட்டார். சித்ரா ராமகிருஷ்ணாவின் தலைமை ஆலோசகராக கூடுதல் அதிகாரங்களுடன் வலம் வந்த ஆனந்த் சுப்ரமணியன், அலுவலகத்தின் உயர் பாதுகாப்பு பரிமாற்ற தரவுத்தளத்திற்கான அணுகலை கையாண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம்

2015-2016 காலகட்டத்தில் OPG Securities வளர்ச்சி விகிதம் குறித்து SEBI அமைப்புக்கு அநாமதேய இடித்துரைப்பாளர் கடிதங்கள் (Anonymous Whistleblowers Letters) வந்தன. தேசியப் பங்குச்சந்தையின் இணை இருப்பிட சேவையில் முறைகேடுகள் நடந்ததாகக் கடிதங்கள் பரவலான குற்றச்சாட்டுகளை முன் வைத்தன செய்தன. இந்நிலையில், பணி நியமனங்கள் மற்றும் தரவுகள் கையாளுதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு 2016 மார்ச் மற்றும் டிசம்பர் இடையில், தேசியப் பங்குச்சந்தைக்கு SEBI மூன்று முறை கடிதங்கள் மற்றும் மூன்று முறை நினைவூட்டல்களை அனுப்பியது. இந்தப் பிரச்சனைக்கு உரிய பதில் அளிக்காமல் தேசியப் பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம்கிருஷ்ணா தட்டிக்கழித்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) (பங்கு பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வு நிறுவனங்கள்) விதிமுறைகள், 2012 சட்டத்தின் படி 2013 இல் முதன்மை திட்ட ஆலோசகராக இணைந்த (CSA) ஆனந்த் சுப்ரமணியன் ஒரு முக்கிய நிர்வாக நபராக (Key Managerial Person - KMP) நியமிக்கப்படவில்லை, ஏனெனில் அவரது பணியில் KMP வேலைக்குரிய செயல்பாடுகள் (Job Description) இருக்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில், தேசியப் பங்குச்சந்தை வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் (Nomination and Remuneration Committe - NRC) முறையான ஒப்புதலை பெறாமல், 2015 இல் ஆனந்த் சுப்ரமணியனை குழு இயக்க அதிகாரியாக (GOO) நியமித்ததன் மூலம் சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணன் ஆனந்த் சுப்ரமணியத்தின் சம்பளத்தை உயர்த்தியதாகவும், தனிப்பட்ட ஆதாயத்திற்காக NRC அனுமதி இல்லாமல் அவருக்கு கணிசமான அதிகாரங்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். 

செயலகத் தணிக்கை (Secretarial Auditor Query) நடத்தப்பட்டதில் NRC ஒப்புதல் இல்லாமல் ஆனந்த் சுப்ரமணியன் பதவி வகிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதையொட்டி, நவம்பர் 2017 அன்று SEBI அமைப்பிடம் NRC ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும், விசாரணையில், 2013-2016 காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தை நடத்திய வாரியக் கூட்டங்கள், உள் குழுக் கூட்டங்கள் மற்றும் மனித வள (HR) தரவுகள் ஆகிய ஆவணங்களை ஆய்வு செய்து தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக தோல்விகளை SEBI கண்டறிந்தது.

என்ன ஊழல்?

"தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்" என்பது தேசியப் பங்குச்சந்தையின் சர்வர் உள்கட்டமைப்பு மூலம் சந்தை தரவுகளுக்கான அணுகல் சில தரகர்களுக்கு முன்னுரிமையாக வழங்கப்பட்டதாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டைக் குறிக்கிறது. சுருங்கச்சொன்னால், பங்கு வர்த்தகர்கள், தேசியப் பங்குச்சந்தையின் பரிமாற்ற அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேசியப் பங்குச்சந்தையின் சர்வர் உள்கட்டமைப்பை முன்னரிமையுடன் கையாள்வதன் மூலம் முன்கூட்டிய வர்த்தக அறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அதாவது, அனைத்து வர்த்தகர்களும் தேசியப் பங்குச்சந்தை தரவை சமமாக அணுகுவதை உறுதி செய்ய தேசியப் பங்குச்சந்தையின் உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசியப் பங்குச்சந்தை,  Unicast Routing மூலம் தகவல்களை பரப்புகிறது, இது ஒரு தொகுப்பாளர் (Host) இடமிருந்து மற்றொரு தொகுப்பாளருக்கு அனுப்பப்படும் ஒரு நேரடி கோரிக்கையாகும். அதாவது அந்த தொகுப்பாளர்கள் மட்டுமே அந்த வழியில் தொடர்பு கொள்ள முடியும். இதையொட்டி, தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தில், இடத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு High Frequency Trading பணியில் ஈடுபட்ட சில தரகர்கள் Dark Fibre வசதியுடன் சிறந்த வன்பொருள் (Specialised Hardware) விவரக்குறிப்புகளுடன் உள்ள தேசியப் பங்குச்சந்தையின் கணினிகளில் வேகமாக உள்நுழைய முடிந்ததுள்ளது. இது சில தரகர்களுக்கு லாப நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படும் நியாயமற்ற முன்னுரிமை அணுகலாகும். ஏனெனில், பிளவு-வினாடி முடிவு (Split Second Decision) கூட ஒரு தரகருக்கு பெரும் லாபத்தை விளைவிக்கும்.

என்ன நடந்தது?

2013-2016 காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தையின் இணை இருப்பிட சேவையின் மூலம் தரவுகள் வழங்கலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செப்டம்பர் 2016 அன்று தடயவியல் தணிக்கையை (Forensic Audit) நடத்த தேசியப் பங்குச்சந்தைக்கு SEBI உத்தரவிட்டது. மேலும், இணை இருப்பிட சேவையகத்திலிருந்து வரும் முழு வருவாயையும் மூன்றாந் தரப்பு பண வரவுக் கணக்கு (Escrow) ஒப்பந்த கணக்கில் Deposit செய்யும்படி SEBI உத்தரவிட்டது. தேசியப் பங்குச்சந்தையால் நியமிக்கப்பட்ட தணிக்கையாளரான Deloitte, முன்னுரிமை அணுகலுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது, ஆனால் யாரேனும் தவறான ஆதாயங்களைச் பெற்றுள்ளார்களாக மற்றும் தேசியப் பங்குச்சந்தை அதிகாரிகளின் ஏதேனும் சதி இருந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை.   
இதே காலகட்டத்தில், அக்டோபர் 2016 அன்று தேசியப் பங்குச்சந்தையின் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்ததும், டிசம்பர் 2016 அன்று தேசியப் பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவின் முறைகேடுகளை (Misconduct and Irregularities) அறிந்திருந்தும், தேசியப் பங்குச்சந்தை அதனை SEBI அமைப்புக்கு தெரிவிக்காமல், அவரது ராஜினாமாவை தேசிய பங்குச்சந்தை கையாண்ட விதம் குறித்து SEBI தீவிர கவலை கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 2017 அன்று SEBI மற்றொரு தடயவியல் தணிக்கையை Deloitte மற்றும் Ernst & Young (EY) இணைந்து நடத்த உத்தரவிட்டது. நவம்பர் 2017 அன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் குறித்து Deloitte மற்றும் EY கணக்கியல் நிறுவனம் தடயவியல் தணிக்கை அறிக்கையை தயாரித்து SEBI அமைப்பிடம் சமர்ப்பித்தது. இதன் பின்னணியில், குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், ரவி நரேன் மற்றும் சிலருக்கு காரண அறிவிப்புகளை (Show Cause Notice) அனுப்பி தங்கள் வாதங்களை முன்வைக்க SEBI வாய்ப்பு வழங்கியது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசியப் பங்குச்சந்தையின் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், தான் ஒரு நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகப் பணியாளர் அல்ல என்றும், தான் பரிமாற்றத்தின் வழக்கமான செயல்பாடுகளிலும் பரிமாற்றத்தின் ஒழுங்குமுறைகளிலும் மட்டுமே ஈடுபட்டதாக ஆனந்த் சுப்ரமணியன் கூறினார்.

SEBI விசாரணையின் போது இமயமலை யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தது. தேசியப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்க கணிப்புகள், திட்டங்கள், நோக்கங்கள், ரகசியங்கள் போன்ற பல்வேறு பங்குச்சந்தை தகவல்களை யோகிக்கு வழங்கியதாகவும், யோகியின் வழிகாட்டுதல்கள் சித்ரா ராமகிருஷ்ணா அன்றாட அலுவலக பணிகளை மேற்கொள்ள பயன்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், விசாரணையில் செயல்திறன் மதிப்பீடு அடிப்படையில் இல்லாமல் சீரான இடைவெளியில் விகிதாச்சாரமற்ற ஊதிய உயர்வுகளைப் பெற்ற ஆனந்த் சுப்ரமணியனை சித்ரா ராமகிருஷ்ணா நியமித்தது யோகியின் செயல்களில் ஒன்றென தகவல் வெளியானது.

யோகியும் சித்ரா ராமகிருஷ்ணாவும்

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தை ஆய்வு செய்த போது rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பியதை SEBI கண்டறிந்தது. இந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம் பற்றி விசாரித்த போது, "மின்னஞ்சல் முகவரிக்கு உரியவர் இமயமலையில் வசிக்கும் ஒரு யோகி என்றும், உடல் வடிவமில்லாத யோகி தன் விருப்பப்படி வெளிப்படுவார் என்றும், தான் வெளிப்படுத்திய ரகசிய தகவல்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்க்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், நிர்வாக ரீதியாக கடந்த 20 ஆண்டுகளாக தன்னை வழி நடத்தி வரும் யோகி "சித்த புருஷன்" என்றும், பல்துறை நிபுணர்களிடமிருந்து முறைசாரா ஆலோசனை பெறுவது இயல்பானது என்றும்" ராமகிருஷ்ணா தனது வாதத்தில் கூறியிருந்தார். 

விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணா யோகியை கங்கைக் கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகவும், 2013 இல் ஆனந்த் சுப்பிரமணியத்தை உயர் பதவியில் நியமிக்குமாறு யோகி அறிவுறுத்தியதாகவும் தெரியவந்தது. இதற்கிடையே, பிப்ரவரி 2021 அன்று சென்னை சீத்தம்மாள் காலனியில் உள்ள ஒரு வீட்டை ஆனந்த் சுப்ரமணியத்தின் மனைவி சுனிதா ஆனந்துக்கு ரூபாய் 3.2 கோடிக்கு சித்ரா ராமகிருஷ்ணா விற்றதும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் குடும்ப உறவுகள் மூலம் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், மார்ச் 2022 அன்று, சி.பி.ஐ. சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் யோகி இடையே 2,500 மின்னஞ்சல் பரிமாற்றங்களை மீட்டெடுத்ததாகக் கூறியதுடன்,  ஆனந்த் சுப்ரமணியன் தான் யோகி என்றும், அவரே மின்னஞ்சல் மூலம் சித்ரா ராமகிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாகவும் C.B.I கூறியது .

தேசியப் பங்குச்சந்தை குறித்த புகார்கள் வெடித்த போது சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக சித்ரா ராமகிருஷ்ணா செஷல்ஸ் தீவுக்குச் செல்ல யோகி ஏற்பாடு செய்ததும், அவரது சிகை அலங்காரத்தை விவரித்ததும், சீஷெல்ஸ் கடலில் குளிப்பது குறித்து விவாதித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எளிமையாகச் சொன்னால், வரிப் புகலிடங்களுக்குப் பெயர் பெற்ற செஷல்ஸ் தீவுக்கு சித்ரா ராமகிருஷ்ணாவின் பயணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆனந்த் சுப்பிரமணியனும் மின்னஞ்சலும்

கணக்கியல் நிறுவனம் சமர்ப்பித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்து, 06 ஜூலை 2018 தேதியிட்ட ஒரு கடிதத்தில், தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைவர் அசோக் சாவ்லா (Ashok Chawla), SEBI அமைப்பின் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதபி பூரி புச்சினுக்கு (Madhabi Puri Buch), ”தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழலில் குறிப்பிடப்பட்டுள்ள rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியின் பின்னணியில் இருப்பது யோகி அல்ல அது ஆனந்த் சுப்ரமணியன் என்றும், மனித உளவியலில் சிறந்து விளங்கும் ஆனந்த் சுப்ரமணியன் யோகியின் பெயரில் சித்ரா ராமகிருஷ்ணாவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும்" கூறியுள்ளார்.

ஆனந்த் சுப்ரமணியத்தின் கணினியில் கண்டறியப்பட்ட anand.subamanian9 மற்றும் sironmani.10 Skype கணக்குகள், Skype பயன்பாட்டு தரவுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டு, rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனும் ஆனந்த் சுப்ரமணியன் பயன்படுத்திய செல்போன் எண்ணுடனும் இணைக்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், தடயவியல் தணிக்கை அறிக்கையின்படி rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களில் "ஆசிரியர், கடைசியாக மாற்றியமைத்தவர், உருவாக்கியவர்" போன்ற ஆவணப் பண்புகளில்  (Document Attributes) சுப்ரமணியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களை உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இணைப்புகளின் நேரத்திற்கும் இடையேயான நேர வேறுபாடு சில நிமிடங்கள் மட்டுமே. கூடுதலாக மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள் ஆனந்த் சுப்ரமணியத்தின் சென்னை வசிப்பிடத்தின் புவி குறிச்சொல்லை (Geotagged Images) உள்ளடக்கி இருக்கிறது.

மேலும், உமைத் பவன் அரண்மனையில் (Umaid Bhawan Palace) ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ய rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட்டதும், ஆனந்த் சுப்ரமணியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து அந்த ஹோட்டலுக்கு சுமார் 2.4 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதும் தெரியவந்தது. மொத்தத்தில், சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கையின்படி ஆனந்த் சுப்ரமணியன் தான் சித்ரா ராமகிருஷ்ணாவை இயக்கியிருக்க வேண்டும். இருப்பினும், பிப்ரவரி 2022 அன்று ஆனந்த் சுப்பிரமணியன் "யோகி" என்று நம்பவில்லை ஆனால் அவர் தவறான நடத்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும், முக்கிய பதவிகளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையான அடையாளமாக யோகி இருக்கலாம் என்றும், தணிக்கை குழுவின் கண்டுபிடிப்புகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், நடைமுறையில் உள்ள மேலதிக விசாரணையின் அடிப்படையில் மட்டுமே நாம் முடிவுக்கு வர முடியும் என்றும் SEBI கூறியது குறிப்பிடத்தக்கது.

என்ன உத்தரவுகள்?

அநாமதேய கடிதங்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கைகளின் அடிப்படையில், தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது மற்றும் வெவ்வேறு நேரங்களில் பல்வேறு உத்தரவுகளை SEBI வழங்கியது. எடுத்துக்காட்டாக,

ஏப்ரல் 2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், SEBI அமைப்பின் விதிமுறைகளை மீறியதற்காக தேசியப் பங்குச்சந்தை 12% வட்டியுடன் ரூபாய் 625 கோடியை 2014 முதல் கணக்கிட்டு செலுத்துமாறும், Dark Fibre மூலம்  இணை இருப்பிட வசதியை மற்ற தரகர்களுக்கு முன்பாக சில தரகர்களுக்கு வழங்கப்பட்ட வழக்கில் 12% வட்டியுடன் ரூபாய் 62.58 கோடியை 2015 முதல் கணக்கிட்டு செலுத்துமாறு, தேசியப் பங்குச்சந்தை ஆறு மாதங்களுக்கு பங்குச்சந்தையில் இருந்து பணத்தை திரட்ட தடை விதித்தும் SEBI உத்தரவிட்டது. மேலும், தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக ஈட்டிய ரூபாய் 15.7 கோடி ஆதாயத்தை ஏப்ரல் 2014 முதல் 12% வட்டியுடன் கணக்கிட்டு திருப்பி செலுத்தவும், பங்குச்சந்தையை அணுக ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்தும் OPG Securities நிறுவனத்திற்கு SEBI உத்தரவிட்டது.

பிப்ரவரி 2021 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், முதலீட்டாளர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை எனினும் விதிமீறல்கள் நடைபெற்றதன் காரணமாக OPG Securities நிறுவனத்திற்கு ரூபாய் 5 கோடியும் தேசியப் பங்குச்சந்தை ரூபாய் 1 கோடியும் ரவி நரேன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா தலா ரூபாய் 25 லட்சமும் அபராதம் செலுத்துமாறு SEBI உத்தரவிட்டது. ஏப்ரல் 1994 முதல் மார்ச் 2013 வரை தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2022 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், பணி நியமனம், தெரியாத நபருடன் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் இணை இருப்பிடத்தில் ரகசிய தரவுகள் கையாளப்பட்ட விதம் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா ரூபாய் 3 கோடியும், தேசியப் பங்குச்சந்தை, ரவி நரேன் மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் தலா ரூபாய் 2 கோடியும் மற்றும் நரசிம்மன் ரூபாய் 6 லட்சமும் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவின் விடுப்பு பணமாக ரூபாய் 1.54 கோடியையும், ஒத்திவைக்கப்பட்ட போனஸ் (Deferred Bonus) ரூபாய் 2.83 கோடியையும் பறிமுதல் செய்து மொத்தம் ரூபாய் 4.37 கோடியை ஆறு நாட்களுக்குள் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியில் Deposit செய்யுமாறு தேசியப் பங்குச்சந்தைக்கு SEBI உத்தரவிட்டது. அத்துடன், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை இடைத்தரகர்களுடன் சித்ரா சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் மூன்று ஆண்டுகளும், ரவி நரேன் இரண்டு ஆண்டுகளும் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டனர். 

ஜூன் 2022 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், Dark Fibre வழக்கு தொடர்பாக தேசியப் பங்குச்சந்தை உட்பட 18 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூபாய் 43.8 கோடி அபராதம் விதித்தது. தேசியப் பங்குச்சந்தைக்கு ரூபாய் 7 கோடி அபராதமும், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா ரூபாய் 5 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. Way2Wealth Brokers, GKN Securities, and Sampark Infotainment நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தது.

மேல்முறையீடுகள்

மேல்முறையீட்டுதாரர்களால் (Appellants) SEBI அமைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளில் பங்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக,

ஏப்ரல் 2019 அன்று SEBI விதித்த அபராதத்திற்கு எதிரான வழக்கு பங்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (Securities Appellate Tribunal - SAT) மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையொட்டி, ஜனவரி 2023 அன்று தேசியப் பங்குச்சந்தை சில விதிமீறல்களைச் செய்திருக்கிறது, ஆனால் இணை இருப்பிட வசதி மூலம் முறையற்ற பலன்களைப் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், ரூபாய் 625 கோடியை செலுத்த கோரிய SEBI அமைப்பின் உத்தரவை ஒதுக்கி வைத்து, அதற்குப் பதிலாக ரூபாய் 100 கோடியை SEBI அமைப்புக்கு செலுத்துமாறு தேசியப் பங்குச்சந்தைக்கு sat உத்தரவிட்டது. மேலும், ஆகஸ்ட் 2023 அன்று Dark Fibre வழக்கிலும் நான்கு வாரங்களுக்குள் ரூபாய் 62.58 கோடியை வட்டியுடன் சேர்த்து தேசியப் பங்குச்சந்தைக்கு SEBI திருப்பித் தருமாறு SAT உத்தரவிட்டது.

பிப்ரவரி 2021 அன்று SEBI விதித்த அபராதத்திற்கு எதிரான வழக்கு பங்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையொட்டி, ஜூலை 2023 அன்று தேசியப் பங்குச்சந்தைக்கு SEBI விதித்த ரூபாய் 1 கோடி அபராதத்தை SAT நிராகரித்தது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 25 லட்சம் அபராதத்தையும் SAT ரத்து செய்தது.

ஜூன் 2022 அன்று SEBI விதித்த அபராதத்திற்கு எதிரான வழக்கு பங்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையொட்டி, டிசம்பர் 2023 அன்று தேசியப் பங்குச்சந்தை மீதான ரூபாய் 7 கோடி அபராதத்தை SAT ரத்து செய்தது, சித்ரா ராமகிருஷ்ணாவின் அபராதத்தை ரூபாய் 5 கோடியிலிருந்து ரூபாய் 25 லட்சமாகக் குறைத்தது மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் மீதான அபராதத்தை ரத்து செய்தது.

கைது படலம் 

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் தொடர்பாக 24 பிப்ரவரி 2022 அன்று ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் 06 மார்ச் 2022 அன்று சித்ரா ராமகிருஷ்ணா ஆகிய இருவரையும் C.B.I கைது செய்தனர். தற்போது பிணையில் உள்ள அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் மற்றும் சிலருக்கு எதிராக இணை இருப்பிட சேவையில் சில தரகர்களுக்கு முன்னுரிமை அணுகல்,  Dark Fibre, ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் பணமோசடி போன்ற பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக பலர் விசாரிக்கப்பட்டனர், சிலர் கைது செய்யப்பட்டனர், சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. 
இந்திய ஊடகங்களின் மௌனம்

அன்று 2G வழக்கின் போது இந்திய ஊடகங்கள் தி.மு.கவையும் காங்கிரஸையும் அரசியல் ரீதியாக ஓரங்கட்டுவதில் ஆர்வம் காட்டியதும், சமூக வலைத்தளவாசிகள் அ.ராசா மற்றும் கனிமொழி குறித்து கொச்சையான வாதங்களை முன்வைத்ததும், மிகைப்படுத்தப்பட்ட 2G வழக்கால் தி.மு.க 10 ஆண்டுகள் பெரும் பின்னடைவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இறுதியாக 2G வழக்கில் C.B.I குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி தீர்ப்பளித்த பிறகு இந்திய ஊடகங்கள் ஜோடித்த கதைகள் பல்லிளித்தது. எப்படியாகினும், 2G வழக்கை இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக ஜோடித்தும் அன்னா ஹசாரேவை வாழும் காந்தியாகக் காட்டி இந்திய ஊடகங்கள் செய்த பெரும் உதவியால் மே 2014 அன்று பா.ஜ.க அரியணையை பிடித்தது.

2G வழக்கு குறித்து பல்வேறு கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட இந்திய ஊடகங்கள் இன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் தொடர்பாக வெளிவந்த “உண்மை” செய்திகளை பரபரப்பாக விவாதிக்காமல் கள்ள மௌனம் காக்கின்றன. இதன் மூலம், 2G வழக்கு மற்றும் தேசியப் பங்குச்சந்தை வழக்கு நோக்கிய ஊடக நகர்வுகளில் இருந்து இந்திய ஊடகங்கள் அடிப்படையில் வலதுசாரிகள் (சில ஊடகங்கள் விதிவிலக்குகளுடன்) என்ற ஐயத்தை வரவழைக்கிறது.

மேலும், சமூக வலைத்தளங்களில் 2G வழக்கு நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராசா குறித்து விமர்சித்தவர்கள் இன்று தேசியப் பங்குச்சந்தை வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் குறித்து விமர்சிக்காமல் மௌனம் சாதிப்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் சார்ந்த பிரச்சனைகளுக்கு துள்ளிக் குதிக்கும் பல ஊடகங்கள் இன்று பா.ஜ.க ஆட்சியில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழல் குறித்த செய்திகளை விவாதிக்காமல் மௌனமாக நிற்பதன் மூலம் தாங்கள் வலது பக்கமென சாட்சியமளிக்கிறார்கள் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டி இருக்கிறது. 

முடிவுரை

ஆனந்த் சுப்ரமணியன் யோகி இல்லை என்று சித்ரா ராமகிருஷ்ணா மறுத்துள்ள நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. ஆனந்த் சுப்பிரமணியன் ஒரு யோகியா? அல்லது இந்த வழக்கில் செல்வாக்கு மிக்க ஒருவரைக் காப்பாற்ற ஆனந்த் சுப்பிரமணியன் பலிகடா ஆக்கப்பட்டாரா? அல்லது யோகி என்ற வாதமே புரளியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையில், தேசியப் பங்குச்சந்தை ஊழல் குறித்த ஆய்வறிக்கை தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுமாறு SEBI அமைப்பிடம் கேட்கப்பட்ட போது, ​​அது உள்நிர்வாக செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று வாதிடப்பட்டதால், அந்த விவரங்களை வெளியிட SEBI மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில், "ஆதாரத்தின் சுமை அதிகமாக (Burden of Proof) இருப்பினும், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் Quasi Judicial அமைப்பான SEBI உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்பது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள்

Video - NSE Co-location Scam


Video Stock Trading Algorithms 


VideoYogi in Market Manipulation


Video Anand Subramanian arrested by CBI


VideoSEBI Investigates NSE Algo Scam


Yogi of Dalal Street


NSE Co-location Facility 


NSE Real Time Data


Yogi's Advice to Ex-NSE Chief


Moneylife against NSE Scam 


Who is Anand Subramanian?



Who is Chitra Ramakrishna?


NSE Co-location Case Probe 


SEBI refuses to disclose reports under RTI



யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா?


சித்ரா ராமகிருஷ்ணா கைது


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Friday, March 18, 2022

ஈரான் - ஈராக் போர்

ஈரான் - ஈராக் போர்

*இது நாடுகளின் வரலாறு அல்ல போர்களின் சுருக்கம் மட்டுமே!
யார் இந்த கொமேனி?

1979 இல் அயதுல்லா ருஹோல்லா கொமேனி தலைமையில் அரங்கேற்றப்பட்ட ஈரானியப் புரட்சி மூலம் ஈரானிய மன்னர் முகமது ரேசா பஹ்லவியின் மேற்கத்திய சார்பு முடியாட்சி அகற்றப்பட்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியின் பின்னணியில் “தியாகம் இஸ்லாத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அண்டை நாடான ஈராக் உட்பட உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இஸ்லாமியப் புரட்சிகளில் ஈடுபட வேண்டும்” என்று கொமேனி தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.

ஈரானிய ஆட்சியாளர் முகமது ரெசா பஹ்லவியை வீழ்த்த உதவிய புரட்சி முறைகளைப் பயன்படுத்தி ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசைனின் ஆட்சியை தூக்கி எறிந்து தனது ஆட்சிமுறையின் கீழ் ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவ கொமேனி கடுமையாக முயன்றார். தனது புரட்சியை ஈராக்கில் புகுத்த கொமேனி தீவிர அரசியல் நடவடிக்கைகளை தொடங்கிய போது ஈரான் - ஈராக் அமைதி உருகுலைந்தது. 
யார் இந்த சதாம் ஹுசைன்?

“1968 ஆட்சிக் கவிழ்ப்பு” சதி மூலம் ஈராக்கில் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் சதாம் உசேன் முக்கிய பங்கு வகித்தார். இதை தொடர்ந்து 1968 இல் ஈராக்கின் துணை அதிபராக சதாம் ஹுசைன் மற்றும் அதிபராக அஹ்மத் ஹசன் அல் பக்கர் பதவியேற்றனர். நாளடைவில் அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக பாதுகாக்க எண்ணி நோய்வாய்ப்பட்ட அதிபர் அஹ்மத் ஹசன் அல் பக்கரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார். அதை தொடர்ந்து 1979 இல் அதிபர் பதவியை சதாம் ஹுசைன் ஏற்றுக் கொண்டார்.

1979 இல் ஈரானியப் புரட்சியின் தாக்கத்தால் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையினரான ஷியாக்கள் ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்றும் ஈரான் உடனான எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றும் வளைகுடாவில் புவிசார் அரசியல் மையமாக ஈராக்கை மாற்றிட வேண்டும் என்றும் முடிவெடுத்தார் ஈராக் நாட்டின் சிறுபான்மையினரான சன்னி பிரிவை சேர்ந்த சர்வாதிகாரி சதாம் ஹுசைன்.

Yes, you read it right. Saddam Hussein, a Sunni from the minority, became the 'dictator' of Iraq, which is dominated by Shia.
தொடங்கியது போர் 

22 செப்டம்பர் 1980 அன்று ஈராக் இராணுவம் ஈரான் - ஈராக் எல்லையைக் கடந்து ஈரானை ஆக்கிரமித்தது. இதுவே நீடித்த ஈரான் - ஈராக் போரைத் தூண்டியது. இப்போரில் ஈராக்கை ஆதரித்து சவூதி அரேபியா, குவைத் மற்றும் பிற அரபு நாடுகள் நிதியளித்தன. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஈராக்கை மறைமுகமாக ஆதரித்தது. சிரியா மற்றும் லிபியா மட்டுமே ஈரானை வெளிப்படையாக ஆதரித்தது.

நவீன காலத்தின் இரத்தக்களரியான ஈரான்-ஈராக் போரில் சுமார் 2,50,000 ஈரானியர்கள் 2,50,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும் 10,00,000 பேர் காயமடைந்ததாகவும் போரின் பொருளாதாரச் செலவு ஒரு டிரில்லியன் டாலர்களை ($ 1 Trillion) தாண்டியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத, பொருளாதார, பிராந்திய மற்றும் அரசியல் மோதல்களால் தூண்டப்பட்ட ஈரான் - ஈராக் போர் 20 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட போரில் ஒன்றாகும்.

1980 இல் ஈரானிய புரட்சியை நடுநிலையாக்க சில வாரங்கள் மட்டுமே ஆகும் என்று ஈராக் நம்பியது தவறு. ஈரானிய புரட்சியின் எதிர்ப்புத் தலைவர் ஷாபூர் பக்தியார் (Shapour Bakhtiar) மற்றும் ஈரான் ஜெனரல் கோலாம் அலி ஓவிசி (Gholam Ali Oveissi) ஆகியோர் சதாம் ஹுசைனுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர்.
தீர்மானம் 598

1980 இல் தொடங்கிய ஈரான்-ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நியாயமான சமாதான பிரேரணையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் அதிக காலம் பொறுமையாக காத்திருந்தது ஆய்வுக்குரியது. இறுதியாக 20 ஜூலை 1987 அன்று ஈரான் - ஈராக் இடையே “உடனடி போர் நிறுத்துதல், போர்க் கைதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் இரு நாட்டு தரப்பும் சர்வதேச எல்லைக்கு திரும்புதல்” ஆகிய தீர்மானங்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (தீர்மானம் 598) வலியுறுத்தியது. சரியாக ஒரு வருடம் கழித்து 20 ஜூலை 1988 அன்று ஈரான் ஈராக்குடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையொட்டி, இரு நாட்டினரும் தங்களின் ராணுவ துருப்புக்களை திரும்பப் பெறவும் 20 ஆகஸ்ட் 1988 அன்று ஈரான்-ஈராக் போர் முடிவுக்கு வந்தது.
இறுதி நிலை

ஈரான் மீதான முதல் தாக்குதல் ஈராக்கால் தொடங்கபட்ட பிறகு போர் தொடங்குகிறது. ஈராக் தனது இலக்கை அடையாததால் ஈரான் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் ஈரான் - ஈராக் போரில் வெற்றியாளர்கள் இல்லை என்றும் ஏறக்குறைய 8 ஆண்டுகள் நீடித்த போர் ஒரு முட்டுக்கட்டையில் (Stalemate) முடிந்தது என்றும் கருதுகின்றனர்.
விவரணைகள்

Iran - Iraq War Videos




வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...