Chocks: பெட்ரோலியம் - நிலக்கரி - பிளாஸ்டிக் - காந்தம் - தங்கம் - வைரம்

Saturday, January 2, 2021

பெட்ரோலியம் - நிலக்கரி - பிளாஸ்டிக் - காந்தம் - தங்கம் - வைரம்

பெட்ரோலியம் - நிலக்கரி - பிளாஸ்டிக் - காந்தம் - தங்கம் - வைரம் 

பெட்ரோலியம் 

லத்தீன் மொழியில் பெட்ரோலியம் என்றால் "பாறைக்குள் இருக்கும் எண்ணெய்" (பெட்ரா = பாறை / ஓலியம் = எண்ணெய்). இறந்த நுண்ணுயிர்கள் கடலின் அடிவாரத்திலோ கடலின் மணல் பகுதியிலோ புதைந்து விடுகின்றன. பூமியின் வெப்பம் (Heat), அழுத்தம் (Pressure), சிதைவு (Decompose) போன்ற செயல்பாடுகளால் பல்லாயிரம் ஆண்டுகள் செல்ல செல்ல இறந்த உயிரினங்கள் எண்ணெய் போன்ற திரவமாகி விடுகிறது. அதுவே பெட்ரோலியம் (கச்சா எண்ணெய்) எனப்படுகிறது. கச்சா எண்ணெய் (Crude Oil) சுத்திகரிப்பு மூலம் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், பெட்ரோ கெமிக்கல், மெழு போன்ற பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது.
நிலக்கரி

தொன்மையான காலத்தில் பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணில் புதையுண்டது. நாளடைவில் மண்ணானது அப்பகுதியை மென்மேலும் மூடுவது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. ஒரு கட்டத்தில் பூமியின் வெப்பம் (Heat), அழுத்தம் (Pressure), சிதைவு (Decompose) போன்ற செயல்பாடுகளால் புதையுண்ட தாவரங்கள் படிவுகள் (Deposits) ஆக மாறி நிலக்கரி (Coal) ஆக மெதுவாக உருமாறிற்று.
பிளாஸ்டிக்

1907ம் ஆண்டு லியோ பேகிலாண்டு என்ற விஞ்ஞானி பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார். செல்லுலோஸ் (Cellulose), நிலக்கரி (Coal), வேதி உப்புகள் (Chemical Salts), கச்சா எண்ணெய் (Crude Oil) போன்ற பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தயாராகிறது. பிளாஸ்டிக் உருவாக்கத்தில் மேற்க்கூறிய பொருட்களின் தனி மூலக்கூறுகளைத் தொடர்ச்சியாகச் சங்கிலி போல் அமையச் செய்து மாறும் பாலிமரைஸ் (Polymerization) நிகழ்வில் அவை புதிய வேதியியல் - இயற்பியல் பண்புகளை பெறுகின்றன. இப்படி பல்வேறு பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் அதன் புதிய மூலக்கூறு தன்மையால் அழிக்க முடியாத இயல்பைப் பெற்றுவிடுகிறது.
காந்தம்

கிரேக்க நாட்டை சேர்ந்த ஆடு மேய்ப்பாளர் மேக்னஸ் (Magnes The Shepherd) பாதுகாப்பிற்கு இரும்பு கத்தியுடன் ஆடு மேய்த்து கொண்டு ஐடா மலை (Mount Ida) பக்கமாக நடந்து வந்த போது கத்தி பாறையை நோக்கி இழுக்கப்பட்டது. இந்த நிகழ்வே காந்தம் (Magnet) கண்டுபிடிப்பதற்கு அடிப்படை காரணமானது. மேக்னஸ் என்பவர் காந்தம் பற்றி உலகிற்கு முதல் முதலாக எடுத்துக்கூறிய காரணத்தினால் அவருடைய பெயரிலேயே மேக்னட் என அழைக்கப்பட்டது. இரும்பை தன்னுள் இழத்துக்கொள்ளும் காந்தம் தென்துருவம் வடதுருவம் என இரண்டு துருவங்களை உடையது. காந்த துண்டினை ஓர் கயிற்றில் கட்டி சுற்றி விட்டு அந்த சுற்றானது நின்றவுடன் வடக்கு திசையை (North Pole) நோக்கி இருக்கக்கூடிய பகுதி வடதுருவம் என்றும் தெற்கு திசையை (South Pole) நோக்கி இருக்கக்கூடிய பகுதி தென்துருவம் என கண்டறியலாம்.
தங்கம்

பிரபஞ்ச நட்சத்திரங்களை இயக்குவது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) ஆகும். பிரபஞ்சம் தோன்றிய போது இரு வகை அணுவான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் உருவாகியிருந்தன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சூப்பர்நோவா (Supernova) என்ற நட்சத்திர வெடிப்பின் வினையால் கிடைப்பது தான் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வைரம் 

வைரம் உண்டாவது 150-200 கிலோமீட்டர் பூமியின் ஆழத்தில் 1500 டிகிரி வெப்பத்தில். வைரம் உருவாக எடுத்து கொள்ளப்படும் காலம் 150 - 200 கோடி ஆண்டுகள். மனிதன் கண்டறிந்த மிக குறைந்த வயதுடைய வைரம் 3 கோடி ஆண்டு முன் உருவானது. உருவான ஆழத்தில் சென்று வைரத்தை எடுத்து வர எந்த நவீன கருவியாலும் இயலாது. எரிமலை குழம்பு (Lava) பீறிட்டு பூமியின் மேற்பரப்பிற்கு ஓடி வரும் போது கூடவே வைரத்தையும் (கரி) மனிதன் தோண்டி எடுக்க கூடிய ஆழத்திற்கு கொண்டுவருகிறது. பெரிய அழுத்தத்தில் சுருங்கி உருவாக்க பட்டது தான் வைரம் இவ்வளவு கடினமான இருக்க காரணம்.
விவரணைகள் 

Petroleum Formation 



Plastic Formation


Magnet Formation


Gold Formation


Diamond Formation


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...