Chocks: திராவிட மாடல் அரசின் சில நலத்திட்டங்கள்

Wednesday, June 4, 2025

திராவிட மாடல் அரசின் சில நலத்திட்டங்கள்

திராவிட மாடல் அரசின் சில நலத்திட்டங்கள்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
திராவிட மாடல் 1.0 வெற்றிகரமாக பீடுநடை போடுகிறது. நாட்டு மக்களின் நலனுக்காக திராவிட மாடல் 2.0 தொடர வேண்டியது அவசியம். அதற்காக மக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவை தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கின்றனர்.

திராவிட மாடல் 1.0 அரும்பணிகள் மூலம் இன்று இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்ததற்குக் காரணம்,
  • பெரியார் போட்ட பாதை
  • அண்ணா பயணித்த வழி
  • கலைஞர் தொடர்ந்த பணி
  • ஸ்டாலின் மேற்கொள்கின்ற அறம்
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது! எதை சொல்ல? எதை விட? என எண்ணத் தூண்டும் அளவுக்கு பற்பல நலத்திட்டங்கள். அதில் சில நலத்திட்டங்களை இப்போது பார்ப்போம்.

1.நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளைஞியருக்காக கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் கனவு திட்டம்!

தொழில் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த பல்வேறு துறைகளில் இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

திறன் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் தங்கள் கனவு வேலைக்கான ஒரு படிக்கட்டாக “நான் முதல்வன் திட்டம்” திகழ்கிறது.


2.புதுமைப் பெண் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்கும் திட்டம்!

6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளின், இளங்கலை, டிப்ளமோ, அல்லது ஐடிஐ படிப்புகள் படிக்கும் வரை, மாதந்தோறும் ரூ.1,000 வங்கியில் நேரடியாக செலுத்தப்படும்.

ஏற்கனவே உதவித் தொகை பெறுகிறீர்களா? பரவாயில்லை – இத்திட்டத்திலும் பயன்பெறலாம்!

சமத்துவமான சமூகத்தை உருவாக்க பெண் கல்வி முக்கியமானதால், ஏழை மாணவிகள் தடையின்றி கல்வி பெற தமிழக அரசின் “புதுமைப் பெண் திட்டம்” உறுதி செய்கிறது!


3.தமிழ் புதல்வன் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி கனவை நிஜமாக்கும் திட்டம்!

6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள், இளங்கலை, டிப்ளமோ, அல்லது ஐடிஐ படிப்புகள் படிக்கும் வரை, மாதந்தோறும் ரூ.1,000 வங்கியில் நேரடியாக செலுத்தப்படும்.

ஏற்கனவே உதவித் தொகை பெறுகிறீர்களா? பரவாயில்லை – இத்திட்டத்திலும் பயன்பெறலாம்!

ஏழை மாணவர்கள் தடையின்றி வளர தமிழ்நாடு அரசின் “தமிழ் புதல்வன் திட்டம்” உறுதி செய்கிறது!


4.முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவை வழங்கும் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டம்!

இந்த உணவின் மூலம் ஒரு மாணவனுக்கு தினமும் கிடைக்கும் சத்துகள்:

293.40 கி.கலோரி ஆற்றல்
9.85 கிராம் புரதச்சத்து
5.91 கிராம் கொழுப்புசத்து
20.41 மி.கிராம் இரும்புசத்து
1.64 மி.கிராம் சுண்ணாம்புசத்து

மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆதரவாகும் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” திட்டம்!


5.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் முக்கியமான திட்டம்!

வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

இந்த தொகை, பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

சுமார் ஒரு கோடி பெண்களுக்கு பயனளிக்கக்கூடிய, பெண்கள் சுயமரியாதையுடன் வாழ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய முக்கியமான சமூகநீதி திட்டம் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஆகும்.


6.விடியல் பயணத் திட்டம்

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க இயலும் அற்புத திட்டம்!

பணச் சேமிப்பை அதிகரிக்கவும், சுய மேம்பாட்டை அடையவும், பொருளாதார சுமையின்றி பயணிக்கவும், இத்திட்டம் பெண்களுக்கு புதிய வாயிலாகிறது.

பெண்களுக்கு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகள் விரிவடைந்து வரும் சூழலில், இது பெண்களுக்கு நம்பிக்கையின் புதிய தொடக்கமாகும்.

பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படுத்தும் முக்கியமான திட்டம் “விடியல் பயணத்திட்டம்”!


7.மக்களைத் தேடி மருத்துவம்

45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பிசியோதெரபி, வலி நிவாரணம், பரிசோதனைகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும் திட்டம்.

மருத்துவ சேவைகள் கிராமங்கள் முதல் நகரங்கள் மற்றும் மாநகரங்கள் வரை விரிவாக வழங்கப்படுகின்றன.

பெண்கள், கிராமப்புற மக்கள், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பயனடைந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு, 2 கோடி மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கிய முயற்சிக்காக, தமிழ்நாடு அரசுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிசு வழங்கப்பட்டது.


8.தடம்

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், பொருளாதாரத்தையும், சமூக நீதியையும் ஒருங்கிணைக்கும் புதுமையான திட்டம்.

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட சிறப்பு முயற்சி.

பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள், கள்ளக்குறிச்சி டெரகோட்டா கலைஞர்கள், நீலகிரி தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் போன்ற பாரம்பரிய கலைஞர்கள் தங்களின் கலைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள்.

விளிம்புநிலை சமூகங்களை வருங்கால தலைமுறையுடன் இணைத்து, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் “தடம்” ஒரு பாலமாகச் செயல்படுகிறது.

No comments:

Post a Comment

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப்

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப் குறிப்பு =  இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்த...