ஸ்வாலி போர்
29 நவம்பர் 1612 = ஸ்வாலி போர் (Battle of Swally)
*1609ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் (British East India Company) இந்தியாவில் வணிகம் செய்ய டெல்லி முகலாய பேரரசர் ஜஹாங்கீர் மன்னரிடம் ஒப்பந்தம் செய்தனர்.
*ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய இந்தியா வந்த அந்நேரத்தில் போர்த்துகீசியர் (Portuguese Empire) வியாபாரத்தில் கூடுதல் செல்வாக்குடன் இருந்தனர்.
*அந்நிய வணிகம் கடல் வழியில் நடைபெற்று வந்த அந்நேரத்தில் இந்திய கப்பற்படையில் போர்த்துகீசியர் ஆதிக்கம் செலுத்தினர்.
*1612ஆம் ஆண்டு சூரத் அருகே ஸ்வாலி என்ற இடத்திற்கு கேப்டன் தாமஸ் பெஸ்ட் தலைமையில் ஆங்கிலேயரின் நான்கு போர்க் கப்பல்கள் வந்தன.
*ஆங்கிலேய வணிகப் பொருட்களின் பாதுகாப்பிற்காகவும் போர்த்துகீசிய கடல் கொள்ளையர்களை விரட்டவும் இக்கப்பற்படை என்றவொரு கதையை முகலாய பேரரசிடம் சொல்லி 1612இல் ஸ்வாலி போர் மூலம் போர்த்துகீசியரின் இந்திய சாம்ராஜ்ய பிடியை தளர்த்தினர் ஆங்கிலேயர்கள்.
*போர்த்துகீசியரின் வலிமையான கப்பற்படையை தோற்கடித்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வலுவாக காலூன்றினர்.
*இதற்கு பிறகு நடந்தவைகள் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது.
*ஆங்கிலேய ஆட்சிக்கும் நவீன இந்திய கப்பற்படைக்கும் அடித்தளம் இட்டது ஸ்வாலி போர்.
Reference
Battle Of Swally
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment