- நுணுக்கங்கள்
- போலீஸ் காவல்
- நீதிமன்றக் காவல்
- குற்றப்பத்திரிகையும் ஜாமீன் உரிமையும்
- ஜாமீன் வகைகள்
- மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம்
- விவரணைகள்
நுணுக்கங்கள்
# இந்தியாவில், ஒரு நபரை 24 மணி நேரத்திற்கும் மேல் காவல் நிலைய லாக்கப்பில் (Police Lock-up) வைத்திருப்பதற்கான சட்ட அனுமதி இல்லை.
# விசாரணையின் தேவையை கருத்தில் கொண்டு, காவல்துறை அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அவசியம்.
# நீதிபதி, போலீஸ் காவலுக்கான அனுமதியை வழங்கி, அந்த நபரை அதிகபட்சம் 15 நாட்கள் வரை போலீஸ் காவலில் (Police Custody) வைக்கலாம்.
நீதிமன்றக் காவல்
# 15 நாட்களுக்கு பிறகு, விசாரணை தொடர்ந்து தேவைப்பட்டால், அந்த நபர் நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) மாற்றப்பட வேண்டும்.
# மொத்தமாக, போலீஸ் காவல் (அதிகபட்சம் 15 நாட்கள்) மற்றும் நீதிமன்ற காவல் (வழக்கின் தன்மையைப் பொறுத்து 45 அல்லது 75 நாட்கள்) சேர்ந்து 60 அல்லது 90 நாட்களை கடக்கக்கூடாது.
குற்றப்பத்திரிகையும் ஜாமீன் உரிமையும்
# 90 நாட்கள்: 10 ஆண்டு, 10 ஆண்டுக்கு மேல், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் (Sessions Court).
Note - All Sessions Courts are Trial Courts, but not all Trial Courts are Sessions Courts.
# இந்த 60/90 நாட்களுக்குள் காவல்துறை தரப்பால் குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இயல்பான ஜாமீன் (Default Bail) பெறும் உரிமை உண்டாகும்.
ஜாமீன் வகைகள்
ஜாமீன் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வழங்கப்படும் தற்காலிக பாதுகாப்பு ஆகும், இது விசாரணையின் காலத்திற்கு மட்டுமே அமைகிறது. ஜாமீன் நான்கு வகைப்படும். அவை,
- Anticipatory Bail
- Regular Bail
- Interim Bail
- Default Bail (Statutory Bail)
Anticipatory – கைது ஆகும் முன் ஜாமீன் (CrPC Section 438).
Regular – கைது செய்யப்பட்ட பிறகு வழக்கமான முறையில் ஜாமீன் (CrPC Section 437/439).
Interim – இடைக்கால ஜாமீன் (Anticipatory/Regular முடிவிற்கு முன்னர் - No specific section, but in the context of Sections 437 and 439).
Default – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் (CrPC Section 167(2)).
ஜாமீனில் விடக்கூடிய குற்றம் (Bailable Offence) 👇
# காவல்துறை கைது செய்த உடனே, ஜாமீனில் விடலாம்.
# இங்கு விசாரணை காலக்கெடு (60/90 நாட்கள்) முக்கியமல்ல.
ஜாமீனில் விட முடியாத குற்றம் (Non-bailable Offence) 👇
# ஜாமீன் பெற நீதிமன்ற அனுமதி அவசியம்.
# இங்கு விசாரணை காலக்கெடு (60/90 நாட்கள்) முக்கியம்.
Anticipatory Bail
# ஒரு நபர் கைது செய்யப்படுவதற்கான அபாயம் இருந்தால், அவர் முன்கூட்டியே ஜாமீன் உத்தரவை பெற நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
# விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை பாதிக்கக்கூடாது, வெளிநாட்டிற்குச் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் "முன் ஜாமீன்" வழங்கப்படும்.
Regular Bail
# குற்றத்தின் தன்மை, சான்றுகள், சாட்சிகள், குற்றவாளியின் பழைய வரலாறு, தப்பிச் செல்லும் அபாயம், விசாரணை பாதிக்கப்படுமா போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, Regular Bail வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.
Interim Bail
# ஒரு நபர் Anticipatory Bail அல்லது Regular Bail கோரியிருந்தாலும், அந்த மனுவைப் பற்றி தீர்மானிக்க நீதிமன்றத்திற்குக் கால அவகாசம் தேவைப்படும் சூழ்நிலைகளில், குறுகிய காலத்துக்கான பாதுகாப்பாக, அந்த நபரின் கைதை தற்காலிகமாக தவிர்க்க இடைக்கால ஜாமீன் வழங்கப்படலாம்.
# விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை பாதிக்கக்கூடாது, வெளிநாட்டிற்குச் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் "இடைக்கால ஜாமீன்" வழங்கப்படும்.
Default Bail (Statutory Bail)
# 60/90 நாட்கள் முடிந்ததும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், Default Bail (Statutory Bail) வழங்க வேண்டும், இது சட்டப்படி கிடைக்கும் உரிமை.
# குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், Statutory Bail கிடையாது. ஆனால், Regular Bail கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம்
மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்கள்,
# எந்தவொரு Non-bailable குற்றத்திலும் ஜாமின் வழங்கலாம்.
# கீழ்நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யலாம்.
விவரணைகள்
CrPC Section 167
https://indiankanoon.org/doc/1687975/
CrPC Section 437
https://indiankanoon.org/doc/848468/
CrPC Section 438
https://indiankanoon.org/doc/1783708/
CrPC Section 439
https://indiankanoon.org/doc/1290514/
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment