Chocks: 1991 காலகட்ட தமிழ்நாட்டு அரசியல் சூழல்

Sunday, December 13, 2020

1991 காலகட்ட தமிழ்நாட்டு அரசியல் சூழல்

1991 காலகட்ட தமிழ்நாட்டு அரசியல் சூழல் 

சுருக்கம் 
  1. 1991 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 
  2. பரிதி இளம்வழுதி
  3. ஜெயலலிதா - சசிகலா - நடராஜன் 
  4. மாறன் - கலைஞர் 
  5. முடிவுரை 
  6. துணுக்குகள்
  7. விவரணைகள் 
1991 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 

26 மே 1991 இல் நடைபெற வேண்டிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ராஜிவ் படுகொலை காரணமாக தள்ளிப்போய் 15 ஜூன் 1991 இல் இந்திய பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து நடைபெற்றது. எழும்பூர் / முசிறி தொகுதியில் தலா ஒரு வேட்பாளர் இறந்ததால் 232 தொகுதிகளுக்கு மட்டும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. 

232 தொகுதிகளில் தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் கலைஞர் மட்டும் ஒற்றை நபராக துறைமுகத்தில் வென்றார் ஆனால் உடனே ராஜினாமா செய்தார். கலைஞர் ராஜினாமாவை தொடர்ந்து நடைபெற்ற துறைமுக இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் ஏ.செல்வராஜன் வென்றார். 21 டிசம்பர் 1994 இல் இருந்து வைகோவின் ம.தி.மு.க ஆதரவாளராக சட்டசபையில் செயல்பட்ட ஏ.செல்வராஜன் 2 அக்டோபர் 1995 இல் மரணமடைந்தார்.

பரிதி இளம்வழுதி

எழும்பூர் மற்றும் முசிறி ஆகிய 2 தொகுதிக்கான தேர்தல் 24 ஆகஸ்ட் 1991 அன்று நடைபெற்றது. எழும்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் பரிதி இளம்வழுதி மற்றும் முசிறி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தங்கவேல் வென்றனர். 

1991 சட்டசபையில் அ.தி.மு.கவினர் பரிதி இளம்வழுதியின் வேட்டியை இழுத்திட அன்றிலிருந்து இறுதி வரை பேண்ட் தான் அணிந்து வந்தார் பரிதி இளம்வழுதி. பரிதி இளம்வழுதி தி.மு.கவின் ஒற்றை முகமாக 1991-1996 சட்டசபையில் அதிமுகவின் சர்வாதிகார செயல்பாடுகளை எதிர்த்து தீவிரமாக குரல் எழுப்பினார் அதன் அடிப்படையில் “இந்திரஜித் - வீர அபிமன்யு” என்று கலைஞரால் புகழப்பட்டார். 2011இல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முதல் வழக்கு பரிதி இளம்வழுதி மீதே பாய்ந்தது. ஆனால் பின்னாட்களில் அதே பரிதி இளம்வழுதி அ.தி.மு.க சென்றது வேதனைக்குரியது.
ஜெயலலிதா - சசிகலா - நடராஜன் 
பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, ராஜாஜி, காமராஜர், மூப்பனார், எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அரசியலில் மாற்று கொள்கைகள் உடைய பல தரப்பினரும் பேசுவது, கை குலுக்குவது, சிரிப்பது, மரியாதை செய்வது எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் காலப்போக்கில் இந்த அரசியல் நாகரீக பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பாவிக்க ஜெயலலிதாவே வழிகோலிட காய் நகர்த்தியவர் நடராஜன். வெளிப்பார்வைக்கு அ.தி.மு.கவின் ஒற்றை தலைமை ஜெயலலிதா ஆனால் அ.தி.மு.கவின் உள் தலைமை நடராஜனே.

விழாவில் தி.மு.கவினர் பங்கேற்றால் அவர்கள் வெளியே சென்ற பிறகு அவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும், தி.மு.கவினரை பார்த்து வணக்கம் வைக்க அனுமதியில்லை, அமைச்சர்கள் யாரும் பேட்டி கொடுக்க அனுமதியில்லை என்று அ.தி.மு.க கட்சிக்குள் பல்வேறு சர்வாதிகார கட்டுப்பாடுகள் நடராஜன் அசைவில் ஜெயலலிதா இசைவில் அரங்கேறியது.

அரசு துறைகளில் தலையீடு, தனியார் நிறுவனங்களில் குறுக்கீடு, எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல், முக்குலத்தோர் பிரிவு இடைநிலை சாதியாக ஒருங்கிணைந்தது , தேவர் ஜெயந்தி பிரம்மாண்ட அரசு விழாவாக மாறியது, நில அபகரிப்பு, காவல் நிலையத்தில் சாதியும் கரைவேட்டியும் புகுந்தது, காரில் கட்சிக் கொடி, உலகில் பிரமாண்டமான வளர்ப்பு மகன் திருமணம் என 1991-1996 காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்தது அதிமுக.

நடராஜன் PRO - சந்திரலேகா IAS - சசிகலா Cassette - ஜெயலலிதா Spokesperson - MGR CM தான் ஆரம்ப கதை பின்னர் நடந்த கதைகளை உலகமே அறியும். மேலும் சசிகலா தரப்பு பகிரங்கமாக வளர்வதற்கு முன்பே வலம்புரிஜான் எழுதிய வணக்கம் புத்தகம் நமக்கு பல்வேறு செய்திகளை தருகிறது.
மாறன் - கலைஞர் 

1991 இல் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் அணுமுறை மாற்றமடைந்ததன் எதிரொலியாக கலைஞரின் மனசாட்சி என்று அழைக்கப்படும் முரசொலி மாறனிடம் கலைஞர் "நாம எப்பேர்ப்பட்ட பண்புடன் அரசியல் பண்ணோம், இப்ப இந்தம்மாவோட அரசியலோ இப்படி மோசமா இருக்கே" என்று வருத்தப்பட்டாராம். 

அதற்கு முரசொலி மாறன் கலைஞரிடம் "மாமா இன்னைக்கு அரசியல் செய்யும் முறையே மாறி விட்டது நாமளும் கொஞ்சம் மாறுனாத்தான் அரசியலில் நிலைத்து இயன்ற சேவையை செய்ய முடியும்" என்று சொன்னாராம். இது செவிவழி செய்தியே ஆனால் காலசூழல் உண்மையாக இருக்கிறது ஏனெனில் அந்த அளவுக்கு அரசியல் முறையை மாற்றி அமைத்தவர் நடராஜன். 

நெருப்பு வளையங்கள் சூழ்ந்த போதும் 1991-1996 காலகட்ட திமுகவை தமிழ்நாட்டில் கலைஞர் - டெல்லியில் மாறன் - சட்டசபையில் பரிதி இளம்வழுதி கட்டி காத்தது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை 

1991 க்கு பிறகு அரசியல் நாகரீக அணுமுறையை படுகொலை செய்து தமிழ்நாட்டு அரசியல் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்தது அ.தி.மு.கவின் நடராஜன் - சசிகலா இணை. இன்று தி.மு.க கட்சியானது அ.தி.மு.க போட்ட மோசமான பாதையை மாற்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறது. 

சிறு தீமை எது? பெரிய தீமை எது? என்பதை தீர்மானிப்பதிலே அரசியல் சார்ந்த மக்கள் நல்வாழ்வு இருக்கிறது. அவ்வகையில் இன்றைய காலசூழலில் தி.மு.க > அ.தி.மு.க. 

துணுக்குகள்

*1991 காலகட்டத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது.

*1991 இல் முதல் முறையாக மத்தியில் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

*அரசியலில் சற்று ஒதுங்கி இருந்த நரசிம்ம ராவ் 1991இல் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

*ஹர்ஷத் மேத்தா ஊழல் எதிரொலியால் இந்திய நிதி நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு விதிமுறைகளை மாற்றி அமைத்தது.

*1994 இல் ம.தி.மு.க கட்சியை தொடங்கினார் வைகோ.

*1989 இல் பா.ம.க  கட்சியை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.

*பண்ருட்டியில் இராமச்சந்திரன் தேர்தலில் வென்றதன் மூலம் பா.ம.க தனது முதல் சட்டமன்ற கணக்கை 1991 இல் தொடங்கியது.

விவரணைகள் 

Largest Wedding Banquet / Reception


Most Wedding Guests


பரிதி இளம்வழுதி மறைவு மிக பெரிய இழப்பு - மு.க.ஸ்டாலின் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள்

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள் பொருளடக்கம்  முகவுரை மகாத்மா காந்தியின் படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்...