Chocks: மிலிட்டரி ஹோட்டல் பெயர்க்காரணம்

Sunday, December 13, 2020

மிலிட்டரி ஹோட்டல் பெயர்க்காரணம்

மிலிட்டரி ஹோட்டல் பெயர்க்காரணம் 
*ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது ஆங்கிலேய ராணுவ வீரர்கள் அசைவ உணவு அருந்த ஹோட்டல்களில் அசைவ உணவையும் சேர்த்து சமைத்திட ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.

*அக்கால இந்தியாவில் இந்து மக்களால் நடத்தப்பட்ட சைவ ஹோட்டல்கள் தான் முழுமையாக இயங்கி வந்தது.

*ஆங்கிலேய அரசின் இந்த திடீர் கட்டாய உத்தரவால் சைவ ஹோட்டல் முதலாளிகள் வருந்தினார்கள்.

*வேறு வழியில்லாமல் ஆங்கிலேய அரசின் நிர்பந்தம் காரணமாக சைவ ஹோட்டல் முதலாளிகள் அசைவ உணவையும் சேர்த்து தயாரித்தனர்.

*சைவ ஹோட்டல்களில் மிலிட்டரி பிரிவு என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.

*சைவ ஹோட்டல்களில் மிலிட்டரி பிரிவுக்கு வருகை புரிந்து ஆங்கிலேய ராணுவ வீரர்கள் அசைவ உணவை அருந்த அதுவே "மிலிட்டரி ஹோட்டல்" என்றானது.

*கர்நாடகா மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரு பகுதியில் இன்றும் நிறைய "மிலிட்டரி ஹோட்டல்" உண்டு.

*ஆரம்பத்தில் மிலிட்டரி ஹோட்டலில் மட்டன் மற்றும் கோழி தான் தயாரிக்கப்பட்டது நாளடைவில் பலதரப்பட்ட அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது.

*மிலிட்டரி ஹோட்டல் என்பதன் பெயர்க்காரணம் மேலும் ஆய்வுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...