பெட்ரோல் டீசல் விலை ஓர் பார்வை
உலகளவில் டீசல் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் பெட்ரோலை விட சற்று கூடுதல் விலை கொண்ட எரிபொருளாக டீசல் தான் இருக்கிறது. இருப்பினும் பல வருடங்களாக இந்தியாவில் டீசலின் விலை பெட்ரோலை விட குறைவாக இருந்து வந்தது. அப்படி இங்கே பெட்ரோலை விட டீசல் விலை குறைவாக இருக்க இரண்டு எரிபொருட்களுக்கும் மாறுபட்ட வரி அமைப்பே காரணமாகும். இந்தியாவில் டீசல் எரிபொருளுக்கு கலால் வரி மற்றும் வாட் (மதிப்பு கூட்டப்பட்ட வரி) வரி பெட்ரோலை விட குறைவாக இருந்து வந்தது. இன்றோ இந்தியாவில் கலால் வரி அதிகமாக உயர்த்தப்பட்டதால் டீசல் எரிபொருளுக்கும் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கலால் வரி உயர்வு காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு இடையில் மிகக் குறைந்த வித்தியாசம் காணப்படுகிறது.
BS4 என்ஜின் வண்டிகளுக்கு பதிலாக BS6 என்ஜின் வண்டிகளை உற்பத்தி செய்ய இந்தியா அரசு முனைப்பு காட்டியதை தொடர்ந்து தற்போதுள்ள டீசல் வண்டிகளை BS6 என்ஜின் வகைக்கு தரம் உயர்த்தினால் வண்டிகளின் விலை ரொம்ப அதிகமாகிடும் என்பதால் பெட்ரோல் வண்டிகளையே தயாரிக்க கார் நிறுவனங்கள் முனைப்புக் காட்டுகின்றனர். திடீர் டீசல் விலை அதிகரிப்புக்கு இதுவும் ஓர் காரணியாக கருதப்படுகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை வெகுவாக குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கு கலால் வரி உயர்வே முக்கிய காரணமாகும். ஏனெனில், இன்று 1 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கு நுகர்வோர் செலுத்தும் விலையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் வரியாக (கலால் மற்றும் வாட்) கொண்டது.
உலகமயமாக்கல் யுகத்தில் விலைவாசி உயர்வை எளிதில் தடுக்க இயலாது என்ற கூற்று ஏற்ககூடியதே அதே சமயம் உலகளவில் உற்பத்தி பொருளின் விலை குறைந்தால் அந்தந்த நாடுகளில் இறுதி பொருளின் விலையை குறைப்பதும் நடப்பது உண்டு. அவ்வகையில் உலகளவில் கச்சா எண்ணெய் மிக குறைந்த விலைக்கு இறங்கிய பின்னரும் இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி எரிபொருளை மேலும் விலை கூட்டி விற்பது முறையான செயல் ஆகாது.
விவரணைகள்
Petrol Diesel Historical Price Data
Crude Oil 10 Years Price Chart
Diesel Is Costlier Than Petrol
Diesel Cars Leave Showrooms
Why Diesel Is Expensive Than Petrol?
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
நீங்கள் எழுதும் கட்டுரைகளை நான் வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
ReplyDelete