Chocks: அமெரிக்க வெளியுறவு கொள்கை

Sunday, December 13, 2020

அமெரிக்க வெளியுறவு கொள்கை

அமெரிக்க வெளியுறவு கொள்கை

சுருக்கம் 
  1. மன்றோ கொள்கை 
  2. ரூஸ்வெல்ட் இணை
  3. ஐசனோவர் கொள்கை
  4. போர்களின் மன்னன்
  5. முடிவுரை 
  6. குறிப்பு 
மன்றோ கொள்கை 

*2 டிசம்பர் 1823 இல் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ அவர்கள் "மன்றோ கொள்கை" என அழைக்கப்படும் ஒரு கொள்கையை அறிவித்தார்.

*மன்றோ கொள்கை என்றால் "அமெரிக்கக் கண்டத்தின் உள் விவகாரங்களில் ஐரோப்பா தலையிடுதல் கூடாது மற்றும் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளைக் காலனிகளாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சித்தல் கூடாது" என்பதாகும்.

*அமெரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் தடையின்றித் தலையிட அமெரிக்காவுக்கு அடிகோலியது மன்றோ கொள்கை. 
ரூஸ்வெல்ட் இணை

*6 டிசம்பர் 1904 இல் அமெரிக்கா அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள் "ரூஸ்வெல்ட் இணை" என்ற புதிய கொள்கையை மன்றோ கொள்கையுடன் இணைத்தார்.

*ரூஸ்வெல்ட் இணை என்றால் "அமெரிக்கக் கண்டம் ஐரோப்பிய காலனிக்குத் திறந்திருக்காது என்பதோடு அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், உயிர்கள், வளங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது" என்பதாகும். 
ஐசனோவர் கொள்கை

*5 ஜனவரி 1957 இல் அமெரிக்க அதிபர் ட்வைட் ஐசனோவர் அவர்கள் "ஐசனோவர் கொள்கை" என அழைக்கப்படும் ஒரு கொள்கையை அறிவித்தார்.

*ஐசனோவர் கொள்கை என்றால் "அந்நிய நாட்டிலிருந்து இன்னொரு நாட்டை ஆயுதமேந்தி ஆக்கிரமிப்பு செய்தால் பாதிப்படையும் நாடு தமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு வெளிப்படையான ஆயுத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராட அமெரிக்காவை உதவிக்கு அழைக்கலாம்" என்பதாகும்.

*ஆரம்பகால பனிப்போர் நேரத்தில் உருவாக்கப்பட்ட ஐசனோவர் கொள்கை என்பது சோவியத்தின் கம்யூனிச கொள்கையை எதிர்த்து போராட அடிகோலியது.
போர்களின் மன்னன்

*இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்தது பனிப்போர் (இராணுவம், தொழில்நுட்பம், விண்வெளி போட்டி)

*இறுதியில் 1991 இல் சோவியத் ஒன்றியம் தனி தனி நாடுகளாக உடைந்து பனிப்போர் முடிவடைந்தது. 

*இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பிலிப்பைன்ஸ் (1898-1946) தவிர உலகின் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடவில்லை.

*இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரியா, வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான், பனிப்போர் என 2016 வரை 248 போர்கள் நடந்துள்ளது.

*248 போர்களில் 201 போர்களில் நேரடியாக / மறைமுகமா அமெரிக்கா தலையிட்டு சுமார் 3 கோடி மக்கள் இப்போர்களில் இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

முடிவுரை 

*போர்களின் மன்னன் "அமெரிக்கா" அதற்கு காரணமாக அமைந்தது அமெரிக்காவின் மூன்று முக்கிய வெளியுறவு கொள்கைகளாக கருதப்படும் "மன்றோ கொள்கை - ரூஸ்வெல்ட் இணை - ஐசனோவர் கொள்கை" ஆகும்.

குறிப்பு 

Roosevelt And Monroe Doctrine


Eisenhower Doctrine


இரு பெரும் கட்சிகள்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...