உலகின் ஏழை நாடு
சுருக்கம்
- முகவுரை
- ஆப்பிரிக்க பூர்வகுடி
- ஆப்பிரிக்கா அரசியல் சூழல்
- கொள்கை அரசியல்
- ஆப்பிரிக்காவும் எய்ட்ஸ் நோயும்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
*சாக்லேட் செய்ய தேவைப்படும் மூலப்பொருளான கொக்கோ பவுடர் எந்த நாட்டில் அதிகமா விளைகிறது?
*வைர நகை செய்ய தேவைப்படும் வைரங்கள் எந்த நாட்டில் அதிகமா கிடைக்கிறது?
விடை - உலகின் ஏழை நாடு
கொக்கோ பவுடர் / வைரங்கள் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து தான் அதிகமா வருகிறது. குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணெய், நிலக்கரி, தங்கம் உற்பத்தி கூட இங்கிருந்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்கா தான் என்றும் உலகின் ஏழை நாடு, காரணம் ஏகாதிபத்தியம்.
ஆப்பிரிக்க பூர்வகுடி
20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ பேரினத்தின் இறுதிவடிவமான ஹோமோ சேபியன்ஸ் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. இவ்வகையில் ஹோமோ சேபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி.
ஆப்பிரிக்க மக்களாகிய நாம் ஆப்பிரிக்க தேசத்தை விட்டு நாளடைவில் சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில் வெளியேறி புது தேசங்களில் ஐக்கியமானோம். அப்படி உருவான தேசங்களில் திராவிடர்கள், ஆரியர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம்.
வலதுசாரி பார்வை கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் பெரியண்ணன் பாணியில் தான் ஆட்சி நடத்துவார்கள். இவர்களுக்கு பிற நாட்டின் வளங்கள் என்றுமே தேவை. அதனால் தான் உலகின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்தில் உள்ள வளமிக்க ஆப்பிரிக்க நாட்டை ஏகாதிபத்திய நாடுகள் கண்கொத்தி பாம்பாக தங்கள் கட்டுப்பாட்டில் அடைகாத்து வருகின்றனர்.
ஐரோப்பா தனது Divide & Rule யுத்தி மூலம் உள்ளூர் ஆப்பிரிக்க அரசியல் சூழலை பாழாக்கியது. அதன் எதிரொலியாக ஆப்பிரிக்காவில் பல்வேறு பிரிவினைகள் உருவாகி அது இன்று வரை நிவர்த்தி செய்யப்படமால் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆப்பிரிக்கா வாழ்வியல் நிலையை Lost போன்ற ஆங்கில தொடர்கள் சிறப்பாக பதிவு செய்து இருக்கும்.
கொள்கை அரசியல்
உலகிலே அதிக கிளர்ச்சி நடந்த நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்கா முதன்மையான இடம்பெறும் அதற்கு கறுப்பின போராளி நெல்சன் மண்டேலா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் தான் ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்ரிக்கா நாடாவது ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
இடதுசாரி (பொதுவுடைமை) கொள்கை கொண்ட சோவியத் ஒன்றியம் ஒரு காலத்தில் வலதுசாரி (முதலாளித்துவம்) கொள்கை கொண்ட அமெரிக்காவை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியது வரலாறு. ஆனால் பிற்காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதி மிக்கைல் கொர்பசோவின் தவறான அரசியல் போக்கினால் சோவியத் ஒன்றிய நாடுகள் தனித்தனியாக பிரிந்து போய் இடதுசாரி முகமே இல்லமால் ஆக்கப்பட்டது வேதனைக்குரிய உண்மை.
ஒரு நாள் இல்லை ஒரு நாள் மீண்டும் உலகம் முழுவதும் இடதுசாரியம் எழுந்தால் உலகிற்கு நன்மைகள் பயக்கும் என்று நம்பலாம்.
ஆப்பிரிக்காவும் எய்ட்ஸ் நோயும்
உலகில் மிக மோசமான வியாதியாக கருதப்படுகிற எய்ட்ஸ் என்னும் வைரஸ் நோய் ஆப்பிரிக்காவில் தான் முதல் முதலாக அறியப்பட்டது. இன்றும் ஆப்பிரிக்காவில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்னிக்கை மிக அதிகம். உலக மக்கள் அண்டாத நாடாக ஆப்பிரிக்காவை ஒதுக்கி வைக்க எய்ட்ஸ் நோய் பரப்பப்பட்டதாக கூறப்படுவது உண்டு.
2014 மலேசியா விமான விபத்து குறித்து ஏலியன்ஸ் கதை, இன்சூரன்ஸ் கதை, பைலட் தற்கொலை போன்ற பல கதைகள் உண்டு ஆனால் இதில் அதிகம் பேசப்படாத இன்னொரு கதை ஒன்று உண்டு அது எய்ட்ஸ் மருத்துவ உயரதிகாரிகள் இதில் மரணித்தது தான்.
முடிவுரை
மதுரை என்றால் முக்குலத்தோர் - வெட்டுக்குத்து, பொள்ளாச்சி என்றால் கவுண்டர் - அடிதடி என்று 1990களுக்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் காட்டுவது போல பல மொழி திரைப்படங்கள் ஆப்பிரிக்கா என்றால் ஏழை நாடு, கொள்கைக்கார நாடு, மோசமான நாடு என்று காட்டுவதும் நுண்ணரசியல் தான்.
ஏனெனில் ஆப்பிரிக்கா என்றால் பிரிவினை, போகோ அராம், கறுப்பினம், எய்ட்ஸ், காந்தி பயணம், ஆப்ரிக்க இந்தியர்கள், மண்டேலா போராட்டம் தான் பலருக்கும் தெரிய வருகிறது ஆனால் அவை போக ஆப்பிரிக்கா பல அற்புத வளங்களை கொண்ட நாடு என்றும் அதன் வளங்களை இறக்குமதி செய்து கொண்டு ஆப்பிரிக்க நாட்டை ஆட்டி வைப்பது ஏகாதிபத்திய அரசியல் என்றும் உள்ளூர் பிரிவினை சூழ்ச்சியால் ஆப்பிரிக்கா ஏழை நாடாக சிக்குண்டு கிடக்கிறது என்றும் பலர் பேசுவதில்லை என்பதில் எனக்கு வியப்பில்லை.
ஆப்பிரிக்க அடிமைகளின் வரலாறு
Top Aids Researchers Killed In MH17
Conspiracy Theorists On MH370 / MH17
Countries in Africa
Nelson Mandela
Boko Haram
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment