வித்தியாசமான அடக்க முறைகள்
பிணத்தை எரிக்கவும் புதைக்கவும் இல்லாமல் "சிலர்" வித்தியாசமான முறையில் பிணத்தை அடக்கம் செய்வார்கள். அந்த "சிலர்" யாரெனில்,
1. பிலிப்பினோ மரபுகள் (Filipino Burial)
2. மடகாஸ்கர் ஃபமதிஹானா (Famadihana)
3. தென் கொரிய மணிகள் (South Korea Beads)
4. நோர்டிக் நீர் அடக்கம் (Nordic Water Burial)
5. திபெத்திய வான புதைகுழி (Tibetan Sky Burial)
6. ஜோரோஸ்ட்ரிய இறுதிச் சடங்கு (Zoroastrian Funeral)
7. கோமஞ்சே மேடை புதைகுழி (Comanche Platform Burial)
பிலிப்பினோ மரபுகள்
*டிங்குவியன் (Tinguian) மக்கள் இறந்தவருக்கு ஆடம்பரமான ஆடையை அணிவித்து சடலத்தை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உதட்டில் சிகரெட்டை வைப்பார்கள்.
*பெங்குட் (Benguet) மக்கள் இறந்தவரின் கண்களை மூடி வீட்டின் நுழைவாயில் முன்னர் நாற்காலியில் உட்கார வைப்பார்கள்.
*செபுவானோ (Cebuano) மக்கள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு சிவப்பு நிற ஆடையை அணிவித்து அக்குழந்தைகள் பேய்களைப் பார்க்கும் வாய்ப்பைக் குறைக்கிறார்கள்.
*சாகடா (Sagada) மக்கள் இறந்தவர் ஆத்மாக்களை சொர்க்கத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர எண்ணி சவப்பெட்டிகள் குன்றில் தொங்கவிடப்படுகின்றன.
*கேவைட் (Cavite) மக்கள் மரணத்திற்கு முன் அந்நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெற்று மரத்தில் இறந்தவரை செங்குத்தாக அடைக்கிறார்கள்.
*பிலிப்பைன்ஸ் பிராந்திய இறுதிச் சடங்குகளின் பன்முகத்தன்மையை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
மடகாஸ்கர் ஃபமதிஹானா
*குடும்ப உறுப்பினர் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எலும்புகளைத் திருப்புவது (Turning Of The Bones) என்று அழைக்கப்படுகிற இச்சடங்கு நடத்தப்படுகிறது.
*ஒவ்வொரு ஒற்றைப்படை வருடமும் முடிந்தால் இந்த எழுச்சியூட்டும் இரண்டாம் அடக்க முறை நிகழ்வு நடைபெறுகிறது.
*மடகாஸ்கரின் மலைப்பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளைச் சுற்றி கூடுகின்றன.
*சடலங்கள் கல்லறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு பழைய துணிகள் அகற்றப்பட்டு புதிய பட்டு ஆடைகளால் மாற்றப்படுகின்றன.
*பின்னர் இறந்தவர்களின் பெயர்கள் புதிய துணியில் எழுதப்பட்டு சடலங்களை தலைக்கு மேல் சுமந்து இசைக்கு நடனமாடி கல்லறையைச் சுற்றிவிட்டு மீண்டும் கல்லறையில் வைக்கப்படுகின்றன.
*குடும்ப உறவினர்கள் சர்ச்சைகளைத் தீர்த்து ஒன்றிணைய இவ்விழாவை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
*இறந்த நபர் வாழ்ந்த வாழ்க்கையை இசைத்து நடனமாடி கொண்டாடுவதில் நம்பிக்கையும் மகிழ்வும் கொள்கிறார்கள்.
தென் கொரிய மணிகள்
*தென் கொரியர்கள் இறந்தவரின் அஸ்தியை மணிகளாக மாற்றுகின்றனர்.
*இந்த மணிகள் இளஞ்சிவப்பு அல்லது கருப்பு வண்ணங்களை கொண்டதாக உள்ளது.
*குவளைகளுக்குள் இருக்கும் மணிகள் பின்னர் வீட்டினுள் நடு அரங்கில் அலங்காரம் செய்து வைக்கப்படுகிறது.
நோர்டிக் நீர் அடக்கம்
*நோர்டிக் நாடுகளில் இறந்தவரைத் அடக்கம் செய்யும் சடங்கில் தண்ணீர் முக்கிய இடம் வகிக்கிறது.
*தொலைதூரப் பயணத்திற்கு பாதுகாப்பாக சென்று திரும்பிவர படகுகள் உதவியதால் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கும் படகுகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
*கல்லறைகள் கப்பல்களை ஒத்ததாக கட்டப்பட்டு கப்பலின் வடிவத்தை கோடிட்டுக் காட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன.
*உயர் பதவியில் இருந்த நோர்மன்களுக்கு (Vikings) ஒரு படி மேலே சென்று அவர்கள் உண்மையான படகுகளுடன் புதைக்கப்பட்டன.
*ஒரு மலை உச்சியில் இறந்த உடல்கள் வைக்கப்படும்.
*விலங்குகள் குறிப்பாக கேரியன் பறவைகள் (Carrion Birds) அந்த இறந்த உடல்களை கொத்தி சாப்பிடும்.
ஜோரோஸ்ட்ரிய இறுதிச் சடங்கு
*டவர் ஆப் சைலன்ஸ் (Tower of Silence) என்ற வட்டமான உயர்த்தப்பட்ட கட்டமைப்பில் இறந்த உடல்கள் வைக்கப்படும்.
*கேரியன் பறவைகள் குறிப்பாக கழுகுகள் இறந்த உடல்களை கொத்தி சாப்பிடும்.
கோமஞ்சே மேடை புதைகுழி
*இறந்த உடலை போர்வையில் போர்த்தி குதிரையில் ஏற்றப்பட்டு பொருத்தமான புதைகுழியைத் தேடி சவாரி செய்வர்.
*பிறகு இறந்த உடலை குதிரையில் இருந்து கீழே இறக்கி உடலை கற்களால் மூடி அடக்கம் செய்து விட்டு சவாரி முகாமுக்கு திரும்புவர்.
*பிறகு துக்கம் கொண்டவர்கள் இறந்தவரின் உடைமைகள் அனைத்தையும் எரிப்பர்.
*முதன்மையான துக்கம் கொண்டவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்த தனது கைகளை வெட்டுவார்.
*கிறிஸ்தவ மிஷனரிகள் கோமஞ்சே மக்களிடம் இறந்தவர்களை சவப்பெட்டிகளில் புதைக்கும்படி வற்புறுத்தியதால் அதுவே இன்றைய நடைமுறை ஆயிற்று.
விவரணைகள்
Filipino Burial
South Korean Beads
Nordic Water Burial
Tibetan Sky Burial
Zoroastrian Funeral
Comanche Platform Burial
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment