Chocks: நடிகர் எஸ்.ஏ.அசோகன்

Saturday, January 2, 2021

நடிகர் எஸ்.ஏ.அசோகன்

நடிகர் எஸ்.ஏ.அசோகன் 

பிறப்பு = 20-மே-1931 / இறப்பு = 11-நவம்பர்-1982
*திருச்சியை சேர்ந்த எஸ்.ஏ.அசோகன் (இயற்பெயர் ஆன்டனி) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். 

*திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

*இவரின் மகன் நடிகர் வின்சென்ட் அசோகன் ஆவார். (வட சென்னை படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்தவர்)

*இவரின் மற்றொரு மகன் அமல்ராஜ் அக்டோபர் 2002இல் இறந்தார்.

*வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என்று பல்வேறு வேடங்களில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

*வசன உச்சரிப்பில் தனித்துவம் வாய்ந்தவர் என்று பலராலும் போற்றப்பட்டவர்.

*இவர் ஹீரோவாக நடித்த இது சத்தியம் (1963) படத்தில் தான் பாலிவுட் கனவுக்கன்னி என அழைக்கப்பட்ட ஹேமா மாலினி நடனமங்கையாக அறிமுகமானார்.

*ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் (1965) படத்தில் "இறந்தவனை சுமந்தவனும்" பாடலை பாடியுள்ளார்.

*நடிகர் திலகம் சிவாஜியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக சிவாஜியின் 125வது படமான உயர்ந்த மனிதன் (1968) படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

*குறிப்பு = சிவாஜியின் காவல் தெய்வம் (1969) படத்தில் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் கிடையாது.

*எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நேற்று இன்று நாளை (1974) படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

*குறிப்பு = நேற்று இன்று நாளை (1974) எஸ்.ஏ.அசோகனின் சொந்த தயாரிப்பாகும்.

*பிரபல ஏ.வி.எம் நிறுவனத்திடம் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தரை அறிமுகம் செய்து வைத்தார். 

*பிறகு ஏ.சி.திருலோகச்சந்தர் ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

*கர்ணன், அதே கண்கள், உயர்ந்த மனிதன், நான், மூன்றெழுத்து, அன்பே வா உட்பட பல படங்களில் தனது தனி முத்திரையை பதித்தவர்.

*எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏ.வி.எம் ராஜன் உட்பட பல நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார்.

*மாரடைப்பால் 1982இல் மரணமடைந்தார்.

விவரணைகள் 

உயர்ந்த மனிதன் படக்காட்சிகள் 


அன்பே வா படக்காட்சிகள் 


சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா? எடுத்து அவைகளை கோர்க்கட்டுமா?


"இறந்தவனை சுமந்தவனும்" பாடல். இப்பாட்டின் இறுதியாக சிறுகாட்சியில் வருபவர் நடிகை ஜெயக்குமாரி.


"ஓராயிரம் பார்வையிலே" பாடல். நடிகை மணிமாலா நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியின் மனைவி ஆவார்).


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

ஜனதா ஆட்சி வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பொருளடக்கம்  முகவுரை  ஜனதா கட்சி உருவாக்கம் 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் மண்டல் ஆணையம் வைத்தியலிங்கம் ஆண...