Chocks: ஜீன்ஸ் பேண்ட் பிறந்த கதை

Saturday, January 2, 2021

ஜீன்ஸ் பேண்ட் பிறந்த கதை

ஜீன்ஸ் பேண்ட் பிறந்த கதை 
*18ஆம் நூற்றாண்டில் கலிபோர்னியாவில் தங்க சுரங்கங்களில் அடிமை தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். 

*அந்நேரத்தில் நியூயார்க்கில் இருந்து லெவி ஸ்ட்ராஸ் என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார்.

*அவருடைய எல்லா வகை துணிகளும் விற்றன ஆனால் கேன்வாஸ் துணிகள் மட்டும் விற்கவில்லை. 

*சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாக தொழிலாளிகள் அவரிடம் புலம்பினார்கள். 

*விற்காத கேன்வாஸ் துணிகள் மற்றும் சுரங்க தொழிலாளிகளின் பேண்ட் கிழியக் கூடாது என்ற கோணத்தில் சிந்தித்தார்.

*கேன்வாஸ் துணியிலே பேண்ட் தைத்தால் என்ன? என்ற யோசனை லெவி ஸ்ட்ராஸ்க்கு தோன்றியது. 

*கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்த பிறகு சுரங்க தொழிலாளிகள் கனமான உபகரணங்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்க நேரிடும் போது பைகள் கிழியலாம் என்பதால் பித்தளை நட்டுகளை பேண்ட் பாக்கெட்டுகளின் ஓரங்களில் வைத்து தைத்தார்.

*ஜேக்கப் டேவிஸ் (Jacob Davis) மற்றும் லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) இணைந்து தயாரித்த புதிய ரக கேன்வாஸ் பேண்ட் சுரங்க தொழிலாளிகளை மிகவும் கவர்ந்தன. 

*இத்தாலி (Italy) அருகே "ஜீனோவா" (Genoa) பகுதியில் நீல (Blue Fabric) வண்ண துணியினை வாங்கி பேண்ட் தைத்தார் அதுவே "ஜீன்ஸ்" என்றானது.

*சுரங்க தொழிலாளிகளுக்காக லெவி ஸ்ட்ராஸ் தயாரித்த ஜீன்ஸ் நாளடைவில் உலக நாடுகளை சென்றடைந்தது. 

*இன்று ஜீன்ஸ் உலக மக்களின் தேசிய உடையைப் போல் ஆகிவிட்டது. 

*நவீன மாதிரி ஜீன்ஸ் காப்புரிமை பெறப்பட்ட நாள் = 20 மே 1873.
Reference

Jean: Story Of An Original


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...