Chocks: இரண்டு உலகப் போர்களின் சுருக்கம்

Friday, October 25, 2024

இரண்டு உலகப் போர்களின் சுருக்கம்

இரண்டு உலகப் போர்களின் சுருக்கம்
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. முதலாம் உலகப் போர் 
  3. இரண்டாம் உலகப் போர் 
  4. முடிவுரை 
  5. பின்னிணைப்பு
  6. விவரணைகள் 
முகவுரை 

நவீன உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் பற்றி சுருக்கமாக ஆராய்வோம். மேலும், வல்லரசுகள், இந்துத்துவா மற்றும் காந்தியின் பங்களிப்புகள் பற்றிய கருத்துக்கள் பற்றியும் விவாதிப்போம்.

முதலாம் உலகப் போர் 

1914 இல் ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் ஃபெர்டினான்ட் (Franz Ferdinand) மற்றும் அவரது மனைவி செர்பிய இளைஞர் காவ்ரீலோ பிரின்சிப்'பால் (Gavrilo Princip) கொல்லப்பட்டதன் மூலம் முதலாம் உலகப் போர் வெடித்தது. இதில் பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி ஆகிய நேச நாடுகளும், ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஒட்டோமான், பல்கேரியா ஆகிய மைய நாடுகளும் மோதிக் கொண்டன. குறிப்பாக, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் உறவினர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

முதலாம் உலகப் போரில் பல நாடுகள் ஈடுசெய்ய முடியாத நஷ்டங்களை அனுபவித்த போது, போரில் வெற்றி பெற்ற நேச நாடுகள் ஜெர்மனியே இதற்குக் காரணம் என்றும், அதன் விளைவுகளுக்கும் அவர்கள் தான் பொறுப்பு என்றும் கூறி, ஜெர்மனியையும் அழுத்தி, வெர்சாய்ஸ் உடன்படிக்கையில் (Treaty of Versailles) கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையால் ஜெர்மனிக்கு கடுமையான இழப்பீடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் உருவானதுடன், நீண்ட காலத்திற்கு ஜெர்மனியின் சுயாட்சி உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாறு, 1914 முதல் 1918 வரை நீடித்த முதலாம் உலகப் போர், கடுமையான வெர்சாய்ஸ் உடன்படிக்கையுடன் முடிவடைந்தது.
இரண்டாம் உலகப் போர் 

பாரபட்சமான வெர்சாய்ஸ் உடன்படிக்கையின் விளைவால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியின் அதிகாரத்தை மீட்டெடுக்கப் போவதாக சபதம் எடுத்த ஹிட்லர், அரசியல் உலகில் மெல்ல வளர்ந்து அரியணையை அடைந்தார். பின்னர், அண்டை நாடுகளை கைப்பற்றிப் பண்டைய ஜெர்மனியை மீண்டும் கட்டமைக்கப் போவதாக கூறிய ஹிட்லரின் ஜெர்மனி, 1939 இல் போலந்தை ஆக்கிரமித்ததால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய அச்சு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பின்னர் சோவியத் யூனியன் உள்ளிட்ட நேச நாடுகளை எதிர்கொண்டன. தொடக்கத்தில், ஜெர்மனியும் சோவியத் யூனியனும் ஆக்கிரமிப்பு இல்லா உடன்படிக்கையில் இருந்தாலும், பின்னர் ஜெர்மனி சோவியத் யூனியனை எதிர்த்து போரிட்டது. ஸ்டாலின்கிராட் போர் (Battle of Stalingrad) உள்ளிட்ட பல கடுமையான போர்களில் மோதல் தீவிரமடைந்தது. ரஷ்யாவின் கடுமையான குளிர் காலநிலையால் ஜெர்மனி படையினர் பாதிக்கப்பட்டனர். ஸ்டாலிங்கிராடில் ஆயுதங்களை தயாரிக்க தொழில்சாலை இருந்தது, இது ரஷ்யாவுக்கு ஒரு பெரிய வசதியாக இருந்தது. இதனால், நகரை நோக்கிய ஜெர்மனியின் முன்னேற்றத்தை சோவியத் யூனியன் எளிதாக தடுத்து நிறுத்தியது.

1941 இல் ஜப்பான் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. உலகளாவிய மோதலாக மாறிய இரண்டாம் உலகப்போர், கூட்டணிகள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளால் மோதலின் போக்கு மாறியது. 1945 இல் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசி, ஜப்பான் சரணடைந்ததால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

1941 இல் ஜப்பான் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. உலகளாவிய மோதலாக மாறிய இரண்டாம் உலகப் போர், கூட்டணிகள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளால் மோதலின் போக்கு மாறியது. 1945 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பின்னர், ஜப்பான் சரணடைந்ததால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
முடிவுரை 

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி பெற்றிருந்தாலும், பொருளாதார இழப்புகளை எதிர்கொண்ட காரணத்தால், அதன் காலனி நாடுகளை நிர்வகிக்க முடியாத நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, காலனி நாடுகள் வெவ்வேறு காலகட்டங்களில் விடுதலை பெற தொடங்கின. மெல்ல மெல்ல, அமெரிக்கா ஒரு புதிய வல்லரசாக மாறியது. இதற்கு பின்னர், சோவியத் யூனியனின் பொதுவுடைமை அரசியல் மற்றும் அமெரிக்காவின் முதலாளித்துவ அரசியல் இடையில் ஒரு பனிப்போர் தொடங்கியது, இது 1990 இல்  சோவியத் யூனியனின் பிரிவினை வரை தொடர்ந்தது.

மொத்தத்தில், முதலாம் உலகப் போரின் முடிவுகள் ஜெர்மனியை வில்லனாக சித்தரித்தன. இதுவே ஹிட்லர் இரண்டாம் உலகப் போரை தொடங்க காரணமாக அமைந்தது. இரண்டு உலகப் போர்களும் உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டின் எல்லைகளை மறுசீரமைத்து, முதலாளித்துவ உலகிற்கு அடித்தளமாக அமைந்தன.

பின்னிணைப்பு 

// ஹிட்லர் - தொழில்நுட்பம் //

ஹிட்லருக்கு தொழில்நுட்ப மேம்பாட்டில் உள்ள ஆர்வம் பெரிதும் ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகளவில் கனரக தொழிற்சாலைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. முதலாம் உலகப்போரில் உலக நாடுகள் ஜெர்மனியை மட்டும் குற்றம்சாட்டியது தவறு; இதனால், ஹிட்லர் இரண்டாம் உலகப் போரை தொடங்கியது தவறு என்றாலும், ஹிட்லர் தரப்பால் விஞ்ஞான ஆராய்ச்சிகள் உயர்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

// மோசமான வில்லனா ஹிட்லர்? //

சாமி கண்ணை குத்திவிடும் விடும் என்று பூச்சாண்டி காட்டுவது போல, ஹிட்லர் உலகின் மோசமான சர்வாதிகாரி என்று பலர் கூறுகிறார்கள். ஹிட்லர் மட்டுமே கொடூர வில்லன் என்றால், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீச உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனின் செயல்களை நியாயப்படுத்த முடியுமா? குறைவான தீமை என்று மட்டுப்படுத்த முடியுமா? என்ற சிக்கலான கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது.

ஒரு சாராருக்கு எதிராக ஹிட்லர் தவறு செய்தார், எனவே 20 ஆம் நூற்றாண்டின் மோசமான வில்லனாக ஹிட்லர் மட்டுமே கருதப்படுவது சரியானது அல்ல. உண்மையில், இரண்டாம் உலகப் போரை தொடங்க ஹிட்லருக்கு வெர்சேல்ஸ் உடன்படிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பல நாடுகள் வன்முறை மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிட்லர் மட்டுமே பொறுப்பாக பார்க்கப்படுவது இனி வருங்காலங்களில் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

// ஹிட்லர் - இந்துத்துவா//

நாஜிக்கள் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட யூதர்களின் ஆதிக்கம் காரணமாக இருந்தது; ஆனால் இங்கு உள்ள இந்துத்துவா கும்பல், திராவிடர்களுக்கு எதிராக இயங்க, மத வெறியும், சாதி வெறியும் காரணமாக உள்ளது. நாஜிக்கள் செயல்வடிவத்தை பின்பற்றும் இந்துத்துவா கும்பல் (குறிப்பாக RSS) யூதர்களை விட மோசமானவர்கள். யூதர்கள் போர்களை கண்டுள்ளனர், ஆனால் இந்துத்துவா கும்பல் போர்களை சந்தித்ததில்லை. இம்மண்ணின் பூர்வகுடிகளான திராவிடர்களை அடக்கி ஆள, கத்தின்றி ரத்தமின்றி மதத்தை மற்றும் சாதியை வலியுறுத்தி பழக்கிவிட்டனர். இதற்கு எதிராக சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை சரி செய்ய கிளம்பிய இயக்கமே திராவிட இயக்கமாகும்.

// ஹிட்லர் - நேதாஜி //

இரண்டாம் உலகப் போரின் போது, ​​நேதாஜி இந்தியாவின் சுதந்திரத்திற்கு சர்வதேச ஆதரவை நாடினார். 1941 இல் இத்தாலிய வெளியுறவு மந்திரி கலியாசோ சியானோ மூலம் இத்தாலிய பிரதமர்  முசோலினியைச் சந்தித்தார். அடுத்த ஆண்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஜெர்மனியின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ஹிட்லரை சந்தித்தார். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக நேதாஜியின் கோரிக்கையை ஹிட்லர் நிராகரித்தார்.

// இரண்டாம் உலகப் போர்  - காந்தி //

பிரிட்டன் அரசு காந்தியின் முழு சுதந்திரத்திற்கான அழைப்பை மறுத்து, இரண்டாம் உலகப் போருக்கு இந்திய ராணுவ வீரர்கள் உதவ வேண்டும் என்று விரும்பிய போது, காந்தி 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை (Quit India Movement) தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் மேலும் தீவிரமடைந்த போது, ஜப்பான் இந்தியாவை தாக்கலாம் என்ற அச்சுறுத்தல் வந்ததால், காந்தி பிரிட்டன் கோரிக்கைக்கு செவி செய்தார். ஆனால், போர் முடிந்த பிறகு, பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விவரணைகள் 



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...