Chocks: 2000 ஜார்ஜ் புஷ் vs அல் கோர் வழக்கு

Sunday, December 13, 2020

2000 ஜார்ஜ் புஷ் vs அல் கோர் வழக்கு

2000 ஜார்ஜ் புஷ் vs அல் கோர் வழக்கு 

*2000 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோர் போட்டியிட்டார்கள். 

*நவம்பர் 7 தேர்தல் நாளன்று புளோரிடாவில் அல் கோர் வெற்றி பெற்றதாக ஊடகங்கள் அறிவித்தன.

*புளோரிடாவில் வென்ற அல் கோரே அதிபர் என்று மக்கள் எண்ணியிருக்க சில மணி நேரங்களில் ஜார்ஜ் புஷ் முந்துவதாக ஊடகங்கள் அறிவித்தன. 

*ஜார்ஜ் புஷ்ஷே அதிபர் என்றும் அல் கோர் தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றும் ஊடகங்கள் அறிவித்தன.

*நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிகாரபூர்வமாக இரு வாரங்களுக்குப் பிறகு புளோரிடா தேர்தல் ஆணையம் 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ் வென்றதாக அறிவித்தது.

*தோல்வியை ஒப்புக்கொண்டதாக அறியப்பட்ட அல் கோர் தீடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி மறு வாக்கு எண்ணிக்கை கோரி புளோரிடா நீதிமன்றத்திற்கு முறையிட சென்றார். 

*புளோரிடா உயர் நீதிமன்றம் புளோரிடா மாகாணத்தின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. 

*புளோரிடா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு முறையிட சென்றார் ஜார்ஜ் புஷ். 

*அமெரிக்க தேர்தல் முறைப்படி 12 டிசம்பருக்குள் ஒவ்வொரு மாநிலமும் தேர்தல் முடிவை அறிவித்து இறுதி செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியது ஜார்ஜ் புஷ் தரப்பு.

*இவ்வகையில் கடைசி சில மணி நேரமிருக்கும் நிலையில் மறு வாக்கு எண்ணிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிறுத்தியது. 

*வேறு எந்த வாய்ப்பும் இல்லாமல் போக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அல் கோர் தோல்வியை ஒப்புக்கொண்டார். 

*ஜார்ஜ் புஷ் 271 தேர்தல் சபை வாக்குகளையும் அல் கோர் 266 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றார்கள்.

*2000 தேர்தலில் 270 தேவையை விட 1 வாக்கு அதிகம் பெற்ற ஜார்ஜ் புஷ் 2004 தேர்தலிலும் வென்று 8 ஆண்டு அதிபராக இருந்தார். 

*9/11 தாக்குதல், ஈராக் போர், ஆப்கான் போர், சதாம் உசேன் தூக்கு, பொருளாதார மந்தம் என முக்கியமான அமெரிக்க நிகழ்வுகள் ஜார்ஜ் புஷ் காலத்தில் நடந்திருக்கிறது.

குறிப்பு 

Bush vs Gore


5 Weeks Of High Drama That Give President Trump Precedent


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...